என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja"

    • படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 25). இவர் அதே பகுதியில் தங்கி குளிர்பானக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார்.

    அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ள சென்றதுடன், அங்கிருந்த அரவிந்தனை அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் அவரது தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை முருகேசன் தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததும் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் ரத்த காயங்களுடன் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் . அப்போது இருவரையும் அரிவாளால் வெட்டியது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி , ஆகாஷ் , ஸ்டீபன் ராஜ், ஆதி, லலித்குமார் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    அரவிந்தன் இடுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அரவிந்தனை கொலை செய்யும் நோக்கில் இது போன்ற செயலில் 5 பேர் கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    • போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் குறிப்பிட்ட குடிசை வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

    மும்பை:

    மும்பை பாந்திரா கே.சி. சாலையில் உள்ள குடிசை பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட குடிசை வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 286 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.71 லட்சத்து 68 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த இம்ரான் கமாலூதீன் அன்சாரி(வயது36) என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை ரெயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பயணிகளை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மதுரை ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடக்கூடிய பயணிகளிடம் ரெயில்வே மற்றும் இருப்புபாதை போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக மதுரை ரெயில் நிலையத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து வரக்கூடிய ரெயில்களில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை அவ்வப்போது கடத்தி வருவதால், ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய ரெயிலில் வரும் பயணிகள் மற்றும் சந்தேகப்படும்படியாக வருபவர்களை விசாரித்து அனுப்புகின்றனர்.

    ெரயில்களில் பயணிகள் மூலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை ரெயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

    இதனையடுத்து மேற்குவங்க மாநிலம் புருளியா-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தபோது கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பயணிகளை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.

    அப்போது அவர்களது கைப்பைகளில் சுமார் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து மூன்று பேரையும் ரெயில்வே இருப்புப் பாதை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த டேவிட் ராஜா (வயது 20), அஜித் குமார் (30) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தனர் என்று விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடத்தி வரப்பட்டு அவை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து சில்லறையாக விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

    கைதான 3 பேரும் கஞ்சா பொட்டலங்களை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்த பின்னணி தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
    • போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாகவும், சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் அதிரடியாக தனியார் தங்கும் விடுதியில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த பால கோலானு விஷ்ணுவர்த ரெட்டி என்பவரின் ஆதார் அடையாள அட்டையை கொடுத்து இந்த தனியார் தங்கும் விடுதியில் 2 கார்களில் வந்த 5 பேர் தங்கியுள்ளது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர்.

    மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தங்கும் விடுதிக்குள் சென்ற போது, 5 பேரை அழைத்துச் செல்வதற்காக வந்த நபர் அங்கிருந்து தப்பி விடுதியின் கேட்டில் ஏறி சாலையில் ஓடிவிட்டார்.

    அவரை பின்தொடர்ந்து போலீசார் ஒருவரும் விரட்டி பிடிக்க முயற்சி செய்கிறார். இந்த சி.சி.டி.வி. காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கஞ்சா முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் வழியாக படகு மூலமாகவும் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து படகுகள் மூலமாகவும் இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிகிறது.

    மேலும் இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த இந்த நபர்களிடமிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சாவை பெற்று இலங்கைக்கு அனுப்பி இருக்கலாம் என்கிறரீதியிலும் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரிடம் தனியார் தங்கும் விடுதியில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா தொடர்ந்து எவ்வாறு பல சோதனை சாவடிகளை கடந்து எடுத்து வரப்படுகிறது என்பது குறித்தும் இதுவரை இந்த கும்பல் எத்தனை முறை இதே போன்று இலங்கைக்கு கஞ்சா கடத்தி இருக்கிறது என்பது குறித்தும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று திருவாரூர் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அனுமதியோடு மாணவர்கள் விடுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
    • போலீசார் 3 பயிற்சி டாக்டர்களை கைது செய்து விசாரித்தனர்.

    சென்னை:

    சென்னை போலீசில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், உளவுப்பிரிவு இணை கமிஷனர் தர்மராஜனின் நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் இந்த தனிப்படை போலீசாரும், கோட்டூர்புரம் போலீசாரும் இணைந்து உயர்ரக கிரீன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆங்கிலோ இந்தியரான சைதாப்பேட்டை சின்னமலை பகுதியைச் சேர்ந்த ரோட்னி ரொட்ரிகோ (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து1¼ கிலோ கிரீன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களுக்கு கிரீன் கஞ்சா விற்றதும், அந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அனுமதியோடு மாணவர்கள் விடுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் பயிற்சி டாக்டர்கள் தருண், ஜெயந்த், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய 3 பேர் தங்கியிருந்த அறையில் இருந்து கஞ்சா, வலி நிவாரணத்துக்காகவும், போதைக்காகவும் பயன்படுத்தப்படும் 4 கேட்டமைன் போதைப்பொருள் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீசார், 3 பயிற்சி டாக்டர்களையும் கைது செய்து விசாரித்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெறுகிறது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • வி.கைகாட்டி பஸ் நிறுத்த நிழற்குடை அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசார் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வி.கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வி.கைகாட்டி பஸ் நிறுத்த நிழற்குடை அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள், வி.கைகாட்டியை சேர்ந்த அருள்மணி(வயது 28), வைப்பம் கிராமத்தை சேர்ந்த நித்தியானந்தம்(26), விக்கிரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த சவுந்தர்ராஜன்(24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனை செய்தபோது, விற்பனைக்காக அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தலா மூன்று பொட்டலங்களில் இருந்த மொத்தம் 45 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • திருவண்டார் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார்.

    புதுச்சேரி:

    திருவண்டார் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருவண்டார்கோவிலில் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது சட்டை பையில் சோதனை நடத்திய போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தார். மொத்தம் 145 கிராம் கஞ்சாவை அவர் பதுக்கி வைத்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவண்டார்கோவில் சின்னபேட் வாய்க்கால்மேட்டு தெருவை சேர்ந்த ஸ்டாலின்(வயது37) என்பதும், இவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

    • சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை இட்டனர்.
    • அப்போது மர்ம நபர் ஒரு பையில் 21 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருச்சி,

    திருச்சி ராம்ஜி நகர் போலீசார் நவலூர் குட்டப்பட்டு தேசிய சட்டக் கல்லூரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை இட்டனர்.

    இதில் அந்த நபர் ஒரு பையில் 21 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். இதைத்தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மதன் என்கிற மதுபாலன் (வயது 29) என்பவரை கைது செய்தனர்.

    சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்வதற்கு அந்த கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாக ராம்ஜி நகர் போலீசார் தெரிவித்தனர்.

    • வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே அரசூர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டை பையில் சோதனை நடத்திய போது சிறு சிறு பொட்ட லங்களாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரி யவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் வில்லியனூர் ஜி.என்.பாளையம் நடராஜன் நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 22) மற்றும் மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • லூர்தம்மாள்புரம் கல்லறை தோட்டம் பகுதியில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
    • போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் லூர்த ம்மாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லறை தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    உடனடியாக அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    உடனடியாக அதனை பறிமுதல் செய்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த லூர்தம்மாள்புரம் நரேஷ் (வயது 30), தாளமுத்துநகர் ராஜீவ்காந்தி குடியிருப்பு இசக்கிமுத்து(40), விளாத்தி குளம் பணையூரைச் சேர்ந்த துரைமுருகன்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தார். புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார். சுமார் 2 மணி நேரம் கழித்து போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தார்.

    இதனை கண்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி பள்ளி அருகே உள்ள டீக்கடையில் கஞ்சா புகைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து டீ கடைக்கு சென்ற மாணவியின் தாய் மகளுக்கு எதற்காக கஞ்சா விற்பனை செய்தாய் என தட்டிக்கேட்டார்.

    அதற்கு அவர் உங்களுடைய மகள் தினமும் ஆண் நண்பர்களுடன் வந்து கஞ்சா அடித்துவிட்டு செல்வதாகவும், பணம் கொடுப்பதால் கஞ்சா கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் தாய் சந்திரகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இதற்கு சந்திரகிரி எம்.எல்.ஏ சிவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் பாரபட்சம் இன்றி கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஆட்சியை குறை கூறுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    • நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தட்டான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர்
    • போலீசார் அவர்களிடமிருந்து 1.150 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தட்டான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பைக்குகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேர் கஞ்சா விற்பனை செய்ய முயற்சி செய்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மறுகால்குறிச்சியை சேர்ந்த சிவா என்ற சிவசுப்பு (வயது 23), முருகன் (23) என்பதும், இருவரும் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1.150 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×