search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grocery"

    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
    • கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ.222-க்கு விற்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. சென்னையில் மொத்த விற்பனையில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பல மளிகை பொருட்களின் விலை 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக அரிசி உற்பத்தி குறைந்து விட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி கொண்டு வரப்படுவதால் அரிசி ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் துவரம் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படும் வாகன செலவு, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் பருப்பின் விலை மேலும் உயருவதற்கான வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ.222-க்கு விற்கிறது. ரூ.122-க்கு விற்கப்பட்ட உளுந்தம் பருப்பு ரூ.145-க்கும், ரூ.155-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ரூ.172-க்கும், ரூ.110-க்கு விற்கப்பட்ட பாசி பருப்பு ரூ.120-க்கும், ரூ.72-க்கு விற்கப்பட்ட கடலை பருப்பு ரூ.84-க்கும், ரூ.82-க்கு விற்கப்பட்ட உடைத்த கடலை ரூ.102-க்கும், ரூ.160-க்கு விற்கப்பட்ட கொண்டை கடலை ரூ.180-க்கும், ரூ.77-க்கு விற்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை ரூ.80-க்கும் விற்கப்படுகிறது.

    ரூ.82-க்கு விற்கப்பட்ட கடுகு ரூ.95-க்கும், ரூ.625-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.720-க்கும், ரூ.88-க்கு விற்கப்பட்ட வெந்தயம் ரூ.95-க்கும், ரூ.38-க்கு விற்கப்பட்ட சர்க்கரை ரூ.44-க்கும், ரூ.88-க்கு விற்கப்பட்ட தனியா ரூ.120-க்கும் விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் சில பொருட்கள் மட்டும் விலை குறைந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் கிலோ ரூ.635-க்கு விற்கப்பட்ட சீரகம் ரூ.380 ஆக விலை குறைந்துள்ளது. ரூ.225-க்கு விற்கப்பட்ட சோம்பு ரூ.195 ஆகவும், ரூ.420-க்கு விற்கப்பட்ட மிளகாய் தூள் ரூ.410 ஆகவும், ரூ.360-க்கு விற்கப்பட்ட மல்லித்தூள் ரூ.340 ஆகவும், ரூ.250-க்கு விற்கப்பட்ட மிளகாய் ரூ.210 ஆகவும் விலை குறைந்துள்ளது.

    மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் சமையல் எண்ணெய் விலையில் மட்டும் தற்போது எந்த மாற்றமும் இல்லை.

    • நாம் அதில் இருக்கும் காலாவதி தேதியை கவனிப்பதில்லை.
    • பொருட்களில் பூஞ்சை ஏற்பட்டால் உடனடியாக தவிர்த்துவிடுங்கள்.

    பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களின் மீதும், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். கடைகளில் இருந்து பெரும்பாலான நேரங்களில் ஆவலோடு பொருட்களை வாங்குகின்ற நாம் அதில் இருக்கும் காலாவதி தேதியை கவனிப்பதில்லை. சில சமயம், பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருந்து சில நாள் அல்லது வாரங்கள் கழித்தும் கூட உபயோகம் செய்கிறோம்.

     இடைப்பட்ட நேரத்தில் காலாவதி தேதி கடந்து விட்டதா என்ற சந்தேகம் பெரும்பாலும் வந்து விடுவதில்லை. கடைகளில் புத்தம் புதிய பிரெட், ஸ்வீட் போன்றவற்றை வாங்கி கொண்டு வந்து ஃபிரிட்ஜில் நாம் நிரப்பி விடுகிறோம். தேவைப்படும் சமயங்களில் எடுத்து சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், ஒருவேளை இது கெட்டுப் போயிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதும், பின்னர் நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சாப்பிடுவதும் தொடர் கதையாகிறது.

    உலர்ந்த நிலையில் உள்ள நட்ஸ், பாஸ்தா போன்ற உணவுப் பொருள்கள் காலாவதி தேதியை கடந்திருந்தாலும், பார்க்க நன்றாகதான் இருக்கும். இதுபோன்ற பொருட்களில் பூஞ்சை ஏற்பட்டால் உடனடியாக தவிர்த்துவிடுங்கள். உணவுகளை காலாவதி தேதி கடந்து சாப்பிட்டால் பல வகைகளில் நாம் இன்னல்களை சந்திக்க நேரிடும்.

    காலாவதியான உணவுகளில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவை இருக்கும். அவை உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதன் காரணமாக குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு மற்றும் காய்ச்சல் ஆகிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

    இகோலி, சால்மோனெல்லா, லிஸ்டேரியா போன்ற பாக்டீரியாக்கள் காலாவதி உணவுகளில் இருக்கலாம். இகோலி பாக்ரீயா என்பது காலாவதியான இறைச்சி மற்றும் பால் பொருட்களில் இருக்கும். சால்மோனெல்லா பாக்டீரியா என்பது கெட்டுப்போன முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும்.

    லிஸ்டேரியா என்ற வகை பாக்டீரியாவானது கர்ப்பிணி பெண், பச்சிளம் குழந்தைகள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் போன்றோருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

    எந்தவொரு உணவுப் பொருளை வாங்கினாலும் அதில் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவற்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலும் உணவுப் பொருளை பதப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட உபபொருள்களுக்காகவே அந்த காலாவதி தேதி சேர்க்கப்பட்டிருக்கும். ஃபிரஷ்சாக சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களை புதிதாகவே எடுத்துக் கொண்டால் மட்டுமே ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

    பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களின் மீதும், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். கடைகளில் இருந்து பெரும்பாலான நேரங்களில் ஆவலோடு பொருட்களை வாங்குகின்ற நாம் அதில் இருக்கும் காலாவதி தேதியை கவனிப்பதில்லை.

    • சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
    • இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே வசந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவர் நாமக்கல் கடை வீதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 26-ந் தேதி பணிக்கு வந்த செல்வராசு தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பு நிறுத்தினார். அப்போது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுக்காமல் கடைக்கு சென்றார்.

    பணி முடிந்ததும் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது அதை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

    இவை அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 4 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சத்தியமங்கலம் அருகே மளிகை கடையில் ஹான்ஸ்-புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டனர்
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

     ஈரோடு:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் குட்டி அண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சத்தியமங்கலம் அடுத்த கோட்டுவீராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்குபேட்டை அடுத்த கோட்டுவீராபாளையம் பகுதில் உள்ள மளிகை கடையை சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய வெள்ளை சாக்கு பை ஒன்று இருந்தது.

    அதனை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதாசிவம் (29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×