என் மலர்
நீங்கள் தேடியது "Govt Hospital"
- சதீஷ்குமார் தூக்குமாட்டி தற்கொலை செய்து தொங்கி கொண்டு இருந்தார்.
- சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சத்தியமங்கலம்:
திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவருடைய மனைவி சந்தியா (29). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.
சதீஷ்குமார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார்.
இதையடுத்து கணவன்- மனைவியும் சத்தியமங்கலம் கோம்பு பள்ளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு குழந்தை இல்லையே என சதீஷ்குமார் மன வேதனை அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது உறவினர்களிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி வெளியூர் சென்று விட்டார். இதனால் சதீஷ்குமார் மட்டும் சத்தியமங்கலத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இதையடுத்து நேற்று முன் தினம் சந்தியா சதீஷ்குமாருக்கு போன் செய்து பேசினார். இதையடுத்து நேற்று மீண்டும் சந்தியா, சதீஷ்குமாருக்கு போன் செய்தார்.
ஆனால் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து சந்தியா அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சதீஷ்குமாரை போய் பார்த்து வரும் படி கூறினார்.
இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பேனில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கெலை செய்து தொங்கி கொண்டு இருந்தார்.
மேலும் தனது கையில் ஊசியில் குத்தியப்படியும், இதனால் ரத்தம் கீழே கொட்டிய நிலையிலும் இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சதீஷ்குமார் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்.
ஆனாலும் அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சதீஷ்குமாரின் உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- கூலித் தொழிலாளியான நம்பிராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
- இறந்தவரின் உறவினர்கள் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி வந்து கொடுத்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆலடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது45). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் நம்பிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை மையத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குளிரூட்டும் கருவி பழுதடை ந்துள்ளதால், உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.
இதற்கு இறந்தவரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இறந்தவரின் உடலுடன் அரசு மருத்துவமனையின் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் இறந்தவரின் உறவினர்கள் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி வந்து அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக கொடுத்தனர். இதனை அடுத்து நம்பிராஜன் உடல் அந்த பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது.
நாங்குநேரி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாத்திரைகள் வாங்குவதற்காக 3 கவுண்டர்கள் இயங்கி வருகிறது.
- வயதானவர்கள் நீண்ட நேரம் நின்று மாத்திரை பெற சிரமம் அடைகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.அவர்களுக்கு மருத்து வர்கள் சார்பில் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் வாங்குவதற்காக 2 பொது கவுண்டர்கள், மாற்றுத்திறனாளி களுக்கென 1 கவுண்டர் என மொத்தம் 3 கவுண்டர்கள் இயங்கி வரும் நிலையில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வயதானவர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று மாத்திரை பெறுவதற்கு பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். நேற்று வாரத்தின் முதல் வேலை நாள் என்பதால் மாத்திரைகள் வாங்குவதற்கு நோயாளிகள் அதிகளவில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அதில் வயதான மற்றும் சிறு குழந்தைகளுடன் வந்த பெண்கள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தரையில் அமர்ந்து இருந்தனர். எனவே நாளுக்கு நாள் நோயாளிகள் தென்காசி அரசு மருத்துவமனையை நாடி வரும் நிலையில் மாத்திரைகள் வழங்குவதற்கு கூடுதல் கவுண்டர்களை திறக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
- ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர்.
- 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லக்னோ :
உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் 4 நாளில் மட்டுமே 57 நோயாளிகள், அதுவும் 60 வயது கடந்த முதியோர் அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது, அங்கு பேசு பொருளாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சாவுகள், அங்கு வெப்ப அலைகள் நிலவுகிற நிலையில் நேரிட்டிருக்கின்றன. இதில் தலைமை மருத்துவ சூப்பிரண்டு டாக்டர் திவாகர் சிங், அசம்காருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழப்புகள் பற்றி முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் கூறும்போது, "ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 40 சதவீதத்தினருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. 60 சதவீதத்தினர் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். 2 பேர் மட்டுமே வெப்ப அலை தாக்குதலால் இறந்துள்ளனர்" என தெரிவித்தார்.
இதேபோன்று அந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ சூப்பிரண்டு (பொறுப்பு) டாக்டர் எஸ்.கே.யாதவ் கூறுகையில், " இந்த ஆஸ்பத்திரியில் தினமும் 125 முதல் 135 நோயாளிகள், உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். எனவே இந்த ஆஸ்பத்திரி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் வெவ்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். 16-ந் தேதி 20 பேர் இறந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாளில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்" என்றார்.
பிரச்சினைக்குரிய ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்வதற்காக லக்னோவில் இருந்து சுகாதாரத்துறை குழு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்கள் சோதனை நடத்திய பின்னர்தான் நிகழ்ந்துள்ள இறப்புகளுக்கான காரணத்தை உறுதியாகக்கூற முடியும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே பல்லியா மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நோயாளிகள் சிரமப்படாத அளவில் ஏர் கூலர்கள் மற்றும் ஏ.சி. வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும், இது தவிர 15 படுக்கைகள் புதிதாக போடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறைக்கு பொறுப்பேற்றுள்ள துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியதாவது:-
வெப்ப அலை தாக்குதல் பற்றி தெரியாமல், இறப்புகள் குறித்து தவறான குறிப்புகளை எழுதியதற்காகத்தான் தலைமை மருத்துவ சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியையும் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கும், தலைமை மருத்துவ சூப்பிரண்டுகளுக்கும் உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன்.
- டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் பணியில் இருந்த வந்தனா தாஸ் என்ற பெண் டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் அவரை கத்திரி கோலால் குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெண் டாக்டர் ஒருவருக்கு நோயாளி கற்பழிப்பு மிரட்டல் விடுத்தார். இது பற்றி அந்த டாக்டர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார். அதில், நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இதனால் நான் அதிர்ந்து போனேன். உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீண்டும் பிடித்து சென்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
கேரளாவில் வந்தனாதாஸ் என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்னர், டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மேலும் ஆஸ்பத்திரி பாதுகாப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்தது. அதன்பின்பும் ஒரு சில அரசு ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இப்போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்து மேலும் நான்கு ஊசிகளை டாக்ட ர்கள் செலுத்தினர்.
- தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள மடிகை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) தொழிலாளி. இவரது மனைவி கீதா.
இவர்களது 10 மாத பெண் குழந்தை தரணிகாவுக்கு 10 வது மாத தடுப்பூசி துறையூர் அங்கன்வாடி மையத்தில் போடப்பட்டது.
ஆனால் தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தை கண் அசைவின்றி காணப்பட்டது.
இதையடுத்து காசநாடு புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு பெற்றோர் சென்றனர்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை.
தொடர்ந்து தஞ்சை ராசாமி ராசுதாரர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்து மேலும் நான்கு ஊசிகளை டாக்ட ர்கள் செலுத்தினர்.
ஆனால் சிறிது நேரத்திலே குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்களின் கவனக்குறைவு, அஜாக்கிரதையால் தான் குழந்தை உயிர் இழந்தது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் . அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- சரியான சிகிச்சை அளிக்காததே கஸ்தூரி இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (வயது 24). இவர்களுக்க திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து கஸ்தூரியை பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனர். நேற்று மாலை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை ஆண்குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் கஸ்தூரியின் உடல் நிலை மோசம் அடைந்தது. உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கஸ்தூரி பரிதாபமாக இறந்தார். இதனை கேட்டு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து டாக்டர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சரியான சிகிச்சை அளிக்காததே கஸ்தூரி இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
- தசைப்பிடிப்புக்குச் சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார்.
- தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தி.மு.க. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ்- ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறிநாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். ஒருகட்டத்தில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையின் உடலில் அசைவு இருப்பது தெரிய வந்த நிலையில், உடனடியாக குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக செய்திகள் தெரிவித்தன.
கேரளாவில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குண்டான சிகிச்சைகளை துரித நிலையில் மேற்கொண்டதன் காரணமாக, குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி, தற்போது குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக குழந்தையின் தாய் ஷைனி தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன.
தசைப்பிடிப்புக்குச் சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார். சிறு குழந்தையின் கை தவறான சிகிச்சையால் அகற்றப்பட்டு, தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காத கொடுமை. ஆனால், சுகாதாரத்துறை மந்திரிக்கோ ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த திமுக அரசின் சுகாதாரத்துறை மந்திரி, மக்கள் நலன் காக்கும் மந்திரியா? அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் மந்திரியா? என்பதே சந்தேகமாக உள்ளது.
தமிழகத்தின் தலையெழுத்து, முதலமைச்சரின் மகன் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளையாட்டுப் பயிற்சியாளராக வலம் வந்து துறையில் கவனம் செலுத்தாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள்.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய்த் தன்மை குறித்து பரிசோதிக்காமல் கவனக் குறைவாக கையில் கிடைத்த மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவது மிகவும் கொடுமையானதாகும். இதுபோன்ற தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தி.மு.க. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது, சுகாதாரத் துறை மந்திரி, அவரது துறையில் முழு கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உறைவிட மருத்துவ அதிகாரி அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வார்டு மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
சென்னை:
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆஸ்பத்திரியை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அனைத்து நோய்களுக்கும் எளிதாக தீர்வு காணமுடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆஸ்பத்திரியை தூய்மையாக வைத்திருந்து நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தருவதை உறுதி செய்யும் வகையில் கீழ்க்கண்டவற்றை பின்பற்ற கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து வார்டுகளிலும் கட்டில்கள் சீரான வரிசையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சேதமடையாத படுக்கை விரிப்புகள் மற்றும் அதே நிறத்திலான தலையணை கவர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
படுக்கை விரிப்புகளை பொறுத்தமட்டில் படுக்கைகளின் எண்ணிக்கையை விட குறைந்தது 3 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். சில ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் மற்றும் தலையணைகள் தினசரி மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட நாட்களில் பல்வேறு வண்ணத்துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு நல்ல நடைமுறையாகும். நிதி இருப்பின் இதுபோன்று செயல்படலாம்.
படுக்கை விரிப்பை தினமும் சலவை செய்து பயன்படுத்தவேண்டும். புதிதாக வாங்கிய படுக்கை விரிப்புகளை அவ்வப்போது பயன்படுத்துவதை கைவிட்டு தொடர்ந்து பயன்படுத்தவேண்டும்.
அனைத்து வார்டுகளின் கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். போதிய அளவு கிருமி நாசினியை இருப்பு வைத்து பயன்படுத்தவேண்டும். கழிப்பறைகள் முறையாக சுத்தப்படுத்தப்படுவதை உறுதி செய்ய பதிவேடுகளை பராமரித்து ஒவ்வொரு முறை சுத்தப்படுத்தும்போது பராமரிப்பு பணியாளர்கள் மூலம் பதிவிட வேண்டும்.
இதை வார்டு செவிலியர்கள் செயல்படுத்தவேண்டும். முறையாக கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாத பட்சத்தில் இதுகுறித்து செவிலியர்கள் நர்சிங் சூப்பிரண்டு மற்றும் உறைவிட மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும்.
பணியில் இருக்கும் டாக்டர்களும் ஆஸ்பத்திரி சுத்தமாக இருப்பதை அவ்வப்போது பார்வையிட்டு உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும். ஆஸ்பத்திரி வளாகம் மிக சுத்தமாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் பாராட்டு தெரிவிக்கவேண்டும்.
வார்டு, கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்படாதது தெரியவந்தால் டாக்டர்கள் உறைவிட மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும். உறைவிட மருத்துவ அதிகாரிகள் ஆஸ்பத்திரியை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பை கவனிக்கவேண்டும்.
உறைவிட மருத்துவ அதிகாரி அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வார்டு மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
ஆஸ்பத்திரியை சுற்றி சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் சுகாதாரமான உணவை உட்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டதா? அதுவும் சரியான நேரத்தில் வழங்கப்பட்டதா? என்பதை நோயாளிகளிடம் விசாரணை செய்து உறைவிட மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தவேண்டும். சமையல் செய்யும் இடம் சுகாதாரமாக இருப்பதையும், சமையலுக்கு தரமான பொருட்கள் பயன்படுத்துவதையும், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதையும் உறுதிபடுத்தவேண்டும்.
மின்சாதனங்கள், சலவை எந்திரங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். திடக்கழிவுகள் அகற்றுவது தினசரி அடிப்படையில் அகற்றப்பட வேண்டும்.
ஒவ்வொரு நோயாளியையும் மரியாதையுடன் நடத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடமதுரை, முள்ளிப்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்றனர்.
- 2 சிறுவர்கள் பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் மழை பரவலாக பெய்து வருகிறது. மேலும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 3 நாட்களாக காலையில் மேகமூட்டத்துடனும், பிற்பகலில் வெயிலும் கொளுத்தி வருகிறது. மாலையில் சூட்டை கிளப்பி வருகிறது. மேலும் இரவில் குளிர் என சீதோஷண நிலை மாறி மாறி காணப்படுகிறது.
பூமி வெப்பத்தை அதிகளவு வெளிப்படுத்தி வருகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதி களுக்குள் படையெ டுத்து வருகிறது. பாம்பு, தேள் மற்றும் விஷ ஜந்துக்கள் கடித்து நாள்தோறும் பலர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வடமதுரை, முள்ளிப்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்றனர். இதில் குட்டியபட்டி முகேஷ் குமார் (14), மேட்டுப்பட்டி சேர்ந்த உதயகுமார் (16) ஆகியோர் கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்கா க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு.
- இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில், பிறந்த குழந்தைகள் (12) உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துகள் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உயிரிழந்த 24 பேர்களில், 12 பேர் பிறந்த குழந்தைகள் என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சூழல் தான் நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் கிடைப்பதில்லை, இதன் காரணமாகவே நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில அமைச்சர் ஹாசன் முஷ்ரிஃப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறை இயக்குனர் மற்றும் ஆணையர்களை விரைந்து விசாரணை நடத்தவும், மருந்துகள் இருப்பு குறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் தொடர்புடைய அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
- மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
- நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இறந்துள்ளதாக மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வகோஸ் கூறினார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24 நோயாளிகள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் புதிதாக பிறந்த 12 பச்சிளம் குழந்தைகளும் அடங்கும். ஆஸ்பத்திரியில் நிலவும் மருந்து மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரியில் நேற்று இரவு மேலும் 7 நோயாளிகள் இறந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள். இதனால் 2 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வகோஸ் கூறுகையில், "மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை. நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இறந்துள்ளனர்" என்றார்.
இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.