என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmer arrested"
- நிலத்தில் மாடு ஓட்டி வந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சின்னப்பன் (வயது 86), முன்னாள் ராணுவ வீரர்.
இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான பரசுராமன் என்பவர் மாடுகள் ஓட்டி வந்தார்.
இதனை தட்டிக்கேட்ட சின்னப்பனை பரசுராமன் ஆபாசமாக திட்டி எட்டி உதைத்தும், கொம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.
இதுகுறித்து சின்னப்பனின் மகன் தஞ்சான் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து, பரசுராமனை கைது செய்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செடிகளை போலீசார் பிடிங்கி அழித்தனர்
- ஜெயிலில் அடைத்தனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகேநாச் சியார் குப்பம் பகுதியில் வாழை தோப்பு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயியைபோலீசார் கைது செய்தனர்
கஞ்சா செடி வளர்ப்பு
திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 62) விவசாயி. இவர் நாகராஜ் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு வருகிறார். இந்த வாழைத் தோப்பு நடுவே கஞ்சா செடிகள் வளர்த்து வந் தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் நாகராஜனின் வாழைத் தோப்பிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வாழை தோப் பின் நடுவில் ராமன் ஏழு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிய வந் தது. உடனடியாக கஞ்சா செடிகளை பிடிங்கி போலீசார் அழித்த னர். இதன் எடை 2½ கிலோ ஆகும்.
இதையடுத்து போலீசார் ராமனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். வாழைத்தோப்பில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார்.
- மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம்கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராயன். இவர்இவரதுநிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிர்களை காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலத்தில்மணிலா அறுவடை பணிக்காக மணம்தவழ்ந்த புத்தூர்காலனியை சேர்ந்த சேட்டுமனைவி தனலட்சுமி (வயது 65) வந்தார்.அவர் அங்கிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ்சூப்பிரண்டுசபியுல்லா,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விவசாயி சுப்புராயனை கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
- விவசாய நிலங்களில் வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெரியசாமியை தேடி வந்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஒன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தின் அருகில் மற்றொரு விவசாய நிலம் உள்ளது.
அருகருகே உள்ள விவசாய நிலங்களில் வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமி (50) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று ராஜமாணிக்கம் தனது தாய் பழனியம்மாளுடன் விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த பெரியசாமி வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜமாணிக்கத்தை வெட்டினார். அவருடைய தாயார் பழனியம்மாள் தடுக்க முயன்றபோது அவரையும் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ராஜமாணிக்கம், பழனியம்மாள் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.
இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெரியசாமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் பெரியசாமி இன்று அதிகாலை போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.
- ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரகள்ளி வனச்சரகம், மல்லன்குழி வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மல்லன் குழி கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதில் இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது. பெண் யானை உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் மாதேவா அவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க அமைத்திருந்த மின் வேலியில் உயர் அழுத்தம் மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- பேரணாம்பட்டு தோட்டத்தில் சிறுத்தை சாவில் நடவடிக்கை
- பவர் பேட்டரி பாக்ஸ், ஒயர் பறிமுதல்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே உள்ள சேராங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேணுமூர்த்தி.விவசாயி. வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ளஇவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 26-ந் தேதி சுமார் 4 முதல் 5 வயதுள்ள ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி மருத்துவ குழுவினரால் அதே இடத்தில் சிறுத்தை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது.
இதன் பின்னர் மாவட்ட வன அதிகாரி (பொறுப்பு) நாகசத்தீஷ்கிடி ஜாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது சிறுத்தை மின்வேலியில் சிக்கி இறக்க வில்லை.விஷம் கலந்த உணவு என எதுவும் வயிற்றில் இல்லை. காலியாக உள்ளது.
சிறுத்தை இறந்து 3 நாட்களுக்கு மேலானதால் சரியாக எதுவும் சொல்ல முடியவில்லை.சென்னை உயர் நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் சிறுத்தையின் உடல் பாகங்கள், தடயங்களை சேகரித்து ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பின்னர் சிறுத்தையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும்.
இந்நிலையில் சிறுத்தை சடலமாக இறந்து கிடந்த விவசாயி வேணுமூர்த்தியின் பக்கத்து விவசாய நிலத்தின் உரிமையாளர்சேராங்கல் கிராமத்தை சேர்ந்த மோகன் பாபு (40) என்பவரை நேற்று மாலை திடீரென பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் பிடித்து விசாரணைக்கு வனசரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
விவசாயி மோகன் பாபு மீது தனது விவசாய நிலத்திற்கு வனத்துறை அனுமதியின்றி வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பேட்டரி மூலம் இணைப்பு கொடுத்து சைரன் சிஸ்டம் ஏற்படுத்தியதாகவும், இதனால் வன விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இறக்க வாய்ப்புள்ளதால் 1972 வன உயிரின சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும்மோகன் பாபுவிடமிருந்து பவர் பேட்டரி பாக்ஸ், சைரன், ஒயரை பறிமுதல் செய்தார்.
- வேலூர் அருகே நிலத்தகராறு காரணமாக வாலிபர் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது.
- இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிட்டனை கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்ச மந்தை அருகே உள்ள சின்ன எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 23). விவசாயி. இவருக்கும் பக்கத்து நிலத்துக்காரரான ஜமுனாமரத்தூர் அடுத்த கீழ் குச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜிட்டன் (55) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் ஆத்திரமடைந்த ஜிட்டன் நாட்டு துப்பாக்கியால் மணியை சுட்டுள்ளார். இதில் மணியின் முழங்கால் மற்றும் தொடை பகுதியில் குண்டு பாய்ந்தது.
துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த மணியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிட்டனை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஜிட்டன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம் என்பவரின் மகன் முருகன் (வயது25). இவர் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து இருந்தாராம். இவரது விண்ணப்பங்களை பரிசீலித்தபோது அவரது பெயரில் சான்றிதழ்கள் மற்றும் முகவரி ஆவணங்களை பயன்படுத்தி ஏற்கனவே பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாண்டி மகன் விவசாயி முருகன் (வயது47) என்பவர் தனது பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மேற்கண்ட முருகனின் பெற்றோரிடம் சென்று பொய்யான காரணங்களை கூறி ஏமாற்றி அவர்களின் மகன் முருகனின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளார்.
அதனை பயன்படுத்தி தனது புகைப்படத்தை ஒட்டி பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் இதுகுறித்து புகார் செய்தார்.
அவரது உத்தரவின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டி மகன் முருகன் என்பவரை கைது செய்தனர். இவர் இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடு சென்று திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூர் புதிய காலனியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 60). இவர் விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்த கணேசன் (42). என்பவருக்கு சொந்தமாக எருமணம்தாங்கலில் உள்ள நிலத்தில் குடிசை அமைத்து அங்கேயே தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.
சாமிக்கண்ணுவின் நண்பர் கார்த்திகேயன் (35). இவரும் விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அங்குள்ள விவசாய நிலத்தில் வைத்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது கார்த்திகேயனின் செல்போனை சாமிக்கண்ணு பறித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் அருகில் கிடந்த கம்பை எடுத்து சாமிக்கண்ணுவின் நெற்றியில் குத்தினார்.
இதில் ரத்தம் வழிந்து அதே இடத்தில் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் சாமிக்கண்ணு துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையறிந்ததும் கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பிணமாக கிடந்த சாமிக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கார்த்திகேயனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை அவள் பள்ளி முடிந்து வீட்டுக்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த விவசாயி ராமன், சிறுமியிடம் பேச்சு கொடுத்தார்.
பின்னர் அவர், சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியபடி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுபற்றி அவள் பெற்றோரிடம் கூறி கதறினார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அனுராதா போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தார். அவரை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சேணியாகுளிக்கரை பகுதியை சேர்ந்தவர் சீதை (வயது 65). துப்புரவு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்நத விவசாயி ரமேசுக்கும் (40) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் சீதையும், ரமேசும் ஒன்றாக அமர்ந்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சீதை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ், திடீரென சீதையை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக தெரிகிறது.
அப்போது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த 2 பெண்கள் வந்தனர். அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைநத் ரமேஷ், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இந்த சம்பவம் பற்றி வலங்கைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சீதையை கற்பழித்த ரமேசை கைது செய்தனர். தற்போது மூதாட்டி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
65 வயது மூதாட்டியை விவசாயி கற்பழித்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அப்பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அடிக்கடி நடந்து வருகிறது. மயில்களை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் (வயது 50) என்பவர் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
குத்தகை எடுத்து விவசாயம் செய்த நிலத்தில் புகுந்து மயில்கள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் நெல்லில் குருணை மருந்தை கலந்து மயில்களை கொன்றேன் என்று கைதான சந்திரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்