search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "human chain struggle"

    • தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.
    • மனித சங்கிலி போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கள் முன்னாள் அமைச்சர் கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.

    மாநகராட்சிக்குட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதி களில் இன்று காலை 10.30 மணி அளவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.

    சென்னையில் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    மாநகராட்சிக்குட்பபட்ட 200 வார்டுகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. ராயபுரம் எம்.சி. ரோடு சுழல் மெத்தை பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரும் பங்கேற்று கை கோர்த்து நின்றனர்.

    வில்லிவாக்கம், கொளத்தூர் உள்பட 7 இடங்களில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு பங்கேற்றார். இங்கும் அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே திரளான தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்பகுதியில் மொத்தம் 14 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

    அண்ணாநகர் மண்டல அலுவலகம் அருகில் பகுதி செயலாளர் தசரதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் திரண்ட அ.தி.மு.க. வினர் நீண்ட தூரம் மனித சங்கிலியில் கைகோர்த்து நின்றனர்.

    சென்னை வால்டாக்ஸ் ரோடு மண்டல அலுவலகம் அருகில் நடைபெற்ற மனித சங்கிலியில் மாவட்ட செயலாளர் பாலகங்கா மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


    மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக் ள்ளிட்டோரும் தங்களது பகுதிக்குட்பட்ட இடங்களில் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

    மதுரவாயலில் பகுதி செயலாளர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அம்பத்தூரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத் தில் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் பங்கேற்றார். திருமங்கலத்தில் பகுதி செயலாளர் மோகன் தலைமையில் நடந்த மனித சங்கிலியில் வெங்கடேஷ் பாபு கலந்து கொண்டார்.

    தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 13 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 128-வது வார்டுக் குட்பட்ட விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் விருகை ரவி தொண் டர்களுடன் கலந்து கொண்டார்.

    127-வது வார்டுக்கு உட்பட்ட கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலை 129-வது வார்டு அருணாசலம் ரோடு 136-வது வார்டு பிடிராஜன் சாலை, 137-வது வார்டு வெங்கட்ராமன் சாலை, 138-வது வார்டு அண்ணா மெயின் ரோடு, 139 ஜாபர்கான் பேட்டை ஜோன்ஸ் ரோடு, 140-வது வார்டு கோடம்பாக்கம் ரோடு மேட்டுப்பாளையம், 142 அண்ணாசாலை அம்மா பூங்கா அருகில் 168-வது வார்டு ஈக்காடுதாங்கல் அம்பாள் நகர், 169 சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவில் அருகில் 170-வது வார்டு கோட்டூர்புரம், 172-வது வார்டு ரேஸ்கோர்ஸ் ரோடு ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சைதை சுகுமார், ஷேட்அலி, சி.கே.முருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


    சென்னை புறநகர் மாவட் டத்தில் சோழிங்க நல்லூர், ஆலந்தூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சோழிங்கநல்லூர் தொகுதியில் மாவட்ட தலைமை அலுவலகம் அருகேயும் கந்தன்சாவடியில் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதேபோல் தொகுதி முழுவதும் 30 இடங்களில் ஆலந்தூர் தொகுதிக் குட்பட்ட பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்க ளில் நடந்தது. ஆலந்தூர் கிழக்கு பகுதியில் பகுதி செயலாளர் பரணி பிரசாத் தலைமையில் லேபர் கிணறு தெரு, நங்கநல்லூர் 4-வது பிரதானசாலை, ஆதம்பாக்கம் சக்தி நகர், நங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர். சாலை துர்கா பவன் அருகிலும், மீனம் பாக்கம் வ.உ.சி. நகர் ஆகிய இடங்களிலும் நடந்தது.

    அ.தி.மு.க.வில் உள்ள 82 மாவட்ட செயலாளர்களும் இன்று தங்களது பகுதியில் மனித சங்கிலி போராட் டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள். அனைத்து மாநகராட்சி பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இன்று அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 63 சுங்க சாவடிகளில் சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி வாலாஜா அடுத்த சென்ன சமுத்திரத்தில் உள்ள டோல்கேட்டில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம்,மாவட்ட அவை தலைவர் காசிநாதன், மாவட்ட துணை செயலாளர் பிரபாகரன், வாலாஜா ஒன்றிய செயலாளர் தியாகராஜன், பூபாலன், நகர செயலாளர்கள் செந்தில், குட்டி (எ) ஜஸ்டின் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் பஸ் நிலையம் அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், சித்ரா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

    பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண் டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை தொகுப்பு ஊதி யம், மதிப்பு ஊதியம் ஆகிய வற்றை மாற்றி அனைவருக் கும் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கவேண்டும், மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    • வருகிற 24-ந் தேதி நடக்கிறது
    • ஜாக்டோ ஜியோ காட்பாடி வட்ட உயர்மட்ட குழு தீர்மானம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் காட்பாடியில் நடைபெற்றது.

    மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தன்ன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஜாக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட பொருளாளர் ஆர்.கற்பகமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெ.வில்வநாதன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெ.இளங்கோ, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச்-24-ந் தேதி வேலூர் காந்திசிலை, அணைகட்டு, பேர்ணாம்பட்டு மற்றும் கே.வி.குப்பம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்பாடி, குடியாத்தம், தாசில்தார் அலுவலகம் அருகில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து புதுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. #pollachimolestation
    புதுக்கோட்டை: 

    பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிறப்பு நீதிபதியின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அழுத்தங்களுக்கு போலீசார் அடிபணியக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

    மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, தி.மு.க. மகளிர் அணி சார்பில் ராஜேஸ்வரி, கவிதைப்பித்தன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் மதியழகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.நாராயணன், இந்திய மாணவர் சங்க துணை செயலாளர் ஜனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #pollachimolestation
    7 பேர் விடுதலைக்காக நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கவில்லை. நாங்கள் அதில் பங்கு கொள்ள மாட்டோம் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko
    சென்னை:

    நக்கீரன் கோபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது அவரை சந்திப்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு சென்றார்.

    அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் துணை கமி‌ஷனர் அலுவலகம் முன்பு வைகோ தர்ணா போராட்டம் செய்தார்.

    போலீசார் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 190, 290, 353 ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை எழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    அதில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அப்போது போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், எனவே வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறியுள்ளனர்.

    இதையடுத்து வைகோ கோர்ட்டில் ஆஜர் ஆக சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்று எழும்பூர் கோர்ட்டில் வைகோ இன்று ஆஜர் ஆனார்.

    அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பிறகு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலைக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. வழக்கு விசாரணைக்காகவும் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

    இதன் தொடர்ச்சியாக 3 பேரின் தூக்கு தண்டனை ரத்தானது. எந்தெந்த வழிகளில் எல்லாம் 7 பேருக்காக நான் போராடினேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இப்போது தமிழ் ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியும் தமிழக கவர்னர் காலதாமதம் செய்து கொண்டே இருக்கிறார்.

    இதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசே காரணம். தமிழக அரசும் அதற்கு துணை போகிறது.

    தற்போது நடைபெற உள்ள மனிதசங்கிலி போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கவில்லை. நாங்கள் அதில் பங்கு கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    7 பேர் விடுதலைக்காக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வைகோ ஆதரவு தெரிவிக்க மறுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சென்னை எழும்புரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உயர்நிலைக் கூட்டம் நடந்தது. இதில் வைகோ பங்கேற்றார்.

    கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. #MDMK #Vaiko

    ×