search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exam mark low"

    காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிளஸ்-1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் ரேஷ்மா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் ரேஷ்மா குறைவான மதிப்பெண் எடுத்து இருந்தார். எனவே பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ரேஷ்மா எலி மருந்து குடித்து விட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ரேஷ்மா பரிதாபமாக இறந்தார்.

    திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமகிரிப்பேட்டை அருகே பிளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நாமகிரிப்பேட்டை:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆர்.பி.காட்டுரைச்சேர்ந்தவர் கந்தசாமி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் தேவி (வயது 17). இவர் ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேவி 1,200-க்கு 552 மதிப்பெண் பெற்று இருந்தார்.

    இதனால் தேவி மனம் உடைந்தார். குறைந்த மதிப்பெண் பெற்று விட்டோமே என நினைத்து சோகத்துடன் காணப்பட்டார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
    ×