search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Folk arts"

    • திருக்குறுங்குடி நம்பிதோப்பில் களக்காடு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகம் சார்பில் படிப்பகம், சூழல் இளையோர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.
    • களக்காடு புலிகள் காப்பக சூழல்மேம்பாட்டு அதிகாரியும், துணை வன பாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி படிப்பகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்

    களக்காடு:

    திருக்குறுங்குடி நம்பிதோப்பில் களக்காடு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகம் சார்பில் படிப்பகம், சூழல் இளையோர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.

    களக்காடு புலிகள் காப்பக சூழல்மேம்பாட்டு அதிகாரியும், துணை வன பாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி படிப்பகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து தையல் அழகு கலை பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ்களையும், கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற லெவிஞ்சி புரம், நம்பி தலைவன் பட்டயம் அணிகளுக்கு பரிசுகளும், கோப்பை களும், வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கினார்.

    அதனைதொடர்ந்து அவர் பேசியதாவது:-

    சூழல் கோட்டத்தில் 653 கிராம வனக்குழுக்களும், 16 ஆயிரம் உறுப்பினர்களும், 20 கோடி நிதியும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிப்பது துறை சார்ந்த படிப்பு களாகத்தான் இருக்கும், அதை முழுமையாக்குவது புத்தகங்கள்தான். அதற்காகத்தான் கிராமங்கள் தோறும் படிப்பகத்தை அமைத்து வருகிறோம்.

    வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூழல் இளையோர் விளையாட்டு குழு வீரர்கள் இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் களக்காடு புலிகள் காப்பக லோகோவுடன் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்படும். மறந்து போன நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக நெல்லை தனியார் கல்லூரி நாட்டார் வழக்காடு குழு சார்பில், சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு நாட்டுப்புற பாட்டு, நாட்டு புற விளையாட்டு, நாட்டுபுற கலைகள் குறித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் நெல்லை அரும்புகள் அறக்கட்டளை இயக்குனர் ராஜ மதிவாணன், திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர் இசக்கித்தாய், சூழல் திட்ட வனசரகர்கள் திருக்குறுங்குடி யோகேஸ்வரன், களக்காடு பிரபாகரன், அம்பை முகுந்தன், வனவர்கள் அப்துல் ரஹ்மான், சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர் சுகன் யா, கிராம வனக் குழு தலை வர்கள் கவிதா, அய்யம்மாள், பால சுப்பிர மணியன், பொ ன்னி வளவன். முன்னாள் வனக்குழு தலைவர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இளைய தலைமுறை சாதிக்க நாட்டுப்புறக் கலைகள் உதவும் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். #TNMinister #Pandiarajan
    மதுரை:

    மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் இளந்தமிழர் இலக்கிய பட்டறையின் 7-ம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது.

    தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் இதில் பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் இளைஞர்கள் எழுச்சி பெறவே இளந்தமிழர் இலக்கிய பட்டறை உருவாக்கப்பட்டுள்ளது. நாம் இறந்தபின் என்ன விட்டுச்சென்றோம் என்பது முக்கியமல்ல. இருக்கும் போது என்ன செய்தோம், சாதித்துள்ளோம் என்பது தான் முக்கியம்.

    இளந்தமிழர் இலக்கிய பட்டறை வாயிலாக இளைய தலைமுறையினர் திறன் மேம்பட்டு இருக்கும். பேச்சு, பழகும் திறன், புரிதல் தன்மை, கேட்கும் திறன் ஆகியவையும் மேம்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

    தமிழ் பெண் சாந்தி என்பவர் பழங்கால பொருட்களின் ஆயுட்கால வயதை கண்டறியும் வகையில் ஒளி சார்ந்த பகுத்தாய்வு என்கிற கண்டுபிடிப்பை உருவாக்கி உலக அளவில் சாதித்துள்ளார் என்பது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயம்.

    இளந்தமிழர் இலக்கிய பட்டறை மூலம் தப்பாட்டம், கும்பாட்டம் உள்ளிட்ட 10 கலைகள் காண்பிக்கப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஒன்றை பழகும் அனுபவம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இளைய தலைமுறையினருக்கு நாட்டுப்புறக்கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    இதன் வாயிலாக இந்த பிரிவை சேர்ந்தவர்கள்தான் இந்த கலைகளை நிகழ்த்த வேண்டும் என்ற சாதி, மத தடைகளை தாண்டி இளைய தலைமுறை சாதிக்க நாட்டுப்புறக்கலைகள் உதவும்.

    அமெரிக்காவில் தமிழர் கூட்டமைப்பு சார்பில் அங்குள்ள இளைய தலைமுறையினருக்கு நாட்டுப்புறக்கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். “அதோ அந்த பறவை” பாடலில் பண்டைய இசைக் கருவியான ‘யாழ்’ கருவியை காண்பித்திருப்பார்.

    உலக புகழ்பெற்ற திரைப்படம் வாயிலாக தமிழர்களின் நாட்டுப்புற கலை ஒன்றை உலகம் முழுவதும் பிரபலபடுத்தியது எம்.ஜி.ஆரின் சீரிய சிந்தனை.


    இளைய தலைமுறையினர் தமிழ் மொழி, கலை பண்பாட்டுடன் சேர்ந்து செயல்படும்போது அவர்களின் பார்வை மாறுபடும். அப்போதுதான் நாம் தமிழர் என்ற கர்வத்தோடு தமிழில் கையெழுத்திடும்போது பெருமையாக இருக்கும். தமிழ் இணைய கழக இணையதளத்தில் பிரத்யேக ‘ஆப்’ ஒன்றை உருவாக்கி இளந்தமிழர் இலக்கிய பட்டறையினர் தங்களது படைப்புகளை பதிவிட வேண்டும். நானும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

    தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களில் 33 ஆயிரம் பேர் தமிழ் வளர்ச்சி வாரியத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக ஒரு லட்சம் பேரை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளந்தமிழர் இலக்கிய பட்டறையின் அடுத்த நிகழ்வு தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும். நாட்டுப்புற கலைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் தமிழக பட்ஜெட்டில் தமிழ் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கிராம புறங்களில் தமிழ் சோறுபோடுமா என்ற சொலவடை உண்டு. ஆனால் இன்றைக்கு தமிழ் சோறு மட்டுமல்ல அதற்கு மேலும் போடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலைராஜா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விழாவிற்கு வந்த அமைச்சர் பாண்டிய ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் பழங்கால வரலாற்று ஆய்வு நடந்து வருகிறது. இதில் போதிய அளவுக்கு பழங்கால சின்னங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. 4-ம் கட்ட அகழாய்வு பணி வருகிற செப்டம்பர் மாதத்தோடு நிறைவு பெறும். தேவைப்பட்டால் 5-ம் கட்ட அகழாய்வும் நடைபெறும்.

    கீழடியில் கண்டு பிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களின் மூலம் அருங்காட்சியகம் அமைக்கப்படும். உலக தமிழ் சங்கத்தில் ரூ.50 கோடி மதிப்பில் ஐந்தினை பூங்கா அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இதுநிறைவுபெறும். இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார். #TNMinister #Pandiarajan
    ×