என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Govt bus glass broken"
- அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
- தகவல் அறிந்ததும் கே.கே நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போரூர்:
சென்னை பிராட்வேயில் இருந்து அய்யப்பன்தாங்கல் நோக்கி மாநகர பஸ் (எண் 26) நேற்று மாலை பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ஆண்டாள் பிள்ளை ஓட்டி வந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனினும் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமான முறையில் பயணம் செய்தனர்.
இதனை பஸ் கண்டக்டர் செல்வகுமார் கண்டித்தார். ஆனால் மாணவர்கள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அதேபோல் தொங்கியபடி பயணம் செய்தனர். கே.கே நகர் ராஜமன்னார் சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்திய கண்டக்டர் படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் அனைவரையும் கீழே இறக்கி விட்டார். பஸ்சில் இருந்து நடுவழியில் கீழே இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீரென பஸ்சின் மீது சரமாரி யாக கல்வீசி தாக்கினர்.
இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் கே.கே நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பஸ் மீது கல்வீசிவிட்டு தப்பி ஓடிய மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து கீழ்பென்னாத்தூர் வழியாக நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது கருங்காலிகுப்பம் சுடுகாடு அருகே பஸ் வந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் கருங்காலிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சுகன்ராஜ் (வயது27), பிரகாஷ் (26) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் முந்தும்போது உரசிகொண்டுள்ளன. இதனால் கோபமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பஸ்சின் பின்புற கண்ணாடி மீது கல் வீசினர். டிரைவர், கண்டக்டரையும் தாக்க முயற்சித்துள்ளனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். வாலிபர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் இருந்து திருபதிநோக்கி அரசு விரைவு பஸ் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் சிதம்பரம் அருகே பெரியகுமட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது மர்மநபர்கள் திடீரென பஸ்சின் முன்பகுதியில் கற்களை சரமாரியாக வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பரங்கிபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன்பஸ் ஒன்று ஆனத்தூர் வழியாக சிறுகிராமத்துக்கு நேற்று இரவு 8.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் அருண் ஓட்டினார்.
சே.மங்களம்-ஆனத்தூர் மலட்டாறு வாய்க்கால் பாலத்தில் சென்றபோது மர்மநபர்கள் சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதுகுறித்து பஸ்சின் டிரைவர் அருண் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை கண்டித்தும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வற்புறுத்தியும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை சுகுமார் (46) ஒட்டினார்.
நேற்று இரவு 9 மணியளவில் பஸ், கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் வேட்டையம்பட்டி ஏரிக்கரை அருகே சென்ற போது 2 பேர் திடீரென வழிமறித்து பஸ் முன்பக்க கண்ணாடி மீது கல்லை வீசினர். இதில் கண்ணாடி நொறுங்கி சேதமானது.
இதுகுறித்து பஸ் டிரைவர் சுகுமார், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சில் கண்ணாடியை உடைத்தது, ஆலமரத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த ரவி (33), வேட்டையம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (32) ஆகியோர் என தெரிய வந்தது. 2 பேரும் கட்டிட மேஸ்திரிகள் ஆவர்.
வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் அதற்து எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்சை சேதப்படுத்தியதாக தெரிவித்தனர்.
வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்து இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தருமபுரி 4 ரோடு, நல்லம்பள்ளி, ஏரியூர், பொம்மிடி, இண்டூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், மற்றும் சாலைமறியல் செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரத்தில் இருந்து சேலத்துக்கு பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு 9 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது.
இந்த பஸ்சில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 18), அப்துல்லா (19) ஆகிய 2 பேரும் பயணம் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே சின்னக்குப்பத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வந்திருந்தனர். அந்த பஸ் சின்னக்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆனந்தராஜ், அப்துல்லா ஆகிய 2 பேரும் நாங்கள் சின்னக்குப்பத்தில் இறங்க வேண்டும் பஸ்சை நிறுத்துங்கள் என்று கூறினர்.
ஆனால் டிரைவர் சின்னகுப்பத்தில் பஸ் நிற்காது என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் அடுத்த நிறுத்தமான பெரியகுப்பத்தில் பஸ் டிரைவர் இறக்கி விட்டார்.
சின்னக்குப்பத்தில் பஸ்சை நிறுத்தாததால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர்.
இது குறித்து திருநாவலூர் போலீசில் பஸ் டிரைவர் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரணீதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பஸ் மீது கல்வீசிய ஆனந்தராஜ், அப்துல்லா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து பொம்மிடிக்கு நேற்று இரவு அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது.
இரவு நேரம் என்பதால் அந்த பஸ்சை அங்கேயே நிறுத்தி விட்டு இன்று அதிகாலையில் மீண்டும் இயக்கினர். பஸ்சை டிரைவர் ஞானசேகரன் என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் துரை என்பவர் கண்டக்டராக இருந்தார். 3 பயணிகளுடன் பொம்மிடியில் இருந்து பஸ் புறப்பட்டது.
அப்போது பொம்மிடி அருகே பி.பள்ளி பட்டி என்ற இடத்தில் வந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென்று கல்லை எடுத்து பஸ்சின் மீது வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக திருவண்ணாமலை நோக்கி நேற்று மதியம் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜிரோடு தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது, ஆல்பேட்டையை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நகர துணை செயலாளர் சிலம்பு என்கிற சிலம்பரசன் அங்கு வந்தார்.
கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி கோஷமிட்டார். பின்னர் அவர் அந்த பஸ் மீது கல்வீசி தாக்கினார். இதில் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
இது பற்றி பஸ் டிரைவர் மணவளவன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி சிலம்பு என்கிற சிலம்பரசன் மீது போலீசார் கைது செய்தனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்