என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "joined"
- வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார்,இணைந்தார்.
- அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் இணைந்தனர்.
திருப்பூர்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆலோசனையின் படி திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் இன்று வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார், மக்கள் நீதி மய்யம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரைட் முத்துக்குமார், தி.மு.க., ஐ.டி., விங் வாலிபாளையம் பகுதி துணை செயலாளர் அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நல்லூர் பகுதி செயலாளர் வி.பி.என். குமார், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதரன், சுரேஷ், ரமேஷ் குமார் மற்றும் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன். இவர் அ.தி.மு.க.வின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளராக இருந்து வந்தார்.
- கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 63 ஆயிரத்து 11 வாக்குகளை பெற்ற போதிலும் இவர் வெற்றிபெறவில்லை.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன். இவர் அ.தி.மு.க.வின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 63 ஆயிரத்து 11 வாக்குகளை பெற்ற போதிலும் இவர் வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் என்கிற பொறுப்பில் இருந்து கட்சியின் தலைமையால் விடுவிக்கப்பட்டார்.
இதன் பின் அவர் வேறு கட்சிக்கு மாறப் போவதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் தற்போது தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவரான அண்ணாமலையை சந்தித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார். மேலும் அவர் மத்திய இணை அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
அ.தி.மு.கவில் முக்கிய பிரமுகராக இருந்து வந்த கே.ஆர்.எம். ராதா கிருஷ்ணன் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளது தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கே.ஆர்.எம். ராதா கிருஷ்ணனுக்கு பாரதீய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படு கிறது.
- வாசுதேவநல்லூர் அருகே மாற்றுக் கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
- அ.தி.மு.க.- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இணைந்தனர்.
சிவகிரி,
சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள மலையடிக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கராஜ், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து கொண்டார்.
இதேபோல் அ.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவரும், சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான வழக்கறிஞர் ராம்குமார், மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா ஆகியோர் முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் ராமராஜா, பாண்டித்துரை, பழனிச்சாமி, அர்ஜூனன், சங்கர், சோழராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் யூகங்களை கடந்து வந்துள்ளதாகவும் இந்த சந்திப்பானது அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் கிம் ஜாங் அன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிலையில், கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்துவதால், பல முக்கிய விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதிக்கலாம் என கூறப்படுகிறது. #TrumpKimSummit #USPresidentDonaldTrump
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்