search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel-cash robbery"

    • தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • மேட்டுப்பாளையத்திலும் இதே போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள கரையாம்பா ளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 15 பவுன் தங்க நகைகள், ரூ.77,500 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இரவு வீட்டிற்கு திரும்பிய சரவணகுமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.77,500 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம் கொண்டையூர் அருகே உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் முகமது அலி (43). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துகொண்டு திருப்பூருக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 1 பவுன் கம்மல், ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தனர்.
    • வீட்டு பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகளை காணவில்லை.

    கோவை,

    கோவை கணபதிமாநகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). காண்டிராக்டர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் சென்றார்.

    இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அவர்கள் உடனே பழனிசாமியை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.இதையடுத்து சத்தியமங்கலம் சென்ற அவர் வீடு திரும்பினார். அங்கு உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் மதன்குமார் (28), சூப்பர்மார்க்கெட் கணக்காளர். இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகளை காணவில்லை.

    வீட்டிற்குள் புகுந்த யாரோ நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து மதன்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 2 பேரும் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களது வீடுகளுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சரவணம்பட்டியில் 2 வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆனந்தகுமார் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அந்த பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார்.
    • ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 54). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 24-ந் தேதி நள்ளிரவு ஆனந்தகுமார் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அந்த பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார். செல்லும் போது சாவியை வீட்டின் முன்பு இருந்த இரும்பு கட்டிலில் மறைத்து வைத்து விட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றார். பின்னர் அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் தங்க செயின், 4 கிராம் கம்மல், 2 கிராம் மோதிரம் உள்பட 10¾ பவுன் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.

    பிரார்த்தனை முடிந்ததும் ஆனந்தகுமார் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் சிங்கா நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகைக்க டைக்காரர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகி றார்கள்.  

    ×