என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » gudka sales
நீங்கள் தேடியது "Gudka sales"
திருச்சியில் இன்று குடோனில் பதுக்கி விற்பனை செய்த ரூ.3லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள் வியாபாரி ஒருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutka
திருச்சி:
திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா, கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் கோடிலிங்கம் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கரூரில் இருந்து போதை பொருட்களை வாங்கி, அதனை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் கரூரில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர். ஓட்டல் உரிமையாளர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களுடன் மங்கள்ராமுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வரப்படுகிறது. சிறிய கடைகளில் ரகசியமாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள கடைகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை ரகசியமாக போதை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gutka

அப்போது அங்குள்ள குடோனில் போதை பொருட்களான குட்கா, புகையிலை பொருட்கள் உள்ளிட்டவை பதுக்கி வைத்து விற்பனைக்காக பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாபாரி மங்கள் ராம் என்பவரை கைது செய்தனர். மேலும் 2பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான வியாபாரி மங்கள்ராம்
கரூரில் இருந்து போதை பொருட்களை வாங்கி, அதனை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் கரூரில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர். ஓட்டல் உரிமையாளர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களுடன் மங்கள்ராமுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வரப்படுகிறது. சிறிய கடைகளில் ரகசியமாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள கடைகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை ரகசியமாக போதை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gutka
பான் பராக், குட்கா விற்பனை செய்யும் வணிகர்களின் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என காஞ்சீபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Gutka
காஞ்சீபுரம்:
தமிழகத்தில் புகையிலை, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கடைகளில் புகையிலை பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன.
அதிகாரிகள் தொடர்ந்து வேட்டை நடத்தியும் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் புகையிலையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதேபோல காஞ்சீபுரம் மாவட்டத்திலும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தாராளமாக நடக்கிறது. இதையடுத்து குட்கா, புகையிலை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பான்பராக், குட்கா பொருட்கள் விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை 1,36,707 கிலோ பான்பராக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் இதுவரை 2,24,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பான் பராக், குட்கா விற்பனை செய்யும் வணிகர்களின் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Gutka

×

X