என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gift"

    • இதில் 15 லட்சத்து 60 ஆயிரத்து 503 பேர் பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.
    • தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்கவில்லை.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவடடங்களில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 937 குடும்ப அட்டைக்கு ரூ.1000 பணம் வழங்க அந்தந்த ரேசன் கார்டுகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் 15லட்சத்து 60 ஆயிரத்து 503 பேர் பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.

    மிதம் 28 ஆயிரத்து 434 பேர் ரூ.1000 வாங்க வில்லை.

    இதைப்போல் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.

    இந்த தொகையை அரசு கருவூலத் தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.

    • பேராவூரணியில் அரசு பள்ளியில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா நடை பெற்றது.
    • உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி,

    பேராவூரணி திருக்குறள் பேரவை மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.

    பெரியகக்திகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மேரிமேகலா தலைமை வகித்தார்.

    பேராவூரணி வடகிழக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராதேவி தலைமை வகித்தார். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்வில் சின்னப்ப தமிழர், மருத்துவர் நீலகண்டன், திருக்குறள் பேரவை தலைவர் நீல கண்டன், தமிழ் வழி கல்வி இயக்க இணைச்செயலாளர் வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் பழனிவேல், சிவக்குமார், ஆயர் ஜேம்ஸ், சித.திருவேங்கடம், பாரதி ந.அமரேந்திரன், கல்வியாளர் சீ.கௌதமன், மருத.உதயகுமார், அரிமா சங்க பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் அருண்குமார், காஜா முகைதீன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.
    • சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    ேசலம்:

    சேலம் மாவட்டத்தில் தினமும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முழுமையான கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. மதிய நேரங்களில் வெயில் தாக்கம் அதிகளவில் இருப்பதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப டுகிறது.

    முலாம் பழம்

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.

    நடப்பாண்டில் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் முலாம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்கு முலாம் பழம் அறுவடை செய்து லாரிகளில் லோடு ஏற்றி சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதனால் சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது.

    குவிப்பு

    ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். அதேபோல் சாலையோர கடைகளிலும் முலாம்பழம் அதிகளவில் குவித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவை 31-ம்ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.
    • மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் போட்டிகள் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்காவில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் பண்பாட்டு பேரவை 31ஆம்ஆண்டு நிறைவு விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் ஆண்டு முழுவதும் நடத்தி அதிலிருந்து வெற்றி பெறும் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், சீர்காழி - எல்.எம்.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    புலவர் பனசை. மூர்த்தி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி ராதாகிருஷ்ணன், பேராசிரியர் வீழிநாதன், சாயிராம் கல்விக்குழுமம் தாளாளர் ராஜா ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    திருக்குறள் பண்பாட்டுப் பேரவை செயலர் சிவ.அன்பழகன், தலைவர் வே. சக்கரபாணி, பொருளர். முரு.முத்துக்கருப்பன் ஆகியோர்கள் தலைமை வகித்தனர். அகோரமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ராமநாதன், எல். எம். சி பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மோகன் தாஸ் அறிவாநந்தம், வைத்தியநாத சாமி, ச.மு.இ மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் எஸ். முரளிதரன், பேரவை கொள்கை பரப்புச் செயலர் க.இளங்கோ, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம், சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். துணை செயலர் நந்த.இராசேந்திரன் நன்றிக் கூறினார்.

    • பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, பன்னாள் அரசு உயர்நிலைப்–பள்ளியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரத்திடம் படித்த முன்னாள் மாணவிகளான கருப்பம்புலம் அரசு மருத்துவமனை மருத்துவர் நிலவழகி, பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா, வேதாரண்யம் இந்தியன் வங்கி அலுவலர் ஜெயந்தி, ஆயக்காரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழிலரசி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    இதில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரம், ஆசிரியர்கள் யூடஸ்சுகிலா, தேன்மொழி ராதிகா, வைதேகி சுப்ரமணியன், தர்மதுரை மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முடிவில் இளநிலை உதவியாளர் பிரதீபா நன்றி கூறினார்.

    • ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை.
    • அவ்வைக்கு துளசியாபட்டினத்தில் ரூ. 18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, துளசியாபட்டினத்தில் உள்ள ஔவையார் கோவிலில் தமிழக அரசு சார்பில் 49-வது அவ்வை பெருவிழா தொடங்கியது.

    3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்த அவ்வை பெருவிழா நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விழாவாகும். ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை, அவற்றை நாம் பயனுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும்.

    மேலும், ஒளவைக்கு துளசியாபட்டினத்தில் ரூ. 18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தஞ்சை கலை பண்பாட்டு துறையினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, சிறப்பு பட்டிமன்றம் ஆகியவைகள் நடந்தது.

    பின்னர், இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு வழங்கினார்.

    விழாவில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, ஊராட்சி தலைவர்கள் தமிழ் செல்வி, வனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சவகர் சிறுவர் மன்றம் ஆகியவன சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

    தஞ்சை கலை பண்பாட்டு துறை மைய மண்டல உதவி இயக்குனர் நீலமேகம், விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவை தமிழ் சங்க தலைவர் மார்கோனி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து மங்கல இசைகள், தேவாரப் பண்ணிசை, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்ச்சங்க செயலாளர் கோவி நடராஜன், பொருளாளர் சொர்ணபால், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    விழாவில் இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மிருதங்க ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

    • மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.
    • எல்கை பரிசு மற்றும் கொடிப்பரிசாக சைக்கிள், ஏர் கூலர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ செல்வ விநாயகர் குரூப்ஸ் நண்பர்கள் சார்பில், மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

    போட்டியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என 5 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு–மொத்த பரிசாக ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டது.

    எல்கைப் பரிசு மற்றும் கொடிப்பரிசாக சைக்கிள், ஏர் கூலர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.

    பந்தயங்களை செல்வவிநாயகபுரம், ஆண்டவன்கோவில், ஆத்தாளூர், தென்னங்குடி, கொன்றைக்காடு, காலகம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று பந்தய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை பேராவூரணி போலீசார் செய்திருந்தனர்.

    • என்.எம்.எம். எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு.
    • மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியை நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார்.

    விழாவில் தேசிய அளவில் நடைபெற்ற என்.எம்.எம். எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மாணவி அஜிதாவுக்கும், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றிபெற்ற பிரித்திப்ராஜ், பீர்ஆரிஸ், நவீனா, துர்க்காதேவி, அன்பரசி, கனிகாஸ்ரீ, பவீனா, தீபதர்ஷினி ஆகிய 8 மாணவ- மாணவிகளுக்கும், மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற புத்தக திருவிழா கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவி அஜிதாவுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப் பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பட்டதாரி ஆசிரியை நதியா நன்றி கூறினார்.

    • கருகுடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் அருகே இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஸ்ரீ வெள்ளச்சி ஸ்ரீ மலையரசி ஸ்ரீ சோனை கருப்பர் ஸ்ரீ ஓட்டத்திடல் காளியம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப் ஏற்பாட்டில் முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா பெரும் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து 595 பதிவுகள் பெறப்பட்டது.
    • 6 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை சாலையில் அமைந்துள்ள ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உள்ள நீச்சல் குளத்தில் கோயம்புத்தூர் ஸ்போர்பி இவெண்ட்ஸ் என்ற நிறுவனம் மற்றும் தஞ்சாவூர் ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிளான "அக்வா சாலஞ்" நீச்சல் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெ ல்வேலி, விருதுநகர், சேலம், நாகப்பட்டினம், திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 595 பதிவுகள் பெறப்பட்டது.

    இப்போட்டியினை தஞ்சாவூர் நீச்சல் சங்கம் செயலாளர் ராஜேந்திரன்,

    ஸ்போர்பி இவெண்ட்ஸ் தலைவர் ரகு மற்றும் ஷியாம், ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர்கள் மார்டின், ஜோன்ஸ், ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை நீச்சல் பயிற்றுனர் சார்லஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்போட்டியில் 6 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது.

    நீச்சலில் ஆறு வகைகளில் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிக ளுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் ஸ்போர்பி இவெண்ட்ஸ் சார்பாக வழங்கபட்டது.

    • 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
    • 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    கடலூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மூலமாக 2022-23-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவி களுக்காக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 77 ஆயிரத்து 339 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 41 ஆயிரத்து 413 மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டி நடத்தி, அதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில் 6.12.2022 முதல் 10.12.2022 வரை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 6,952 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இதையடுத்து மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ- மாணவிகளில் 491 பேர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    இதையடுத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.

    ×