search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Humidity"

    • ரூ. 44 லட்சம் மதிப்புள்ள பருத்தி வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது.
    • ஈரப்பதம் இன்றி விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.

    பாபநாசம்:

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனனக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.

    பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 376 விவசாயிகள் தங்களது பருத்தியினன விற்பனறக்கூ டத்திற்குனை கொண்டு வந்த நிலையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வணிகர்கள், ஆந்திர மாநில வணிகர்கள் மொத்தம் 10 வணிகர்கள் இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    விற்பனைக்குழு செயலாளர் சரசு, விவசாயி களிடம் பருத்தியினை நன்கு உலர வைத்து ஈரப்பதம் இன்றி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கேட்டுக் கொண்டார்.

    இம்மறைமுக ஏலத்தில் 65 மெ.டன் அளவுள்ள ரூ. 44 லட்சம் மதிப்புள்ள பருத்தி யானது வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது.பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6,769 , குறைந்தபட்சமாக. ரூ.5,329, சராசரியாக ரூ.6,189-க்கும் விலை போனது.

    மேலும் இம்மறைமுக ஏலத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி , விளம்பரம் மற்றும் பிரசார சித்தார்த்தன், அன்பரசு உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பனிப்பொழிவு இருப்பதால், காய வைத்தாலும் நெல்லில் ஈரப்பதம் குறைவதில்லை.
    • 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூா்:

    டெல்டா மாவட்டங்களில் இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பெய்த பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கரில் நெல், உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிா்கள் பாதிக்கப்பட்டன.

    அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிா்கள் சாய்ந்துவிட்டதாலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களில் ஈரப்பதம் அதிகமாகிவிட்ட தாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

    எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

    இதுதொடா்பாக மத்திய அரசுக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, இந்திய உணவு கழகத்தின் தரக்கட்டு ப்பாட்டு பிரிவு தொழில்நுட்ப அலுவலா்கள் பிரபாகரன் தலைமையில் தொழில்நுட்ப அலுவலா்கள் யூனுஸ், போயா ஆகியோா் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று மாலை ஆய்வு செய்தனா்.

    முதலில் தஞ்சாவூா் மாரியம்மன்கோவில் அருகேயுள்ள அருள்மொழி ப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல் குவிய ல்களில் நெல் மணிகளை அள்ளி, எந்த அளவுக்கு ஈரப்பதம் இருக்கிறது என்பதைப் பாா்த்தனா்.

    மேலும், ஈரப்பதம் கணக்கிடும் கருவியிலும் சேகரிக்கப்பட்ட நெல் மாதிரிகளை வைத்து பரிசோதித்தனா். இதன்மூலம் கிடைத்த தகவல்களைப் பதிவு செய்து கொண்டனா்.

    அப்போது, தொடா்ந்து பனிப்பொழிவு இருப்பதால், காய வைத்தாலும் நெல்லில் ஈரப்பதம் குறைவதில்லை என்றும், அதனால், நீண்ட நாள்களாக கொள்முதல் நிலையத்திலேயே காத்திருப்ப தாகவும், எனவே 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் மத்தியக் குழுவினரிடம் விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் வெ. ஜீவகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், புலவன்காடு வி. மாரியப்பன் உள்ளிட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.

    இதேபோல, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் உமாமகேஸ்வரியும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பது குறித்து மத்தியக் குழுவினரிடம் விளக்கிக் கூறினா்.

    இதைத் தொடா்ந்து, ஒரத்தநாடு வட்டத்திலுள்ள பாப்பாநாடு, பட்டுக்கோ ட்டை வட்டத்திலுள்ள அலிவலம், பில்லங்குழி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

    மத்தியக் குழுவினரின் ஆய்வு குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது :-

    ஒவ்வொரு இடத்திலும் மத்தியக் குழுவினா் மூன்று மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை செய்தனா். ஆய்வு அறிக்கைகளை ஒருங்கிணைத்து, தலைமை யகத்துக்கு அனுப்பிவைப்பா். இது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

    • நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 328 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நெல்கொள்முதல் பதிவேடு, சாக்குகள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டையும், நெல் மூட்டை எடை எந்திரத்தின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து, முத்துப்பேட்டை தாலுகா கற்பகநாதர்குளம் கிராமத்திலுள்ள பல்நோக்கு பேரிடர் மையத்தில் சாய்தளம், குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள் உள்ளிட்டவைகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர், கள்ளிக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு வருவாய் துறையின் பயிர் சாகுபடி பதிவேட்டில் சரியாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் இதுவரை 328 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8425 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கான தொகையாக ரூ. 91 கோடியே 21 லட்சத்து 2 ஆயிரத்து 360 சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×