என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "govt employee"
- அரசு பெண் ஊழியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்துள்ளது
- தலைக்கவசம் அணிந்து மர்ம நபர்கள் கைவரிசை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா தச்சமல்லி பகுதியை சேர்ந்தவர் கலைமதி (வயது35). இவர் தச்சமல்லியில் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றி வருகிறார். கணவர் சிவக்குமார் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.
கோட்டையூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் கலைமதி, தனது இரண்டு பிள்ளைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தச்சமல்லிக்கு வேலைக்கு வந்து சென்றுள்ளார்.
அதே போன்று நேற்று தனது இரண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஏம்பல்விச்சூர் சாலையில் சென்று கொண்டிருக்கையில் அங்கே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2மர்ம நபர்கள் கலைமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் கலைமதி புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்த காவல்த்துறையினர் சிசிடிவி ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்து 5 சவரன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது40). இவர் அப்பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார்.
- இந்த கடையை அதேபகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான லெட்சுமணன் (62) என்பவருக்கு விற்பனை செய்ததாகவும், சிறிது காலம் அவகாசத்தில் கடையை காலிசெய்து தருவதாக மகேந்திரன் கூறியதாக தெரிகிறது.
நெல்லை:
பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது40). இவர் அப்பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு இந்த கடையை அதேபகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான லெட்சுமணன் (62) என்பவருக்கு விற்பனை செய்ததாகவும், சிறிது காலம் அவகாசத்தில் கடையை காலிசெய்து தருவதாக மகேந்திரன் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடையை கேட்க லெட்சுணன் சென்றதாக தெரிகிறது. அப்போது கடை பூட்டியிருந்ததால் கதவின் மீது மேல்பூட்டு போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மகேந்திரன் பேட்டை போலீசில் புகார் செய்தனார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு ஊழியரிடம் நகை-பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
- கவனத்தை திசை திருப்பி பறித்து சென்றனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், புதுவேலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 54). இவர் பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் வெங்கடேசபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்து, ஒரு அடகு கடையில் வைத்திருந்த 2 பவுன் மோதிரத்தை ரூ.77 ஆயிரம் கட்டி திருப்பினார்.
பின்னர் தண்டபாணி அந்த மோதிரத்தையும், மீதமுள்ள ரூ.43 ஆயிரத்தையும் ஒரு கைப்பையில் வைத்து தனது மோட்டார் சைக்களில் முன்பக்க கவரில் வைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். வழியில் அவர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் அரணாரை விலக்கு அருகே உள்ள சினிமா தியேட்டர் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அதே சாலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் தண்டபாணியிடம், அவரது பணம் கீழே விழுந்து கிடப்பாதாகவும், அதனை எடுக்குமாறும் கூறி அவரது கவனத்தை திசை திருப்பினர். பின்னர் 2 பேரும் தண்டபாணியின் மோட்டார் சைக்கிள் கவரில் இருந்த பணம், நகையை திருடிக்கொண்டு துறையூர் செல்லும் சாலையில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
அவர்களை பிடிப்பதற்காக தண்டபாணி தூரத்தி கொண்டு ஓடிய போது கால் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். பின்னர் தண்டபாணி இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்"
தஞ்சாவூர்:
தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் மன்ற மாநில செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள், கல்லூரி மாணவ- மாணவிகள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும், 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், 33 பாட பிரிவுகள் வேலை வாய்ப்புக்கு உகந்தல்ல என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை திரும்ப பெற வேண்டும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெறும் அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்