search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire burned"

    கிருமாம்பாக்கம் அருகே சேலையில் தீப்பிடித்ததில் உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக இறந்து போனார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டாள் (வயது71). சம்பவத்தன்று இவர் குளிப்பதற்காக வீட்டில் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்தார். அப்போது மின்கசிவு காரணமாக தீப்பொறி பறந்து ஆண்டாளின் சேலையில் பற்றியது.

    சிறிது நேரத்தில் தீமளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனால் வலியால் அலறி துடித்த ஆண்டாளை உடல் கருகிய நிலையில் அவரது மகன் இசை மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆண்டாள் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கு 2-வது நாளாக தீப்பிடித்து எரிந்தது. தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகர் பகுதியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. பின்னர் அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று தரம் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக குப்பை கிடங்கில் மலைபோன்று தேங்கி கிடக்கும் குப்பைகளை தரம்பிரிக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் கிடக்கும் குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மேற்கண்ட இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென்று பரவி குப்பை கிடங்கு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது. நேற்று 2-ம் நாளாக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த பணியை நகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) காந்திராஜன், நகராட்சி பொறியாளர் ஜோதிமணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த குப்பை கிடங்கை சுற்றி 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த புகை மண்டலத்தால் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்தால் அருகில் வீடுகளுக்கு தீப்பற்றிவிடுமோ? என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே குடியிருப்புகளுக்கு அருகே உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திண்டுக்கல் அருகே தீ விபத்தில் கணவருடன் கருகிய இளம்பெண் பலியானார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் மனைவி நாகஜோதி (வயது 24). சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது நிஷாந்த் (5), நந்தகுமார் (3)என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் காளீஸ்வரன் மற்றும் நாகஜோதி படுகாயமடைந்தனர். அருகில் இருந்த மகன் நந்தகுமாருக்கும் காயம் ஏற்பட்டது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நாகஜோதி பலியானார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×