search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free bus pass"

    • கர்ப்பிணி பெண்ணிற்கு பேருந்திலேயே செவிலியர் பிரசவம் பார்த்தார்.
    • செவிலியருக்கு ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் அண்ணனுக்கு ராக்கி கட்ட வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணி ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது.

    அப்போது பேருந்தில் பயணித்த ஒரு செவிலியர் நடத்துநர் பாரதியுடன் இணைந்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தாய் மற்றும் பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிய வந்தது.

    இந்நிலையில், பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் வகையில் இலவச பயண பாஸ் ஒன்றை தெலங்கானா அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கியுள்ளது.

    பிரசவத்திற்கு உதவிய செவிலியர் அலிவேலு மங்கமாவுக்கும் ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வரும் 6-ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
    • மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    பள்ளிகள் திறக்கும் நாளிலேயே இலவச நோட்டு, பாடப்புத்தகங்களை வழங்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

    இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்றைய தினமே மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாமா அல்லது புதிய பாஸ் தரும் வரை டிக்கெட் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்து போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு பஸ்களில் மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்க மாட்டோம். பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம். அவர்கள் சீருடை அணிந்து இருந்தாலே இலவசமாக பயணிக்கலாம். இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக கல்வித்துறையில் இருந்து மாணவர்களின் விவரங்கள் பெற்று, ஆன்லைன் மூலம் புதிய பாஸ் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • அதிகாரி தகவல்
    • விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 31 பள்ளிகளைச் சேர்ந்த 6,418 மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) வேலூர் மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்துக் கழகத்தின் வேலூர் மண்டலத்தின் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 620 அரசு, தனியார் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ. ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

    இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் 2-ம் கட்டமாக 31 பள்ளிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட 6,418 பஸ் பாஸ் பெறப்பட்டு, சம்ப ந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கி, மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவ-மாணவிகள் 22,985 பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
    • கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன் பெறலாம்.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கட்டண மில்லா பயணம் செய்வதற்கு ஏதுவாக சிவ கங்கை மாவட்டத்தில் 13,061 மாணவ, மாணவி களுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,924 மாணவ, மாணவி களுக்கும் மொத்தம் 22,985 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான கட்டணமில்லா பேருந்து அட்டைகள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் மன்னர் மேல்நிலைப் பள்ளி யில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மாணவ மாணவி களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டைகளை வழங்கினார். ஏனைய பள்ளிகளில் காரைக்குடி மண்டலத்தில் உள்ள 2 கோட்ட மேலாளர்கள், 11 கிளை மேலாளர்கள் மூலம் பள்ளி மாணவ, மாணவி களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டது.

    மேலும் இது நாள் வரை கட்டணமில்லா பேருந்து பயண அட்டைக்கு விண் ணப்பிக்காத மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து கட்டண மில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன் பெறுமாறு மாணவ, மாணவிகளுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி குரும்பலூர் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி காலை, மதியம் என 2 சுழற்சி முறையில் இயங்குகிறது. காலையில் கலை பாடப்பிரிவுகளுக்கும், மதியம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த கல்லூரியில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த கல்வி ஆண்டில் கல்லூரி திறந்து இதுவரை, அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட வில்லையாம். பழைய பஸ் பாஸ் காண்பித்தும், அரசு பஸ்சில் பயணம் செய்ய முடியவில்லை. இதனால் கல்லூரிக்கு பஸ்சில் வந்து, செல்லும் போக்குவரத்து செலவுக்கு அதிக தொகை செலவாகிறது. இதனால் ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் குடும்பமும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் நேற்று மதியம் 12.30 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மதியம் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளும் மறியலில் கலந்து கொண்டனர். அப்போது மழை தூறிக்கொண்டு இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் பெரம்பலூர்-துறையூர் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் இலவச பஸ் பாஸ் உடனடியாக வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் கல்லூரி முதல்வர் மனோகரன், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார், கல்லூரி முதல்வர், போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோர் மாணவ, மாணவிகளிடம் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை கல்லூரி அடையாள அட்டையை பயன்படுத்தி அரசு பஸ்சில் அனுமதிக்கப்பட்டுள்ள கிலோமீட்டர் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மதியம் சுமார் 2.30 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். 
    இலவச பஸ் பாஸ் வழங்க கோரி தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவ - மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசுகலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் அரவிந்த் தலைமையில் சரபோஜி கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர்.

    பின்னர் அவர்கள் கல்லூரி அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் தஞ்சை நகர டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாணவர்கள் எங்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் கல்லூரி செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் இலவச பஸ் பாஸ் கேட்டு பல முறை மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளோம். இருந்தும் பஸ் பாஸ் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். புதிய பஸ் நிலையம் பகுதியில் மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×