search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flush jewellery"

    திண்டுக்கல்லில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன். அவரது மனைவி சாவித்திரி (வயது 60). இவர் தினசரி அதிகாலை நேரத்தில் வாக்கிங் சென்று வருவது வழக்கம்.

    அதன்படி இன்று சாவித்திரி வாக்கிங் சென்றார். ஏ.எம்.சி. சாலையில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் வந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் சாவித்திரி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

    அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து நகர் வடக்கு பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    ஸ்ரீரங்கத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.
    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி வைதேகி (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள தேடுதல் பராமரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 

    வீட்டின் அருகிலேயே வேலை செய்யும் இடம் என்பதால் நடந்து சென்று வருவது வழக்கம். நேற்று இரவு வேலை முடிந்த பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பெரியார் நகர் பகுதியில் வைதேகி நடந்து வரும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். 

    அந்த நேரம் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாததால் வைதேகியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து வைதேகி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து  மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
    பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து விட்டு வாலிபர் வாய்க்காலில் குதித்து தப்பி ஓடி விட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆம்பூர் சாலையில் ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மது பார் அருகில் நடந்து வந்தபோது பின்புறம் இருந்து வந்த வாலிபர் அந்த பெண் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினார்.

    இதைக்கண்ட அந்த பெண் கூச்சலிட்டபடி அவரை துரத்தினார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டி சென்றனர்.

    அந்த வாலிபர் ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை நடுவே உள்ள வாய்க்காலில் குதித்து ஓடிவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களில் சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பெரியவாய்க்காலில் இறங்கி வாலிபரை தேடினார். ஆனால், அந்த வாலிபர் வாய்க்காலின் வேறு வழியே தப்பி சென்று விட்டார்.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் இருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×