search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girls death"

    • உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 3 வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவியது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே காசிநாதபுரத்தில் 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவத்தால் கிராம மக்கள் மிகவும் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் கிராமத்திற்குள் ஆய்வு செய்ய வந்த சுகாதாரத்துறையினரை முற்றுகையிட்டு, 3 வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவியது.

    அப்போது வராமல், குழந்தைகள் இறப்பிற்கு பின்னர் தான் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டுமா என்று கேட்டனர். மேலும் உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கும்பகோணம் அருகே குட்டையில் விளையாடிய போது மண்சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆனைக்காரன்பாளையத்தை சேர்ந்த தேவேந்திரன் மகள் சியாமளா (வயது 10), அதே பகுதியை சேர்ந்த சுதாகர் மகள் வர்சினி (12). சியாமளா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பும், வர்சினி 7-ம் வகுப்பும் படிந்து வந்தனர்.

    பள்ளி விடுமுறை என்பதால் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் ராஜகாலனி கீழத்தெருவை சேர்ந்த வக்கீல் ராமமூர்த்தி வீட்டுக்கு மாணவி சியாமளாவும், வர்சினியும் சென்று இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள கொம்புகாரன் குட்டையில் ஆழமாக மண் எடுக்கப்பட்ட குழிகளில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது 2 பேரும் இறங்கி விளையாடிய குழியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகள் 2 பேரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லாததால், அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சியாமளாவும், வர்சினியும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்தசம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே மயிலாடு துறை அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குட்டையில் அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாகவும் , அந்த குழியை சரிசெய்யாமல் விட்டுச்சென்றதுதான் சிறுமிகள் சாவுக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, உதவி கலெக்டர் தேன்மொழி, மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×