search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl attack"

    • சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
    • தாக்குதலுக்குள்ளான சிறுமி விரைவில் குணம் அடைய வாழ்த்துவதாக ஒரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.

    இங்கிலாந்து லெய்செஸ்டர் ஷையர் பகுதியில் உள்ள ஆஸ்பியின் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுமி ஒருவரை 2 இளம்பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் டுவிட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    டீனோ என்ற பயனரால் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவில், இந்த சம்பவம் எனது தங்கைக்கு நடந்தது என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.

    இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. சிறுமியை தாக்கிய பெண்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தாக்குதலுக்குள்ளான சிறுமி விரைவில் குணம் அடைய வாழ்த்துவதாக ஒரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.

    • பள்ளி நிர்வாகிகளிடம் புகார் செய்த உறவினர், அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பார்த்தார்.
    • பள்ளி முன்பு நின்ற சிறுமியை நோக்கி வாலிபர் ஒருவர் வருவது பதிவாகி இருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோட்டை அடுத்த மஞ்சேஷ்வரம் பகுதியில் ஒரு சமய வகுப்பு நடைபெறுகிறது.

    இந்த வகுப்புக்கு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி சென்றார். வகுப்பு முடிந்ததும் அவரை அழைத்து செல்ல உறவினர் ஒருவர் வந்தார்.

    அப்போது அந்த சிறுமி, தலையில் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர், சிறுமியிடம் விபரம் கேட்டபோது, ஒருவர் தன்னை தாக்கி விட்டு ஓடிவிட்டதாக தெரிவித்தார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர், சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு, மீண்டும் பள்ளிக்கு சென்றார்.

    பள்ளி நிர்வாகிகளிடம் இதுபற்றி புகார் செய்த உறவினர், அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பார்த்தார். அப்போது பள்ளி முன்பு நின்ற சிறுமியை நோக்கி வாலிபர் ஒருவர் வருவது பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் திடீரென சிறுமியை அலேக்காக தூக்கி சாலையில் வீசி எறிவதும் தெரிந்தது. இதில் கீழே விழுந்த மாணவி, வலியில் துடிதுடித்து அழுவதும், அதை பொருட்படுத்தாமல் அந்த வாலிபர் அங்கிருந்து சாவகாசமாக நடந்து செல்வதும் கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அக்காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். சிறிதுநேரத்தில் அக்காட்சிகள் வைரலானது.

    இது போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றது. அவர்கள் சிறுமியை தூக்கி வீசிய வாலிபரை கண்டுபிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் சிறுமியை தூக்கி வீசிய வாலிபர் அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்று கண்டுபிடித்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 307, மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொண்டாமுத்தூர் அருகே எச்.ஐ.வி. பாதித்த சிறுமியை தாக்கிய தாய்மாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    தொண்டாமுத்தூர் அருகே வெள்ளருகம்பாளையத்தை சேர்ந்தவர் ஆரன் என்ற ஆறுசாமி (வயது 30).

    இவரது சகோதரி ஒருவர் கடந்த 10 வருடத்துக்கு முன்பு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். சகோதரி மகளான 15 வயது சிறுமிக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று ஆறுசாமி வீட்டுக்கு அந்த சிறுமி சென்று தூங்கினார். இதைப் பார்த்ததும் ஆறுசாமி ஆவேசம் அடைந்தார். நீ இங்கு எதற்காக வந்தாய்? என கூறி ஆறுசாமி சிறுமியை விரட்டியதோடு, மரக்கட்டையால் தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த சிறுமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுமியை தாக்கிய ஆறுசாமி மீது கொலை முயற்சி, தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் விசாரணை நடத்தி ஆறுசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    ×