search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang attacked"

    • அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வந்தனர்.
    • கும்பலில் ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து இசக்கிதுரையின் தலையில் பலமாக தாக்கினார்.

    கோவை,

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் இசக்கிதுரை (வயது 32). இவர் கோவை போத்தனூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து நிறுவனத்தின் அருகே அறை எடுத்து தங்கி உள்ளார்.

    இந்த நிலையில், அவர் போத்தனூர் ரெயில்வே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் இசக்கிதுரையிடம் இப்போது மணி என்ன ஆகிறது? என கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தீட்டினர். பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் அந்த கும்பலில் ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து இசக்கிதுரையின் தலையில் பலமாக தாக்கினார். இதில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அவர் கூச்சலிட்டதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த அவர் தனது நண்பரை அழைத்து கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பொது இடத்தில் 4 பேர் கொண்ட கும்பல் வாலிபரை கல்லால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கூட்டமாக இருந்ததாலும், ஊழியர்கள் பற்றாக்குறை யாலும் வாகனங்களுக்கு பெட்ரோல் போட கால தாமதமானது.
    • ஆத்திரமடைந்த கும்பல் ஊழியர்களை சரமாரியாக தாக்கியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கொடைரோடு மாவுத்த ம்பட்டியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30). இவர் கொரடை ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் வந்தார். அப்போது அங்கு கூட்டமாக இருந்ததாலும், ஊழியர்கள் பற்றாக்குறை யாலும் வாகனங்களுக்கு பெட்ரோல் போட கால தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் பங்க் ஊழியர் எடிசனிடம் எனக்கு ஏன் சீக்கிரம் பெட்ரோல் போடவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடு பட்டார்.

    பின்னர் சரமாரியாக எடிசனை தாக்கினார். இதை தடுக்க வந்த மற்றொரு ஊழியர் கிறிஸ்டோபரும் தாக்கப்பட்டார். அதிலும் ஆத்திரம் அடங்கhமல் தனது நண்பர்களான திலீப், சந்தோஷ் ஆகிேயாரை செல்போன் மூலம் அழைத்து எடிசன் மற்றும் கிறிஸ்டோபரை கும்பல் கடுமையாக தாக்கியது.

    இதில் காயமடைந்த அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் திலீப் மற்றும் சந்ேதாசை பிடித்து விசா ரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.

    • வாலிபர்களை கத்தியை காட்டி மிரட்டி தாக்கி செல்போன், உதிரி பாகங்கள் ஆகியவற்றை பறித்து கொண்டனர்.
    • புகாரின்பேரில் போலீசார் 2 பேரை கைது செய்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலை முக்குடில் பகுதிைய சேர்ந்தவர் அருண்திவாகரன்(31). இவர் ராஜாகாட்டில் கண்காணிப்பு காமிரா மற்றும் கணினி கடை வைத்துள்ளார். கோவையில் இருந்து தேனிக்கு தனியார் டிராவல்ஸ் மூலம் வந்த பார்சலை எடுப்பதற்காக தனது நண்பர் சைலத் என்பவருடன் காரில் வந்தார்.

    பொருட்களை எடுத்துக்கொண்டு காரில் ஊர்திரும்பி கொண்டிருந்தபோது பழனிசெட்டிபட்டி தனியார் மில் அருகே காரில் முன்பக்க டயர் வெடித்தது. இதனைதொடர்ந்து பஞ்சர்ஒட்டுவதற்காக அப்பகுதியில் சுற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஆட்ேடா டிரைவர் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாக கூறி 2 பேரையும் ஆட்ேடாவில் அழைத்து சென்றுள்ளார்.

    திடீரென கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர். அவர்களிடம் இருந்து செல்போன், உதிரி பாகங்கள் ஆகியவற்றை பறித்து கொண்டனர். மேலும் ஏ.டி.எம். மையத்திற்கு அழைத்து சென்றுபணம் எடுத்து தருமாறு மிரட்டினர். அப்போது ஆட்கள் வரவே அவர்களை விட்டுவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கவுதம்காம்பீர்(18), கதிரேசன்(19) என தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பெரியகுளம் அருகே தந்தை, மகளை தாக்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் ராஜூ மகள் இந்திராணி (வயது 58). ராஜூவுக்கு அதே பகுதியில் வயல் மற்றும் வீட்டடி நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியை இந்திராணி தனது சகோதரர் பரமசிவத்துக்கு கொடுக்க விரும்பினார்.

    ஆனால் பரமசிவம் குடும்பத்தினர் முழுவதும் தங்களுக்கு வேண்டும் என தகராறு செய்தனர். சம்பவத்தன்று ராஜூ மற்றும் இந்திராணியை அந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தந்தை மகளை தாக்கிய பரமசிவம் மகன் சோமசுந்தரம், பழனியம்மாள், ஜெயமணி, இந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் பெரியகுளம் காந்தி நகரைச் சேர்ந்தவர் முருகபாண்டி (24). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று வடுகபட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பையா என்பவர் இவரது ஆட்டோவில் சென்றுள்ளார்.

    ஆனால் பணம் தராமல் முருகபாண்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.

    ×