search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Husband and wife suicide"

    பிள்ளைகள் இல்லாத ஏக்கம், நோய் ஆகியவற்றால் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 80). இவரது மனைவி வள்ளியம்மாள் (70). இந்த தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முருகன் பந்தல் அமைக்கும் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தார்.

    உடல் நலக்குறைவு காரணமாக தொழிலை கைவிட்டார். வள்ளியம்மாள் ஜவுளி நிறுவனங்களுக்கு தினக் கூலி அடிப்படையில் ஆட்களை அனுப்பும் தொழிலை மேற்கொண்டு வந்தார். அதில் கிடைக்கும் கமி‌ஷன் தொகையை கொண்டு கணவன், மனைவி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருகனுக்கு பக்கவாதம் நோய் வந்தது. அவரது உறவினர்கள் முருகனை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் நோய் முற்றிலும் குணமாகவில்லை. மேலும் அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.

    தொடர்ந்து அவரது உறவினர்கள் உதவிகள் செய்து வந்த போதிலும் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. உறவினர்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று அடிக்கடி கணவன், மனைவி இருவரும் வருத்தப்பட்டு வந்தனர். எனவே அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

    நேற்று இரவு தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் வி‌ஷ மாத்திரைகளை தம்பதியினர் இருவரும் தின்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு அருகில் வசித்து வரும் முருகனின் சகோதரர் மகன் ரவி ஓடிவந்து பார்த்தார்.

    அங்கு இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் முருகனும், அவரை தொடர்ந்து வள்ளியம்மாளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தனியார் விடுதியில் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு அங்குள்ள தனியார் விடுதிக்கு கணவன்-மனைவி என 2 பேர் வந்தனர். அவர்கள் ஈரோட்டில் இருந்து வருவதாக கூறி அறை எடுத்தனர்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது அறை திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் விரைந்து வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கட்டிலில் பெண்ணும், தரையில் அவரது கணவரும் பிணமாக கிடந்தனர். அவர்களது அருகே வி‌ஷ பாட்டிலும் கிடந்தது.

    எனவே 2 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அந்த அறையை சோதனையிட்டனர். அப்போது அங்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்தது. அதன் மூலம் தற்கொலை செய்தவர்கள் ஈராடு பெரிய டாசம்பர் எஸ்.எஸ்.பி. நகரைச் சேர்ந்த சரவணன் (வயது36) அவரது மனைவி காளீஸ்வரி என தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து ஈரோட்டில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காளீஸ்வரி, சரவணனுக்கு 2-வது மனைவி என உறவினர்கள் தெரிவித்தனர். 2 பேரும் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சரவணனின் உறவினர்கள் வந்த பின்னர்தான் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

    கடன் தொல்லையால் மனைவியுடன் தொழிலதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் எல். ஐ.சி. காலனி அருகே உள்ள சோமநாயக்கன்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 62). இவரது மனைவி லீலா (55). இவர்களுக்கு ராஜேஷ் (21) என்ற மகன் உள்ளார்.

    வெங்கடேசன் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மகன் ராஜேஷ் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் தங்கி ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார்.

    வெங்கடேசன் பிரபல வங்கியில் வீடு கட்டி விற்கும் தொழிலுக்காக ரூ.1½ கோடி வரை கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் முடங்கி மந்தமாக உள்ளதால் வங்கிக்கு பணம் செலுத்த முடியவில்லை.

    கடந்த ஒரு வருடமாக வெங்கடேசன் பண கஷ்டத்தில் இருந்து உள்ளார். பணத்தை திருப்பி செலுத்தாததால் வங்கியில் இருந்து அவருக்கு அதிக நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வெங்கடேசன் மனைவி லீலாவிடம் கடன் தொல்லையை கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்துள்ளனர்.

    மகன் ராஜேஷ் சென்னையில் இருந்ததால் அவரை திருச்சிக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். திங்கட்கிழமை பழனி கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று கூறி வரவழைத்துள்ளனர்.

    உடனே ராஜேஷ் ரெயில் மூலம் நேற்று மாலை புறப்பட்டு திருச்சி வந்து கொண்டிருந்தார். இரவு 9 மணிக்கு தந்தையுடன் செல்போனில் ராஜேஷ் பேசினார். அப்போது ராஜேஷை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வரும்படி வெங்கடேஷ் கூறியுள்ளார்.

    இதனால் ரெயிலை விட்டு இறங்கியதும் ராஜேஷ் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது திருச்சியில் இறங்கி விட்ட தகவலை தந்தையிடம் தெரிவிக்க அவரை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றார். அப்போது கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அதிர்ச்சியடைந்தார். ஜன்னல் வழியே பார்த்த போது வீட்டு அறையில் தந்தை வெங்கடேசனும், தாய் லீலாவும் தூக்கில் பிணமாக தொங்கினர்.

    ராஜேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இது குறித்து கே.கே.நகர் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    வெங்கடேசன், லீலா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    தற்கொலை முடிவை எடுக்கும் முன்பு முதலில் வெங்கடேசன், லீலா தம்பதியினர் மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளனர். எனவே தான் அவரை பழனி கோவிலுக்கு போக வேண்டும் என ஏமாற்றி உடனே வரவழைத்துள்ளனர்.

    ஆனால் அதன் பிறகு ஒரே மகனான ராஜேஷின் வாழ்க்கையை தாங்களே அழிக்க நினைக்க கூடாது என நினைத்து அவர் வருவதற்குள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் பிரச்சினை குறித்து தனது தந்தை தன்னிடம் கூறாமல் விபரீத முடிவை எடுத்து விட்டார் என கூறி ராஜேஷ் கதறி அழுதது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இதற்கிடைய கடன் பிரச்சினை தொடர்பாக தொழிலதிபர் வெங்கடேசனை நேரில் யாரும் மிரட்டினார்களா? என அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா மூலமும் செல்போனில் பேசி மிரட்டிய வங்கி ஊழியர்கள் யார் என போனில் உள்ள அழைப்புகள் மூலமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×