search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junaid Khan"

    • இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடரை இழந்து இருக்கிறது.
    • இலங்கைக்கு எதிரான தொடரில் பும்ரா இடம் பெறவில்லை.

    கொழும்பு:

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடரை இழந்து இருக்கிறது. இந்த தொடரில் முதல் முறையாக பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ள கம்பீருக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    பந்துவீச்சில் இந்த தொடரில் இந்தியா சொதப்பியது என்று சொன்னால் பேட்டிங்கில் மிகவும் மோசமாக விளையாடியது. இலங்கை அணி விக்கெட்டுகளை முதலில் அடுத்தடுத்து எடுத்தாலும் கடைசி மூன்று வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்தியா தடுமாறியது. இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் இந்தியாவை கிண்டல் அடித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு ஜீரோவாக இருக்கிறது. மேலும் தாம் சொல்வதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பலரும் நீங்கள் சொல்வது சரிதான் பும்ரா போன்ற ஒரு வீரர் இல்லாமல் இந்தியா தடுமாறி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    கடந்த டி20 உலக கோப்பையில் பும்ரா 15 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக முஹம்மது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இந்த தொடரில் விளையாடினர். அதிலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆர்ஸ்தீப் சிங் இடம்பெறவில்லை. குறிப்பாக இந்திய அணி பிளேயிங் லெவன் தேர்வு செய்த விதம்தான் தோல்விக்கு காரணம் என்று பலரும் கம்பீரை சாடி வருகின்றனர்.

    • நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான் கதாநாயகனாக நடித்துள்ள படம் மகராஜ்.
    • இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

    மும்பை:

    பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான். இவர் கதாநாயகனாக நடித்துள்ள மகராஜ் திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

    ஜுனாயத் கான் நடித்துள்ள மகராஜ் திரைப்படம் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மத குருக்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறி வடமாநிலங்களில் இந்து அமைப்பினர் அந்தப் படத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மகராஜ் திரைப்படம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்துக்கு தடை கோரி வருகின்றனர்.

    இதையடுத்து, #BoycottNetflix, #BanMaharaj என்ற ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
    • இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

    அமீர்கானின் மகன் ஜுனைத் கான் 'மகராஜ்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். யாஷ் ராஜ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

    சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியுள்ள இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்படத்திற்கு பஜ்ரங் தளம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜூன் 3 ஆம் தேதி படத்தின் தயாரிப்பாளர் யாஷ் ராஜ் மற்றும் ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் ஆகியவற்றிற்கு பஜ்ரங் தளம் கடிதம் எழுதியுள்ளது.

    அக்கடிதத்தில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், எனவே படத்தை ரிலீஸுக்கு முன்பு எங்களுக்கு காட்ட வேண்டும் என்று பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது.

    அதே நேரத்தில், பஜ்ரங் தளத்தின் தலைவர் கவுதம் ரவ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பையில் உள்ள யாஷ் ராஜ் அலுவலகம் முன் பஜ்ரங் தள உறுப்பினர்களுடன் போராட்டம் நடத்திய வீடியோவை பகிர்ந்துள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை.

    ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

    இதையடுத்து பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதாகவும், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவதாகாவும் தகவல்கள் வெளியாகின.

    ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு பதிலாக இலங்கையில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கான ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:-

    பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால், இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? காரணம் என்ன? அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்த வேற்றுகிரகவாசிகளா?

    ஐசிசி இந்த பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை. பாகிஸ்தான் ஒரு சிறிய அணி அல்ல. சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தது. இன்னும் முதல் மூன்று அணிகளில் ஒன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் நூதனமான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
    முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன் அரைசதங்களால் பாகிஸ்தான் வெற்றிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018 #BANvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் நீக்கப்பட்டு ஜுனைத் கான் சேர்க்கப்பட்டிருந்தார். வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை.

    லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமல் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 6 ரன்னில் ஜுனைத் கான் பந்திலும், அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 5 ரன்னில் ஷஹீன் அப்ரிடி பந்திலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

    இதனால் வங்காள தேசம் 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்டது. இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

    வங்காள தேச அணியின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். 7-வது வீரராக மெஹ்முதுல்லா களம் இறங்கினார். அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி முன்னேறினார். 99 ரன்கள் அடித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் அடித்து விளையாடி விரும்பினார்கள். ஆனால் மெஹித் ஹசன் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். மெஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 49-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழக்க வங்காள தேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் பாகிஸ்தானுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் நான்கு விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
    ×