search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "firecrackers"

    • தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம்.
    • நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்

    இந்தாண்டு அக்டோபர் 31 அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.

    தீபாவளி அன்று தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆதலால் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த தவறிய மாநில அரசு மற்றும் காவல்துறை இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.

    இந்நிலையில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி போலீஸ் சார்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் பட்டாசு வெடிப்பதையும் விற்பனை செய்வதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை டெல்லி போலீஸ் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    மேலும், "எந்த மதமும் மாசுபடுத்தும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை. பேஷனுக்காக பட்டாசு வெடிப்பதாக கூறினால்.. அது பொதுமக்களின் அடிப்படை உரிமையான ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆகவே நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • பட்டாசு மீது அமர்ந்து இருப்பவருக்கு ஆட்டோ வாங்கி தருவதாக பந்தயம் காட்டியுள்ளனர்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சபரீஷ் நவம்பர் 2ம் தேதி உயிரிழந்தார்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சபரீஷ் (32) மற்றும் அவரது நண்பர்கள் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை மதுபோதையில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

    அப்போது சக்திவாய்ந்த பட்டாசு மீது வெடிக்கும்வரை யார் அமர்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆட்டோ ரிக்சா வாங்கி தருவதாக சபரீஷீன் நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.

    எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த சபரீஷ், ஆட்டோ ரிக்சா கிடைக்கும் என்ற ஆசையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

    பெரிய பட்டாசு பெட்டியில் சபரீஷ் அமர்ந்துள்ளார். அவரது நண்பர்கள் பட்டாசை பற்றவைத்து விட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். பின்னர் அதீத சத்தத்துடன் பட்டாசு வெடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சபரீஷை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சபரீஷ் நவம்பர் 2ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பைக்கில் சென்ற இளைஞர்கள் மதுபோதையில் பட்டாசை கொளுத்தி சாலையில் வீசியபடி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆதித்யா (19) மற்றும் அக்ஷய் குமார் (18) என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர். 

    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    நாடு முழுவதும் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    பொது மக்கள் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் அரசு தரப்பில் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம்.

    இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

    தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, காலை 6- 7 மணி மற்றும் இரவு 7 - 8 மணி வரை, குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம்/ உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களு்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    • பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் வெடி விபத்து.
    • 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த வெடி விபத்தில், ஜெயராமன் படுகாயங்களுடன் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டம், சேலம் வட்டம், குப்பனூர் கிராமம், வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று (4-9-2024) காலை 10 மணியளவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் (பெய்து 55) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும் இவ்விபத்தில் சேலம் வட்டம் சின்னலூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) மற்றும் சிவகாசியை சேர்ந்த முத்துராஜா (வயது 47) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.

    • ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்ற 5 வயது சிறுவன் பட்டாசு மீது டம்ளரை வைத்து வெடித்துள்ளார்.
    • மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய சிறுவன், பட்டாசு வெடித்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்ற 5 வயது சிறுவன் பட்டாசு மீது டம்ளரை வைத்து வெடித்துள்ளார். அப்போது டம்ளர் வெடித்து சிதறியதில், அதன் துகள்கள் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த சிறுவனின் வயிற்றில் குத்தியது.

    இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கோஹல்பூர் காவல் நிலைய அதிகாரி பிரதிக்ஷா மார்கோ தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக அப்பகுதி சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதை குழந்தைகள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த சோகமான விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    • புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம்.
    • சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு.

    சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில், ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்தபோது பட்டாசு வெடித்து சிதறியது.

    திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்துள்ளார். புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    பட்டாசு வெடித்ததில் காவல் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து மியாமத்துல்லா உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரத்தை தொடர்ந்து, சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • படு காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    நாடு முழுவதும் தீபா வளி பண்டிகை நேற்று உற்சா கமாக கொண்டா டப்பட்டது. தீபாவளி பண்டிகையை யொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    அதனையும் மீறி பாதுகாப்பின்றி பட்டாசு வெடித்து பலர் காயம் அடைந்துள்ளனர். கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் ஆதர்ஸ் வித்யாதரன் (வயது 12). 6-ம் வகுப்பு மாணவர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி இவர் தனது வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் ஒரு பட்டாசை பற்ற வைத்தார். அது வெடி க்கவில்லை. இதனையடுத்து ஆதர்ஸ் வித்யாதரன் அருகே சென்று பார்த்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசு வெடித்தது.

    இதில் சிறுவனின் வலது கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவை துண்டானது. இதில் படு காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறா ர்கள். இது குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பட்டாசு வெடித்து வீட்டின் மேற்கூரை-தென்னை மரம் எரிந்து சாம்பல்
    • பெரியார் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட் டது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையி லும் அதை கண்டுகொள் ளாமல் பொதுமக்கள் பட் டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் மதுரை பைபாஸ் நேரு நகர் பகுதி யில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப் போது ராக்கெட் பட்டாசு ஒன்று அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையில் பட்டதில் மளமளவென தீ பரவியது. இது குறித்து பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

    அதன்பேரில் நிலைய அதிகாரிகள் எஸ்.எஸ்.ஓ. பாலமுருகன், ஏ.டி.ஓ. சுரேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இத னால் உயிர்சேதம் ஏற்படு வது தவிர்க்கப்பட்டது.

    அதேபோன்று டி.வி.எஸ். நகர் பகுதியில் வெடித்த பட்டாசுகளால் அப்பகுதியில் இருந்த தென்னை மரத்தில் தீப்பிடித்தது. பெரி யார் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆதறவற்றோர், முதியோர்களுக்கு

    தீபாவளியையொட்டி அன்பு உறவுகள் குழு சார்பில் திருநகரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லம், பைக்கா ராவில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் மற்றும் காளவாசல், பெரியார் உள்ளிட்ட பல்வேறு சாலையோ ரத்தில் வசிப்பவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு களை நவீன் கண்ணன், தீபன் சக்ரவர்த்தி, சரவணன் உள்ளிட்ட அன்பு உறவுகள் குழு உறுப்பினர்கள் வழங்கினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி கொண்டாட்டம் இரவு முதல் தொடங்குவதால் பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இன்று இரவு முதல் தொடங்குகிறது. தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டம் இரவு முதல் தொடங்குவதால் பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள 102 போலீஸ் நிலையங்களிலும் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் அடங்கிய குழு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதால் இடையூறாக இருப்பதாக யாராவது புகார் செய்தால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • பள்ளித்தலைவர் இருதயமேரி வரவேற்று பேசினார். தாளாளர் இராஜராஜன் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல் நிலைப் பள்ளியில் மாணவ-மாணவியருக்கு தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    சுற்றுசூழல் மற்றும் வன அமைச்சகத்தின் வழி நடத்துதலின் படி மாணவர்களுக்கு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற செய்தி அறியுறுத்தப்பட்டது.

    பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும் என்று வலியுறுத்தப்பட்டது. பள்ளி முதல்வர் நீலம் அருள்செல்வி சிறப்புரையாற்றினார். பாகூர் தீயணைப் நிலையத்தி லிருந்து வீரர்கள் நகேஷ்வரராவ், ராஜவேலு மற்றும் பாலசந்தர் கலந்துகொண்டு, பட்டாசு வெடிக்கும் போது செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை எவை என்று எடுத்துரைத்தனர்.

    பள்ளித்தலைவர் இருதயமேரி வரவேற்று பேசினார். தாளாளர் இராஜராஜன் முன்னிலை வகித்தார்.

    துணை முதல்வர் அன்புசெல்வி மாணவர் களை தீபாவளி உறுதிமொழி எடுக்கச்செய்தார்.

    • பட்டாசு தொழிற்சாலை, பட்டாசு குடோன் மற்றும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தீ விபத்தை தடுக்கும் பாதுகாப்பு உபகர ணங்களை வைத்திருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் அடுத்தடுத்து பட்டாசு தொழிற்சாலை களில் விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழந்தனர்.

    இதையடுத்து புதுவை முழுவதும் பட்டாசு தொழிற்சாலை, பட்டாசு குடோன் மற்றும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி பாகூர் மாஞ்சாலை சாலையில் உள்ள பட்டாசு குடோனில் பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் தமிழ ரசன் மற்றும் போலீசார் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் பட்டாசு கடைகளின் உரிமம், வெடிமருந்து இருப்பு, விற்பனை செய்த ரசீது ஊழியர்கள் விபரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    அப்போது, பட்டாசு கடை நடத்துபவர்கள் புதுவை அரசு அறிவித்துள்ள பாதுகாப்புவழி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும். தீ விபத்தை தடுக்கும் பாதுகாப்பு உபகர ணங்களை வைத்திருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

    ×