என் மலர்
நீங்கள் தேடியது "Harassment case"
- தன்னை மேலாளர் ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்தது கேட்க சென்ற கணவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதால் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் வைத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பீட்சா கடை ஒன்றில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார்.
இந்தநிலையில் அதே கடையில் மேலாளராக வேலை பார்க்கும் ஊட்டியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க நபர் இளம்பெண்ணை தனது ஆசைக்கு இணங்கும்படி அழைத்து வந்தார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்து போகவே இளம்பெண் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.
உடனடியாக இளம்பெண்ணின் கணவர் தனது நண்பர்கள் 2 பேருடன் அந்த கடைக்கு சென்றார். அங்கு இருந்த மேலாளரிடம் இளம்பெண்ணை ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மேலாளர் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தன்னை மேலாளர் ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்தது கேட்க சென்ற கணவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதால் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் வைத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் கணவர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு கட்டத்தில் எல்லை மீறி போன பேராசிரியரின் ஆபாச பேச்சு மாணவியை அதிர்ச்சி அடையச் செய்தது.
- புதுக்கோட்டையில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் மற்றொரு துறையில் பயின்று வரும் மாணவர் ஒருவரை காதலித்து வருகிறார். இதற்கிடையே அந்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் பி.பி.ஏ. மாணவியின் செல்போன் எண்ணை அறிந்துகொண்டு அடிக்கடி தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறி போன அவரது ஆபாச பேச்சு மாணவியை அதிர்ச்சி அடையச் செய்தது. போனில் பேசிய அவர் மாணவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். முதலில் தனது எதிர்காலம் குறித்து கவலை அடைந்த மாணவி, அந்த பேராசிரியரிடம் இதுபோல் என்னிடம் பேசாதீர்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஆனாலும் அவர் தன்னை திருத்திக்கொள்ளவில்லை. நாளுக்கு நாள் பேராசிரியரின் செல்போன் பேச்சால் கடும் விரக்தியடைந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேராக கல்லூரிக்கு சென்றனர். அவர்கள் வருவதை அறிந்த அவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை மாணவியின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் புகாருக்குள்ளான பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இருந்தபோதிலும் பிரச்சினையின் தீவிரம் அறிந்த இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது இதுபோன்ற பல மாணவிகளிடம் அந்த பேராசிரியர் அத்துமீறியும், அநாகரீகமாகவும் பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தனர்.
அதன்பேரில் போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், பேராசிரியர்கள் அடங்கிய குழுவினரும் இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க தயாராகி வருகிறார்கள்.
இதற்கிடையே மாணவியிடம் பேராசிரியர் ஆபாசமாக பேசியதை உறுதி செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனது தோழியிடம் பேசிய ஆடியோ ஒன்று வரைலாகி வருகிறது. அதில் எல்லோருக்கும் உடலுறவில் ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. நீ என்னை எவ்வளவு வேண்டுமானாலும் யூஸ் பண்ணிக்கோ..., ஆனால் என்னை விட அவன்கிட்ட (காதலன் பெயரை சொல்கிறார்) என்ன இருக்கு? அவன் காசு தாரேன்று சொன்னானா, அவன் வயித்துல புள்ளைய கொடுத்திட்டு ஏமாத்திருவான். நான் உனக்கு எல்லாமே பண்ணுவேன்னு சொல்ராறு என்கிறார்.
மேலும் அந்த பேராசிரியர் கேவலமா பாக்கிறாறு, கேவலமாக பேசுறாறு, கழுத்துக்கு கீழதான் பார்த்து பேசினார் என்று அந்த ஆடியோவில் அவர் தெரிவிக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியை அங்கு பணியாற்றும் ஆசிரியர் சதீஷ் என்பவர் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு மிரட்டிய ஆடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அந்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் புதுக்கோட்டையில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது.
- மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விளையாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங். முன்னாள் ஹாக்கி வீரரான இவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று உள்ளார்.
இந்தநிலையில் மந்திரி சந்தீப்சிங் மீது தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்.
ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டார் என்றும் நான் அங்கு அறையில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்ததாகவும் பெண் பயிற்சியாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநில காவல்துறை தலைவர் உள்துறை அமைச்சர், முதல்-மந்திரியை சந்தித்து முயற்சித்தபோதும் சந்தீப் சிங்கின் தலையீட்டால் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மந்திரி சந்தீப் சிங் திட்டவட்டமாக மறுத்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் பயிற்சியாளரின் புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது.
இந்த நிலையில் பெண் பயிற்சியாளரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் மீது சண்டிகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறும் போது, பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில் அரியானா மந்திரி சந்தீப் சிங் மீது 5 பிரிவுகளின் கீழ் சண்டிகரில் உள்ள செக்டார்-26 போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார்.
இந்நிலையில், அமைச்சர் தனது இலாகாவை முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் நிராகரித்துள்ள அவர், இது தனது இமேஜைக் கெடுக்கும் முயற்சி என்று தெரிவித்தார். என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
- பெற்றோரிடம் விடுதி காப்பாளர் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவி தெரிவித்துள்ளார்.
- அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் ஊத்துக்குளியை அடுத்த கோணம்பட்டி பகுதியில் தனியார் விடுதி உள்ளது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளகவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக பாதிரியார் ஆண்ட்ரூஸ் என்பவர் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் பகுதியை சேர்ந்த 9-ம்வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி ஒருவரும் விடுமுறையில் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவர் பெற்றோரிடம் விடுதி காப்பாளர் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தனர்.
புகாரில் விடுதி காப்பாளரும் பாதிரியாருமான ஆண்ட்ரூஸ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன் வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் ஆண்ட்ரூசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவி- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பரணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அறிவியல் பாடங்கள் சம்பந்தமாக மாணவிகளுக்கு பாடங்கள் குறித்த விளக்கம் அளிக்கவும் செய்முறை தேர்வு குறித்து பயிற்சி அளிக்கவும் தனியாக வாட்ஸ்அப் குழு அமைத்துள்ளார்.
இந்த குழுவில் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் உள்ளனர்.
இந்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள மாணவிகள் சில பேருக்கு ஆசிரியர் பரணி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் வீடியோ காலில் வரும்படி அச்சுறுத்தியுள்ளார்.
மாணவிகளிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் அவரது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இன்று காலை சாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்தனர். பள்ளி வகுப்பறையில் இருந்த ஆசிரியர் பரணியை அவர்கள் திடீரென தாக்கினர். அங்கிருந்தவர்கள் ஆசிரியரை மீட்டனர்.
மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் ஆசிரியர் பரணியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சவரிமுத்து(வயது 78).
இவர் சம்பவத்தன்று 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து சிறுமியை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சவரி முத்துவை கைது செய்தார்.
- கோவா மாநிலம் மோபாவில் சமீபத்தில் புதிதாக சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
- விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது.
மானம் கப்பலில் போய்விட்டது என்று சொல்வதுண்டு. இப்போது பலரது மானம் விமானத்தில் போகிறது...
விமானத்தில் பறப்பவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களும் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்வார்களா என்று சாமானிய மக்கள் ஆச்சரியப்படும் வகையில் ஆகாயத்திலும் சில்மிஷ அத்துமீறல்கள் நடைபெறுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விமானத்தில் முன் இருக்கையில் இருந்த பெண்ணின் இடுப்பை பின் இருக்கையில் இருந்து கிள்ளிய கேரள மந்திரியின் பதவியே காலியானது.
பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி சங்கர் மிஷ்ரா நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்து கொண்டது. 3 மாதங்களுக்கு பிறகு வெளிவந்து அவரை உள்ளே தள்ளியிருக்கிறது.
மனிதர் இப்படியா இருப்பார்? பெண் பயணி அருகில் சென்று பேன்ட் ஜிப்பை கழட்டி மூத்திரம் பெய்து இருக்கிறார். ஆடையெல்லாம் நனைந்து போன அந்த பெண் விமான பணிப்பெண்கள் உதவியுடன் சுத்தப்படுத்தி மாற்று உடை அணிந்து பயணித்து இருக்கிறார்.
பயணிகளின் இந்த மாதிரி அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது எப்படி என்று விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கோவா மாநிலம் மோபாவில் சமீபத்தில் புதிதாக சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது.
பயணிகள் மத்தியில் தோன்றி விமான பணிப்பெண்கள் விமானத்தில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி என்று பாதுகாப்பு ஒத்திகைகளை செய்கைகள் மூலம் செய்து காட்டி கொண்டிருந்தார்.
அப்போது ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்த 2 ரஷிய நாட்டு பயணிகள் அந்த பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களது பார்வையும், சைகைகளும் எல்லை மீறிக் கொண்டிருந்ததை சக பயணிகள் சிலரும் கவனித்து கொண்டிருந்தார்கள்.
திடீரென்று விமான பணிப்பெண்ணை பார்த்து 'வா... என் அருகே வந்து உட்கார்' என்று அழைத்தனர். ஆனாலும் பாராமுகமாக இருந்த அந்த பெண்ணை விட்டபாடில்லை. அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்த மற்ற பயணிகள் 'இவர்களோடு பறப்பது சிரமம். இறக்குவதே நல்லது' என்றனர்.
இதையடுத்து அந்த பயணிகள் இருவரையும் பிடித்து மத்திய பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் விமான பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
- குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
- ஆசிரியர் பைசல் மேச்சேரி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கவுன்சிலிங் நடத்தியது.
அப்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பைசல் மேச்சேரி மீது மாணவிகள் 5 பேர் புகார் கூறினர். அவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் பைசல் மேச்சேரி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பைசல் மேச்சேரியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெகதீஸ், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று கூறினார்.
- மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸை கைது செய்தனர்.
குளச்சல்:
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 31), தொழிலாளி.
இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு 10 வயது சிறுமி தனது தாயாருடன் வந்துள்ளார். சம்பவத்தன்று காலை 9 மணியளவில் சிறுமியின் பாட்டி மற்றும் தாயார் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றனர். இந்த நேரத்தில் சிறுமி தனது பாட்டி வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகதீஸ், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு ஜெகதீஸ் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து குளச்சல் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸை கைது செய்தனர்.
- நாளுக்குநாள் நல்ல மருதுவின் தொல்லை அதிகரிக்க தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
- அதிர்ச்சியடைந்த தாய் அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினர் நல்லமருது (வயது 37) என்பவர் வீட்டின் அருகில் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் மாணவி தனியாக இருக்கும்போது நல்லமருது வீட்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்.
நாளுக்குநாள் நல்ல மருதுவின் தொல்லை அதிகரிக்க தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நல்லமருது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் நல்லமருதுவை கைது செய்தனர்.
- புதுவை கிராமப் பகுதியில் இருந்து பயிற்சிக்கு வந்த மாணவிக்கு சண்முகம் செல்போன் மூலம் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- சம்பந்தப்பட்ட கிராமப் பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாகூர்:
பாகூர் பழைய காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). இவர் புதுவையில் உள்ள சாய் விளையாட்டு கழகத்தில் கைப்பந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இவரிடம் புதுவை பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சேர்ந்து கைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அதில் புதுவை கிராமப் பகுதியில் இருந்து பயிற்சிக்கு வந்த மாணவிக்கு சண்முகம் செல்போன் மூலம் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கிராமப் பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட கைப்பந்து பயிற்சியாளர் சண்முகத்தைவலை வீசி தேடி வருகின்றனர்.
- சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அழைத்து சென்று தன்னை கற்பழித்ததாக இளம்பெண் புகார் கூறியிருந்தார்.
- புகார் தொடர்பாக போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மார்ட்டின் செபாஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் மார்ட்டின் செபாஸ்டின். சினிமா தயாரிப்பாளர்.
மலையாள திரையுலகில் பல படங்களை தயாரித்து உள்ள மார்ட்டின் செபாஸ்டின் மீது திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மார்ட்டின் செபாஸ்டின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.
மார்ட்டின் செபாஸ்டின் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 2000-ம் ஆண்டு இந்த சம்பவங்கள் நடந்ததாகவும் கூறி இருந்தார்.
மேலும் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அழைத்து சென்று தன்னை கற்பழித்ததாகவும் புகார் கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மார்ட்டின் செபாஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த குற்றச்சாட்டுகளை மார்ட்டின் செபாஸ்டின் மறுத்தார். மேலும் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, எர்ணாகுளம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து போலீசார் மார்ட்டின் செபாஸ்டினிடம் விசாரணை நடத்தினர். 72 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். பாலியல் புகாரில் சினிமா தாயரிப்பாளர் மார்ட்டின் செபாஸ்டின் கைது செய்யப்பட்டது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.