என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Icome Tax"
- வருமான வரி மூலமாக டெல்லி 2 லட்சம் கோடி ரூபாய் பங்களித்துள்ளது.
- டெல்லி மாநிலத்தில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வரி வசூல் செய்த போதிலும், மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரி பகிர்வு மிகவும் குறைவு என தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு மீது தொடர்ந்த குற்றம்சாட்டி வருகின்றன.
அந்த வகையில் தற்போது டெல்லி மாநில அரசும் மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெல்லி மாநில மந்திரி அதிஷி கூறியதாவது:-
மத்திய ஜிஎஸ்டி மூலம் டெல்லி மாநிலம் மத்திய அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வருமான வரி மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் டெல்லி மாநிலத்தில் இருந்து மத்திய அரசு வசூலித்துள்ளது. ஆனால் டெல்லி அரசு கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து கேட்கிறது. ஆனால் கடந்த ஆண்டு ஒரு பைசா கூட மத்தயி அரசு தரவில்லை.
2001-ல் இருந்து மத்திய வரிகளில் இருந்து டெல்லி மாநிலத்திற்கு 325 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி வந்தது. எனினும் இந்த தொகை கடந்த வருடம் நிறுத்தப்பட்டது. தற்போது நாங்கள் சிங்கிள் பைசா பெறவில்லை.
இவ்வாறு அதிஷி தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
- பெண்கள் தங்கள் வருமானத்திற்கு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெற முடியும்.
- பெண்களில் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 5 லட்சம் வரை வரிவிகிதம் இல்லை.
நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு குடிமக்கள் செலுத்தும் வரிப்பணம் முக்கியமானது. வருமான வரி செலுத்துவதில் ஆண்-பெண் பாகுபாடு கிடையாது.
இந்திய மக்கள் தொகையில் 48 சதவீதம் பெண்கள் உள்ளனர். இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெண்களின் பங்கு குறைவாகவே இருந்தது. பெண் தொழில் முனைவோர் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே இதற்குக் காரணம். சமீபகாலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் பொருளாதார ரீதியாக விழிப்புணர்வோடு இருப்பதும், பொருளாதார பலத்தை அதிகரிப்பதும் அவசியமானது.
இந்திய சுதந்திரப்போரின்போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவும், சமூகத்தை கட்டமைக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் 1860-ம் ஆண்டு ஜூலை 24-ம் நாள் வருமானவரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2010-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் வருமானவரி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வருமானவரி செலுத்துவதில் ஆணும், பெண்ணும் சமம் என்றாலும், பெண்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வருமானவரியானது சம்பளம், சொத்து, தொழில், மூலதன ஆதாயங்கள், நிலையான வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்குகளில் இருந்து பெறப்படும் வட்டி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
2.5 லட்சம் வரை வருமானம் உள்ள, 60 வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு வரிவிகிதம் இல்லை. பெண்களில் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 5 லட்சம் வரை வரிவிகிதம் இல்லை.
பெண்கள் தங்கள் வருமானத்திற்கு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெற முடியும். தேசிய சேமிப்பு சான்றிதழ், ஓய்வூதிய திட்டம், பணியாளர் வருங்கால வைப்பு நிதி, ஈக்டிவிட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள், சுகன்ய சம்ரித்தி யோஜனா முதலியன இதில் அடங்கும்.
பெண்களின் கல்வி கடனுக்கு செலுத்தப்படும் மொத்த வட்டியில் இருந்து விலக்கு அனுமதிக்கப்படுகிறது. உடல்நல காப்பீடு திட்டங்களுக்கு பிரிவு 80D சில வரம்புகளை முன்வைத்து வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கிறது. இதில் மகப்பேறு காப்பீடும் அடங்கும். இதன்மூலம் குறைந்தது ரூ.25,000 முதல் வரிவிலக்கு பெறலாம்.
காப்பீட்டு வருடாந்திர திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ரூ.1,50,000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டு விலக்கு அளிக்கப்படுகிறது. உடல் ஊனமுற்றோர் மற்றும் மனநல குறைபாடு உடைய பெண்களுக்கான மருத்துவச் சிகிச்சையில் 40 முதல் 80 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.
வரிசெலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லாத பெண்களும் வருமானவரி படிவம் தாக்கல் செய்யலாம். வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடியேற விரும்பினால், நீங்கள் செலுத்தியுள்ள வருமான வரி தாக்கல் படிவம் உதவும். வீட்டுக் கடன், கார் கடன், மற்றும் இதர கடன்களுக்காக விண்ணப்பிக்கும் போது ஏற்கனவே வருமான வரி படிவம் தாக்கல் செய்ததற்கான விபரங்களை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்று பல நேரங்களில் வருமானவரி தாக்கல் விபரங்கள் நமக்கு கைகொடுக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்