என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Garlic Price Fall"
நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநில விவசாய விலை பொருள்களில் முக்கிய வியாபார கேந்திரமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகின்றது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில்4 க்கும் மேற்பட்ட வெள்ளைப்பூண்டு கமிஷன் மண்டிகள் உள்ளன. வெள்ளைப்பூண்டு மண்டிகளுக்கு நேற்று நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகாவில் இருந்து சுமார் 15 ஆயிரம் வெள்ளைப்பூண்டு மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது.
கடந்த வாரம் வெள்ளைப் பூண்டு வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ.20-ல் இருந்து ரூ.90 வரை விற்பனை ஆனது. ஆனால் இந்த வாரம் வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் பூண்டிற்கு நல்ல விலை கிடைக்கவில்லை. விலை கடும் வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. கமிஷன் மண்டிகளில் சுறுசுறுப்பாக ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரினார்கள். ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ.20-ல் இருந்து ரூ.70 வரை விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.20 வரை குறைந்து விற்பனை ஆனது. பூண்டு விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் வெள்ளைப்பூண்டு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வட மாநில வியாபாரிகள் யாரும் வராததால் இந்த விலை வீழ்ச்சி காணப்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வாரவாரம் வெள்ளைப்பூண்டு கொண்டு வருகிறோம். ஆனால் இந்த வாரம் பூண்டிற்கு நல்ல விலை கிடைக்கவில்லை. கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. இதே நிலை நீடித்தால் வெள்ளைப்பூண்டு விவசாயம் கேள்விக் குறியாகி விடும். எனவே வெள்ளைப் பூண்டு விவசாயத்தைப் பாதுகாக்க வெள்ளைப்பூண்டுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நாங்கள் விவசாயத்திற்கு செலவு செய்த பணம் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
திண்டுக்கல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, போளூர், கிளாவரை, கும்பூர், கீழானவயல், குண்டுப்பட்டி, புத்தூர், கூக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் சாகுபடி செய்த விவசாயிகள் காட்டுப்பன்றிகளின் அட்டூழியத்தால் பூண்டினை விளைவித்து வருகிறார்கள். ஆனால் தற்போது இவர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கிலோ பூண்டு ரூ.350-க்கு விற்பனையானது. 2017-ம் ஆண்டு ரூ.200-க்கு விலை போனது. ஆனால் இந்த ஆண்டு கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் உரம், பூச்சிக் கொல்லி மருந்து விலை உயர்வால் கடும் அவதியடைந்து வருகிறோம். தற்போது இந்த விலை சரிவு எங்களுக்கு கவலை அளித்துள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்