search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flyover opening"

    • மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
    • திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வாகனங்கள் வருவதால் நகரப் பகுதியில் குறிப்பாக பஸ் நிலையத்தில் இருந்து மலை அடிவாரம் வரை நெரிசல் ஏற்படுகிறது.

    இதனை தடுக்க திருப்பதி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.650 கோடி செலவில் ஸ்ரீனிவாச சேது என்ற பெயரில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஆட்சி மாறியதும் மறு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது.

    தற்போது ரூ.650 கோடி செலவில் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது. இதனை ஆந்திர முதல்- அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

    நாளை முதல் பொதுமக்கள் மேம்பாலத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர். திருப்பதி பஸ் நிலையத்தில் தொடங்கும் இந்த மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    இதன் மூலம் பக்தர்கள் எளிதில் கோவிலுக்கு சென்று வரலாம் இது குறித்து திருப்பதி மாநகராட்சி மேயர் சிரிஷா கூறுகையில்

    தினமும் ஒரு லட்சம் பக்தர்களும் உள்ளூர்வாசிகளும் இந்த மேம்பாலத்தை பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம் திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.

    இந்த மேம்பாலம் திருப்பதி நகருக்கே பெருமையை தேடி தரப் போகிறது என்றார். 

    • நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நத்தம் சாலையில் ஊமச்சிக்குளம் செல்ல கோகலே ரோடு வழியாக விஷால்மால் முன்புள்ள பாலத்தில் ஏறி செல்ல வேண்டும். அய்யர் பங்களா, திருப்பாலை, ஊமச்சிகுளம் செல்லும் வாகனங்கள், இந்த மேம்பாலம் வழியாக சென்று 2.5 கி.மீ தொலைவில் உள்ள இறங்குபாதை வழியாக பேங்க் காலனி சந்திப்பை அடையலாம்.

    நத்தம் சாலையில் ஐ.ஓ.சி சந்திப்பு, பீ.பீ.குளம், தபால் தந்தி நகர், எஸ்.பி. பங்களா சந்திப்பு, ரிசர்வ் லைன், ஆத்திகுளம், நாராயணபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள், பாலத்தின் மீது ஏறாமல் இடதுபுறம் உள்ள சாலை வழியாக விஷால்மால், ஐ.ஓ.சி ரவுண்டானா வழியாக பாலத்தின்கீழ் செல்லலாம்.

    அழகர்கோவில், புதூர், மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர், மாட்டுத்தாவணி, வழியாக செல்லும் சிறிய வாகனங்கள் நவநீத கிருஷ்ணன் கோவில் சாலை, பழைய அக்ரகாரம் தெரு, அப்துல் கபார்கான் சாலை, லாலா லஜபதிராய் சாலைகளை பயன்படுத்தி, பி.டி.ஆர்.சிலை வழியாக பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் செல்ல வேண்டும்.

    மாட்டுத்தாவணி, கே.கே.நகர், டாக்டர் தங்கராஜ் சாலை வழியாக வரும் வாகனங்கள் கக்கன் சிலை சந்திப்பில் வலதுபுறம் செல்லக்கூடாது. மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரும்பி செல்லும் வசதியை பயன்படுத்தி ரேஸ்கோர்ஸ் வழியாக அழகர்கோவில் சாலையை அடையலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×