search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol theft"

    • கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழக-கர்நாடக இடையே முக்கிய சாலையாக இது உள்ளது. மலைப்பாதையில் 27 அபாய கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி கனரக வாகனங்கள் பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் நூற்றாண்டு பழமையான விநாயகர் கோவில் உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த கோவில் அருகே வாகனங்களை நிறுத்தி விநாயகரை வழிபட்டு அதன் பின்னர் செல்வது வழக்கம். வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக இந்த விநாயகர் கோவில் இருந்து வந்தது. சிறுத்தை மற்றும் புலிகள் நடமாட்டத்தால் இரவு மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மலைப்பாதையில் தொடங்கும் இடத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தவும், வழிபடவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனாலும் கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் திம்பம் மலைப்பாதை வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக விளங்கிய விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலை திடீரென திருட்டு போய்விட்டது. இதனை கண்டு வாகன ஓட்டுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கோவில் உண்டியல் பணம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் உண்டியல் தப்பியது.
    • கோவிலின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்று படுக்கையில் ராதா, ருக்மணி வாசுதேவ கண்ணன் கோவில் அமைந்துள்ளது.

    நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெளிப்பக்க பூட்டுகள் உடைத்து கதவுகள் திறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்குள்ள ஒன்றரை அடி உயரம் கொண்ட 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரியவந்தது.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கோவிலை பார்வையிட்டனர்.

    கோவிலில் முன்பக்கம் இரும்பு கிரில், மூலஸ்தானத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது.

    அதேபோல மூலஸ்தானத்திலும் இரும்பு கதவு, மரக்கதவு உடைக்கப்பட்டு உற்சவமூர்த்திகள் ஆன வாசுதேவ கண்ணன், ராதா, ருக்மணி, ராமானுஜர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சிலைகள் கொள்ளை போயுள்ளது தெரியவந்தது.

    உடைக்கப்பட்ட பூட்டுகள் அனைத்தையும் கோவிலின் அருகே வீசி உள்ளனர். கோவில் உண்டியல் பணம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் கோவில் உண்டியல் பணம் தப்பியது.

    மேலும் கோவிலின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். எனவே இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அம்மையார்குப்பத்தில் ரூ.1½ லட்சம் ஐம்பொன் சிலை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த அம்மையார்குப்பம் சாந்த மலை அடிவாரத்தில் வாரியார் சுவாமிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான ஐம்பொன்னாலான வாரியார் சாமி சிலை இருந்தது.

    நேற்று காலை மடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான வாரியார் சாமிகளின் ஐம்பொன்னால் ஆன சிலை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தஞ்சை பெரியகோவிலில் இன்று சோதனை நடத்திய நிலையில் ரூ.1000 கோடிக்கு மேல் மதிப்புடை 30 சிலைகள் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #IdolSmuggling
    சென்னை:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 2½ அடி உயரம் கொண்ட ராஜராஜ சோழன் ஐம்பொன் சிலையும், அவரது பட்டத்து இளவரசியான லோகமா தேவியின் 2 அடி ஐம்பொன் சிலையும் திருடப்பட்டது. இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலேயே இருந்தது.

    சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த சில ஆண்டுகளாகவே அதிரடி சோதனை நடத்தி பழமையான சிலைகளை மீட்டு வருகிறார். அந்த வகையில் ராஜராஜ சோழன் சிலையும், லோகமா தேவி சிலையும் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    அங்குள்ள தனியார் மியூசியத்தில் இருந்து 2 சிலை களும் கடந்த மே மாதம் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த 2 சிலைகளும் பெரிய கோவி லின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தஞ்சை பெரியகோவிலில் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சுமார் 4½ மணி நேரம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கோவிலில் உள்ள ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் தஞ்சை பெரியகோவிலில் இருந்து பல்வேறு சிலைகள் மாயமாகி இருக்கும் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.


    தஞ்சை பெரியகோவிலில் மொத்தம் 66 சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட சிலைகள் மாயமாகியுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்றும் ரூ.1000 கோடிக்கும் அதிகமான மதிப்புக் கொண்டவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சிலைகள் அனைத்தும் ராஜராஜ சோழன், லோகமா தேவி சிலைகளை போல குஜராத்துக்கு கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவைகளை மீட்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை பெரியகோவிலில் இருந்து என்னென்ன சிலைகள் மாயமாகியுள்ளன என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-


    தஞ்சை பெரியகோவிலில் சுமார் 350 கிலோ எடை கொண்ட நடராஜர் சிலையும், 150 கிலோ எடை கொண்ட இன்னொரு நடராஜர் சிலையும் உள்ளது. இதில் 350 எடைக்கொண்ட சிலை தொன்மை மாறாமல் உள்ளது. 150 எடைக் கொண்ட நடராஜர் சிலை தொன்மையானது போல் காணப்படவில்லை. அதன் பின்னணி குறித்து விசாரணை நடைபெறுகிறது. இதன் மதிப்பு 100 கோடிக்கு மேலும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தங்கத்தினால் செய்யப்பட்ட கொள்கை தேவர் சிலையும், 4 வாசுதேவர் வெள்ளி சிலைகளும் காணாமல் போய் உள்ளன. அதுபற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராஜராஜ சோழனின் அக்காள் குந்தவை பிராட்டியார் தனது தாய், தந்தைக்கு 2 சிலைகளை செய்து வைத்துள்ளார். அந்த சிலைகளும் காணாமல் போய் உள்ளன.

    தனது தாய் வானவி மாதவியார், தந்தை பொன்மாளிகை துஞ்சினை தேவர் ஆகிய இருவருக்கும் சிலைகளை செய்து தினமும் பூஜைகள் செய்ய வேண்டும். அது எப்படி நடைபெற வேண்டும் என்பது போன்ற குறிப்புகளையும் குந்தவை பிராட்டியார் எழுதி வைத்துள்ளார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலைகள் செய்யபட்டுள்ளன. 2 சிலைகளுக்கும் தனித் தனியாக 2 கிரீடங்களும் இருந்துள்ளன. அதில் 3526 வைரங்களும் பதிக்கப்பட்டு இருந்தன. இப்போது இவை அனைத்தும் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. இவைகளை மீட்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பெரியகோவிலை சுற்றி மதில் சுவரை கட்டிக் கொடுத்த ராஜராஜ சோழனின் தளபதியான மும்முடி சோழ பிரம்மா ராயன், ஐம்பொன் அர்த்தனாரீஸ்வரர் சிலையை செய்து கொடுத்துள்ளார். அந்த சிலையும் இப்போது இல்லை. ஆதித்திய சூரியன் என்கிற மூவேந்தவேளார் 13 சிலைகளை செய்து கொடுத்திருக்கிறார். அவையும் காணாமல் போய் உள்ளது.

    கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலையில் சிவன்-பார்வதிக்கு நடுவில் முருகன் அணிகலன்களுடன் அமர்ந்திருப்பார். இப்போது அந்த சிலையில் முருகன் இருக்கிறார். ஆனால் அவர் தொன்மை வாய்ந்த முருகன் இல்லை. இடையில் வடிவமைக்கப்பட்டவர். இந்த முருகன் சிலையை ஏன் மாற்றி வைத்தார்கள். அதற்கு எப்படி அனுமதி பெறப்பட்டது என்பது விசாரணை நடைபெற்று வருகிறது.

    சோமஸ்கந்தர் பீடத்தின் அருகில் நீலோத் பாலாம்பிகை சிலையும் மாயமாகி இருக்கிறது. இந்த சிலைகள் அனைத்தும் எங்கு உள்ளன என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள பழமையான சிலைகளில் பெரும்பாலானவற்றை மாற்றிவிட்டு அதற்கு பதில் புதிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுபற்றியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    தஞ்சை பெரியகோவிலில் 66 சிலைகள் இருப்பதாக கோவில் விமானத்தில்தான் குறிப்பு உள்ளது. அதனை பின்னணியாக வைத்தே சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். காணாமல் போன சிலைகள் பற்றி இதற்கு முன்னர் பணியில் இருந்த அதிகாரிகளிடமும், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக பெரியகோவில் சிலைகள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. #ThanjavurPeriyaKovil #IdolTheft #IdolSmuggling #PonManickavel
    உண்டியல்களை மட்டும் கவனித்தவர்கள் சிலைகளை மறந்து விட்டார்கள் என கோவில் சிலை திருட்டு குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். #IdolTheft #TamilisaiSoundararajan
    சென்னை:

    சென்னை தொழில் அதிபர் வீட்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் சிலைகள் மீட்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    சென்னை சைதாப்பேட்டையில் தமிழக கோவில்களில் காணாமல் போனதாக கருதப்படும் 80-க்கும் மேற்பட்ட சிலைகளை தேடி கண்டுபிடித்த சிலை தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மற்றும் காவல் துறையின் பணி பாராட்டத்தக்கது.

    தமிழக அரசின் அறங்காவலர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஆலயங்களில் உள்ள கடவுள் சிலைகளை காக்க தவறிய உண்மை நிரூபணமாகிறது.

    உண்டியல்களை மட்டுமே கவனித்தவர்கள் சிலைகளை கண்காணிக்க மறந்தது ஏன்? இந்து ஆலய நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IdolTheft #TamilisaiSoundararajan
    சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சென்னையில் நேற்று தொழிலதிபர் வீட்டில் தனது குழுவினருடன் சோதனை செய்வதற்கு முன்பாக தன்னையே சோதனைக்கு உட்படுத்தியது வியப்பை ஏற்படுத்தியது. #IdolSmuggling #PonManickavel #StatueSmuggling
    சென்னை:

    ஒரு இடத்தில் போலீசார் சோதனையிட செல்லும் போது சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது.

    குறிப்பாக சோதனையிடச் செல்லும் போலீசாரை, வீட்டில் இருப்பவர்கள் சோதனை செய்துதான் உள்ளே அனுப்ப வேண்டும். இது பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதே இல்லை.

    நேற்று ரன்வீர்ஷாவின் வீட்டில் நடந்த சோதனையின் போது ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இதனை முழுமையாக கடை பிடித்தார்.

    சிலை தடுப்பு பிரிவு போலீஸ் படையுடன் ரன்வீர் ஷாவின் வீட்டுக்கு பொன்.மாணிக்கவேல் சென்றபோது, அங்கு வக்கீல்கள் இருந்தனர். ரன்வீர்ஷாவின் செயலாளராக பணியாற்றும் பெண் ஒருவரும், பணியாட்கள் சிலரும் வீட்டில் இருந்தனர்.


    அவர்களிடம் பொன்.மாணிக்கவேல், என்னையும், என்னோடு வந்துள்ள சக போலீசாரையும் நீங்கள் முதலில் சோதனை நடத்த வேண்டும். அதன் பின்னரே நாங்கள் உள்ளே செல்வோம் என்று கூறினார்.

    இதனை ஏற்று, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் முதலில் சோதனைக்குட்படுத்தப்பட்டார். பின்னர் அவருடன் சென்ற போலீசாரும் சோதனை செய்யப்பட்டனர். இதன் பிறகு ரன்வீர்ஷாவின் வீட்டில் சோதனை நடைபெற்றது.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் எப்போதுமே வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளும் அதிகாரி ஆவார். நேற்று அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. #IodlSmuggling #PonManickavel #StatueSmuggling
    ×