search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode Protest"

    • ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
    • தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டு உள்ள மின்கட்டணத்தை குறைக்க கோரி அனைத்து வகை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மேலும் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும் நடந்தது.

    இந்நிலையில் மின் கட்டணத்தை குறைக்கக் கோரி தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

    இதன்பேரில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில், ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். மேலும், தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பரபரப்பு நேர (பீக் அவர்ஸ்) கட்டணம் திரும்பப்பெற வேண்டும்.

    சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும். "மல்டி இயர் டேரிப்" -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நிர்வாகிகள் கருப்பு அட்டை அணிந்து ஊர்வலமாக சென்று மனு வழங்கினர்.

    • ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஈரோடு:

    பா.ஜ.க.பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை சம்பவத்தை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் சூரம்பட்டி நால்ரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அய்யாசாமி முன்னிலை வகித்தார்.

    இதில் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி னார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கர் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவா ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னதுரை, மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாவட்ட தலைவர் செல்வமணி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஏ.கே.மகேஷ் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், குடோன்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் ஜவுளி உற்பத்தி செய்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று முதல் நாள் நூல் விலை உயர்வை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், குடோன்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த கடைக்கு போராட்டத்திற்கு 18 அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஜவுளி கடைகள், குடோன்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, அகில்மேடு வீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    ×