search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspector wife"

    ஓய்வு பெற்ற இன்ஸ் பெக்டர் மனைவியிடம் பணப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதன் பறித்துச் சென்றான்.

    மதுரை:

    மதுரை எஸ்.எஸ்.காலனி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் குமரவேல். இவர் ரெயில்வே பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி ஷோபாராணி (வயது 56). இவர் நேற்று இரவு மகளுடன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார்.

    அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோவில் ஏறி தாயும், மகளும் சென்றனர். ஷோபாராணி கைப்பை ஆட்டோவின் வெளியே தெரிந்தபடி இருந்துள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதன், மோட்டார் சைக்கிளில் வந்து கைப் பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஷோபாராணி, எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அதில் பறிபோன கைப்பையில் 3 பாஸ்புக், ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, செல்போன், கார் ஆர்.சி.புக், மற்றும் ரூ.13 ஆயிரம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கில் வந்து வழிப்பறி செய்தவனை தேடி வருகின்றனர்.

    இதேபோல் ஜெய்ஹிந்த்புரம் சுந்தர் ராஜபுரம், ஜே.ஜே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (68) இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்த நேரத்தில், யாரோ கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    அவர்கள் அங்கிருந்த ரூ. 25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக ஜெய்ஹிந்த்புரம் போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கணபதியில் முன்விரோத தகராறில் இன்ஸ்பெக்டர் மனைவியை கத்தியால் குத்திய பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருபவர் சுந்தரேசன். இவர் கோவை கணபதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவரது மனைவி நந்தினி குமாரி (வயது 49) மதுக்கரை யூனியன் அலுவல கத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    சம்பவத்தன்று நந்தினி குமாரி கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது மர்மநபர் ஒருவர் நந்தினி குமாரியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால் நந்தினிகுமாரி மயங்கி விழுந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    முன்விரோதம் காரணமாக பெண் ஒருவர் நந்தினி குமாரியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×