search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "including a woman"

    • பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் சோதனையிலும் ஈடுபட்டனர். இதில் ஈரோடு பஸ் நிலையம் அருகில் மது விற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்தனர்.

    கருங்கல்பாளையம் போலீசார் நடத்திய சோதனையில் சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்த மல்லிகா (42) என்பவரை கைது செய்தனர்.

    பவானி போலீசார் நடத்திய சோதனையில் சீனிவாசபுரத்தை சேர்ந்த சின்னமணி (34) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல ஆப்பக்கூடல், அம்மாபேட்டை, கோபி, மலையம்பாளையம், கவுந்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.
    • அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலை மையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் வீரப்பன்சத்திரம் கருப்பன் தெருவை சேர்ந்த சுதர்சன் (21), பெரியேசேமூர் பகுதி சேர்ந்த விக்னேஷ் (26), சூளை பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் (24), அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (25), வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்களிட மிருந்து 86 போதை மாத்திரைகள், 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை யடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்ட னர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படு த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். 

    • ஒரு பெண் உள்பட 9 பேர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன், ஈரோடு தெற்கு, கருங்கல்பாளையம், கடத்தூர், சத்தியமங்கலம்,

    கவுந்தப்பாடி, சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் ஒரு பெண் உள்பட 9 பேர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 67 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • யாரோ மர்மநபர் நித்யா கைப்பையில் வைத்து இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போனை திருடி தப்பிச் சென்றனர்.
    • இதுகுறித்து குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை

    கோவை சின்னதடாகத்தை சேர்ந்தவர் நித்தியா (வயது 32). கூலி தொழிலாளி. இவர் நேற்று டவுன் பஸ்சில் துடியலூரில் இருந்து டவுன்ஹால் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் நித்யா கைப்பையில் வைத்து இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போனை திருடி தப்பிச் சென்றனர். இது நித்தியா பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புலியகுளம் பஜார் வீதியை சேர்ந்தவர் கமலம் (62). வீட்டு வேலை செய்து வருகிறார் . இவர் நேற்று டவுன் பஸ்சில் தனது வீட்டில் இருந்து வரதராஜா மில்லுக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை பறிந்து சென்றனர். இது குறித்து கமலம் கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பீளமேட்டை சேர்ந்தவர் குப்புசாமி (67). இவர் நேற்று டவுன் பஸ்சில் பீளமேட்டிலிருந்து சித்ராநோக்கி சென்றார். அப்போது குப்புசாமி பாக்கெட்டில் வைத்து இருந்த ரூ.16 ஆயிரத்தை யாரோ திருடி சென்றனர். இதுகுறித்து குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.
    • அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியம ங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கட்டப்பை ஒன்று வைத்திருந்தார்.

    அதனை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 3.480 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் கோபி தாலுகா, பெருமுகை, காந்தி நகரை சேர்ந்த முருகன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் முருகன் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3,480 ஆகும். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோல் கொடுமுடி அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்றதாக சரளா என்ப வரை போலீசார் கைது செய்தனர். அவரிட மிருந்து 23 புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேப்போல் வீரப்பன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் பாக்கெட்டை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த முத்துபாண்டி (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
    • அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் சட்ட விரோத விற்பனையை தடுக்கும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, அவரிட மிருந்து 100 கிராம் கஞ்சாவை மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல, பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஜம்பை, மின்வாரிய அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து, அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஜம்பையைச் சேர்ந்த சுமதி (40) ஒரிச்சேரிப் புதூரைச் சேர்ந்த ஆறுமுகம் (60) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிட மிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

    ×