search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase in sales"

    • சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேஷம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக வெள்ளி நகை தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    சேலம்:

    சேலம் வெள்ளி கொலுசு கலைநயங்களுடன் தயாரிக்கப்ப டுவதால் அதற்கென தனி மவுசு உண்டு.இதனால் சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேஷம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக வெள்ளி நகை தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதனால் வெள்ளி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான பட்டறைகளும், அதனை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிக மான தொழிலாளர்களும் உள்ளனர். குறிப்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, நங்க வள்ளி, ஜலகண்டாபுரம் உள்பட பல பகுதிகளில் அதிக அளவில் கொலுசு பட்டறைகள் உள்ளது. இதன் மூலம் அதிக அளவில் சேலத்தில் கொலுசு, தண்டை, அரைஞான் கொடி உள்பட வெள்ளி நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி கொண்டா டப்பட உள்ளது. இதனால் தற்போதே வெள்ளி கொலுசு உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே கடந்த வாரம் 74 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளி தற்போது 69 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் ஒரே வாரத்தில் கிலோவுக்கு 5 ஆயிரம் சரிந்துள்ளதால் வெள்ளி கொலுசு உட்பட நகைகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தற்போது வெள்ளி நகைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    மேலும் வட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வெள்ளி கொலுசுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் வெள்ளி தொழில் சுறு சுறுப்பு அடைந்துள்ளது. இனி வரும் நாட்கள் பண்டிகை காலம் என்ப தால் வெள்ளி கொலுசு உட்பட வெள்ளி நகைகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பதால் வெள்ளி பட்டறையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • இங்கிருந்து குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தேங்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, கோவை, பெருந்துறை, ஈரோடு, காங்கேயம், தாராபுரம், அவல் பூந்துறை, அரச்சலூர், உடுமலைப்பேட்டை, திருப்பூர், பர்கூர், காவேரிப்பட்டணம், சூளகிரி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கர்நாடகா மாநிலம் மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், ஆனூர், ஏலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கிருந்து குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தேங்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் நெய் தேங்காய், சிதறு தேங்காய் அய்யப்பன் கோவிலுக்கு வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக தேங்காய் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு , ஆனந்தா மார்க்கெட், பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவு தேங்காய் ரூ.8- ரூ.10 , நடுத்தர அளவு தேங்காய் ரூ‌.12 - ரூ.15 , பெரிய அளவு தேங்காய் ரூ. 20- ரூ.22 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ், ஜனவரி மாதம் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை சீசன் வரை விற்பனை நன்றாக இருக்கும்.

    இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    சேலம் மார்க்கெட்டுக்கு தினமும் 400 டன் வரை தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சில்லரை வியாபாரிகள் தேங்காயை விற்பனைக்கு வாங்கிச் செல்கின்றனர். மழை காரணமாக தேங்காய் வரத்தானது சற்று குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் தேங்காய் டன் ஒன்றுக்கு ரூ.5000 வரை விலை உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் சீசன் களை கட்டியுள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். இதற்கு பெரிய அளவில் உள்ள தேங்காயும், சாமி சிலை சன்னதியில் உடைக்க சிறிய அளவில் உள்ள தேங்காயும் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாரத்தில் தேங்காய் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்து இருந்தாலும் விலை உயர்த்தப்படவில்லை.

    இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

    ×