search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "House collapses"

    • இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்த 3 மாற்றுத்திறனாளி சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் வரை பலியாகி விட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ஸ்வார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டியது. இந்த மழைக்கு அஜனாபுத்தூர் என்ற கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்த பப்பு குமார், சாஜன்குமார், ராஜேஸ்குமார் ஆகிய 3 மாற்றுத்திறனாளி சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் 3 பேருக்கும் பிறவியிலேயே கண் பார்வை தெரியாது.

    இது பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றி 3 சகோதரர்களின் உடல்களை மீட்டனர். அவர்களது குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் வரை பலியாகி விட்டனர்.

    வால்பாறையில் கன மழைக்கு வீடு இடிந்து பெண் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #Rain

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 7 -ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்று 6-வது நாளாக மழை நீடிக்கிறது.

    கனமழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தும், மண்சரிவு ஏற்பட்டும் மரங்கள் விழுந்தும் மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    வால்பாறை காமராஜ்நகர் பகுதியில் உள்ள மல்லிகா என்பவரின் வீடு கனமழையால் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த மல்லிகாவின் சகோதரி உமா மீது ஓடுகள் விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மழை மற்றும் சூறை காற்று காரணமாக தேயிலைத் தோட்ட பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் ஒரு சில எஸ்டேட் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். #Rain

    ×