என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "firecracker"
- பைக்கில் இருந்த பட்டாசு மூட்டை கீழே விழுந்தது.
- வெடியின் தீப்பொறி மற்ற வெடிகளுக்கு பரவியதால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது.
ஆந்திர மாநிலம், ஏலூரை சேர்ந்தவர் சுதாகர். தீபாவளி பண்டிகையொட்டி தனது நண்பர் ஒருவரை பைக்கில் அழைத்துக் கொண்டு மார்க்கெட்டிற்கு சென்றார். அங்குள்ள கடையில் வெங்காய வெடி உட்பட பட்டாசுகளை வாங்கினார்.
பின்னர் தனது நண்பருடன் பட்டாசு மூட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அங்குள்ள சாலையில் இருந்த பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியது.
பைக்கில் இருந்த பட்டாசு மூட்டை கீழே விழுந்தது. அதில் இருந்த வெங்காய வெடிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறியது. வெங்காய வெடியின் தீப்பொறி மற்ற வெடிகளுக்கு பரவியதால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இந்த விபத்தில் சுதாகர் உடல் சிதறி இறந்தார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக ஆங்காங்கே சிதறியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் பேசிக்கொண்டு இருந்த தபேலு சாய், சிவாரா ஷஷி, சீனிவாச ராவ், காதர், சுரேஷ், சதீஷ் என 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் இருக்க ஏலூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சுதாகர் பைக் ஓட்டி செல்வதும், விபத்தில் சிக்கி வெடித்து சிதறும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
OMG..??A heartbreaking CCTV footage has emerged from Andhra Pradesh where a bike carrying an 'onion' bomb exploded. In this accident, a scooter rider d!ed, while 6 people were injured. - TOI pic.twitter.com/sGirmomRpr
— Funny Tweet (@pinboy93) November 1, 2024
- பட்டாசு வெடித்ததால் பீதியடைந்த நாய் வேகமாக ஓடுகிறது.
- வாலிபர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வாலிபர் ஒருவர், தெரு நாயின் வாலில் பட்டாசை கட்டி, அதை கொளுத்தி விடுகிறார். பட்டாசு வெடித்ததால் பீதியடைந்த நாய் வேகமாக ஓடுகிறது. இந்த சம்பவத்தில் நாய்க்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாலிபர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ऐसे Hहरामियों पर सख्त से सख्त कार्रवाई की जाए इस बेजुबान प्राणी ने इस hहारामी का क्या बिगाड़ा था ??अगर इसके भी पिछवाड़े में ऐसे ही बम लगा दिया जाए तो उसको तब पता चलेगा उसका दर्दअगर यह म****** कहीं पर भी मिले इसे पुलिस के हवाले करो !!RT करो तब तक ...जब तक यह पकड़ा ना जाए ? pic.twitter.com/wDW9j1Jnz4
— Adv Jony Ambedkarwadi ?? (@TheJonyVerma) October 30, 2024
- பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது.
இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் மோடி பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஒரு பிக்கப் வேன் சேதமடைந்துள்ளது.
- திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பர்ம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல்வேறு இருசக்கர வாகனங்கள், பிக்கப் வேன், 15-க்கும் அதிக பட்டாசு கடைகள் தீயில் கருகியதாக காவல் துறை தெரிவித்து இருக்கிறது.
தீ விபத்தை ஒட்டி தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் 14 பட்டாசு கடைகள், 13 இருசக்கர வாகனங்கள், ஒரு பிக்கப் வேன் சேதமடைந்துள்ளது. தீ விபத்து காரணமாக ரூ. 15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வார சந்தை நாள் மற்றும் திங்கள் கிழமை அன்று துசு பண்டிகை வர இருப்பதை அடுத்து பொது மக்கள் அதிகம் கூடிய நிலையில், திடீர் தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
- பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.
- 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.
சென்னிமலை:
தீபாவளி என்றாலே அனைவரது நினைவிலும் முன் நிற்பது பட்டாசு தான். தீபாவளி பட்டாசுகள் பல கோடிகள் வரை விற்கப்படுகின்றன. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எதற்காக கரியாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு.
ஆனால் பணம் போனால் போகிறது என்று ரோடு நிறைய குப்பைகள் நிறைய பட்டாசுகளை வெடிப்பவர்களும் ஒரு ரகம். தனக்கென இல்லாமல் மற்றவர்களுக்குக்காக தனது மகிழ்ச்சியை தியாகம் செய்து வாழும் மக்களை காண்பதே அரிது.
மனிதர்களுக்கு உதவிடும் தன்மையே இருந்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் நினைக்கும் இந்த வேளையில் 5 அறிவு உயிரினங்களை கூட தொல்லை செய்யக்கூடாது என்று பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.
அப்படி நல் உள்ளம் படைத்தவர்கள் சென்னிமலை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்து உட்பட்ட வி.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரை வழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர், கருங்கங்காட்டு வலசு ஆகிய கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.
இப்படிதான் கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளியை இந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான். இந்த வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி உள்ளது.
அவ்வப்போது வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்லும். அமைதியை தேடி வரும் இங்கு வரும் பறவைகளுக்கு வெடி தொந்தரவாக இருக்க கூடாது என்பதற்காக இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இன்றும் தீபாவளிக்கு பட்டாசு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். ஆனால் வெள்ளோடு சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் புத்தாடை அணிந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடினர்.
சிறுவர்கள் மகிழ்ச்சிக்காக கம்பி மத்தாப்பூ, தரைச க்கரம், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தனர். இப்பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என வனத்துறை சார்பாக கிராம மக்களுக்கு வேண்டு கோளும் விடப்பட்டுருந்தது.
- பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
- சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கடைகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிருபர்க ளிடம் அவர் கூறியதாவது:-
பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் இரும்பாலை பகுதி என மொத்தம் 143 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கடைகளுக்கும் 3½ இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
விபத்து இல்லாமல் மாசற்ற வகையில் தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். அரசின் அறிவுறுத்தல் படி அனைவரும் ஒத்துழைத்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தடையி ன்மைச்சான்று பெற்று உரிமம் பெறப்பட வேண்டும்.
- விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித் துள்ளதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி அலகுகள் மற்றும் பட்டாசு விற்ப னைக்கடைகள் வெடிபொ ருள் சட்டத்தின்படி தீய ணைப்புதுறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தொழில் பாதுகா ப்புத்துறை யின் தடையி ன்மைச்சான்று பெற்று உரிமம் பெறப்பட வேண்டும்.
உரிமம் பெற்ற பின்பு உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இடத்தில் மட்டும் உரிம அளவின்படி உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருப்பு வைத்து க்கொள்ள வேண்டும். அனைத்து பாது காப்புகள் குறித்த நட வடிக்கைகளை தவறா மல் கடைபிடிக்க வேண்டும்.
உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.
உரிமம் பெறாத இடங்க ளில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கள் மேற்கொண்டு கைது செய்யப்படுவார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாத இடங்களில் மொத்தமாக பட்டாசுகள் பதுக்கிவைத்துல் இருப்பு வைத்தல் போன்றவைகள் தெரியவந்தால் பொது மக்கள் 9865437801 என்ற எண்ணில் தகவல் அளிக்க லாம்.
பொதுமக்கள் பட்டாசு பண்டில்கள், பட்டாசு கிப்டு பாக்ஸ்களை பேருந்துகள் மற்றும் ரெயில் பயணங்க ளின் போது உடன் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- வெடி விபத்து நடந்த ஆலை உரிமம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் ரகு(வயது40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆலை உரிமையாளர் ரகு மற்றும் அவரது உறவினர் முகேஷ்(20) ஆகியோர் நேற்று இரவு விதிகளை மீறி பட்டாசு ஆலை வெளியே பேன்சி ரக வெடிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கின. இந்த வெடி விபத்தில் ரகு, முகேஷ் ஆகியோர் உடல் கருகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்து நடந்த ஆலை உரிமம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வேனுடன் பட்டாசு திரிகள் பறிமுதல்- 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் செக்போஸ்ட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் விசாரித்த னர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை சோதனையிட்டனர். அதில் 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சாக்கு மூடைகள் இருந்தன. போலீசார் அவற்றை பிரித்து பார்தத போது அதில் பட்டாசு திரிகள் இருந்தன.
மொத்தம் 13 மூடைகளில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு திரிகள் இருந்தன. போலீசார் வேனுடன் அவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது வேனில் வந்தவர்கள் தாயில்பட்டி அண்ணா காலனிைய சேர்ந்த அருண்குமார் (வயது 26), கோட்டையூரை சேர்ந்த மகேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.
- தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் பட்டாசு வெடித்தும், படம் பார்க்க வந்தவர்களுக்கு டிக்கெட் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
சங்கரன்கோவில்:
தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்நிலையில் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டரில் படம் திரையிடப்பட்டது.இந் நிலையில் படம் வெளியானதை தொடர்ந்து அதை வரவேற்கும் வகையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் பட்டாசு வெடித்தும், படம் பார்க்க வந்தவர்களுக்கு டிக்கெட் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, மேலநீலித நல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட இளைஞர் அணி சரவணன், மாணவரணி அப்பாஸ்அலி, நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார், செல்வராஜ், தொண்டரணி காளிசாமி, ராமர், மகளிர் அணி செல்வராணி, வக்கீல் சதீஷ், வீரிருப்பு கிளை செயலாளர் முருகராஜ், ஜெயக்குமார், ரகுமான், பிரகாஷ், வைரவேல், திரையரங்கு மேலாளர் திருப்பதி ராஜா, முத்துநடராஜன், வன்னிக்கோனேந்தல் ஆறுமுகபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விவரங்கள் குறிப்பிடப்படாமல் பட்டாசு பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்த 42 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
- தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகர்
சென்னை, முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆனையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் திடீர் சோதனை நடத்தினர்.
சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் பொட்டலப் பொருட்களின் மேல் பொருளின் பெயர், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முழு முகவரி நிகர எண்ணம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (வரிகள் உட்பட) பொட்டலமிட்ட தயாரித்த மாதம், வருடம், நுகர்வோர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமாக குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யவேண்டும்.
அவ்வாறு சட்டவிதிகளி ன்படி பட்டாசு பொட்ட லங்களில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 42 வியாபாரிகளின் பட்டாசு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது.
பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் பொட்டலப் பொருட்களின் மேல் உரிய விவரங்கள் குறிப்பிடப்படாத வணிகர்கள் மீது முதலாவது குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் முறை குற்றத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், அதற்கு மேற்பட்ட குற்றத்திற்கு ரூ.1 லட்சம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
இந்த சோதனையில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக ஆட்சி எல்லைக்கு உட்பட்ட விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் தொழிலாளர் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் பாத்திமா, செல்வராஜ், தயாநிதி முருகன், சிவசங்கரி, துர்கா மற்றும் உமா மகேஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டனர்.
இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்தார்.
- அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- 50 ஷாட் வெடி, 4 இருசக்கர வாகனம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி, தொழிலக பாதுகாப்பு துறை சித்ரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாக ஆய்வுக்குழு பொன்ராஜ் ஆகியோர் நாட்டார்மங்கலம் என்ற இடத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசு ஆலை செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடம் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கு பட்டாசு உற்பத்தி செய்வது தெரியவந்தது. மேலும் 7 மூட்டை கரி மருந்து, 5 கிலோ மணி மருந்து, 50 ஷாட் வெடி, 4 இருசக்கர வாகனம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராவணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்