search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kailash Vijayvargiya"

    • லாலுபிரசாத் யாதவ் கட்சியுடன், ஐக்கிய ஜனதாதளம் இணைந்து விடும் என தகவல்.
    • கட்சி மூத்த நிர்வாகியின் கணிப்பை நிராகரித்தார் நிதிஷ்குமார்

    இந்தூர்:

    பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியே ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்ததுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

    அவரது இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மத்திய பிரதே மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, நிஷ்குமாரை வெளிநாட்டு பெண்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தாம் வெளிநாட்டில் பயணம் மேற் கொண்டிருந்த போது அங்குள்ள பெண்கள் தங்களது காதலர்களை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள் என ஒருவர் கூறினார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அப்படித்தான். அவர் யாருடைய கையை பிடிக்கிறார், யாருடைய கையை விலக்குகிறார் என்பது அவருக்கே தெரியாது. இவ்வாறு கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார்.

    இதனிடையே எதிர்காலத்தில் லாலுபிரசாத் யாதவ் கட்சியுடன், ஐக்கிய ஜனதாதளம் இணைந்து விடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பி.சிங், தெரிவித்திருந்தார். இது குறித்து நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவரது கணிப்பை நிராகரிப்பதாக கூறினார்.

    • நாட்டில் உள்ள இளைஞர்கள் பாஜக அலுவலகத்தை பாதுகாக்கும் காவலர்கள் அல்ல.
    • இளைஞர்களின் சக்தி இந்த நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறது.

    அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு பணி நிறைவுக்கு பிறகு, பாஜக அலுவலகங்களில் பாதுகாவலர்கள் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்திருந்தார்.

    அவரது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து கைலாஷ் விஜய் வர்கியாவுக்கு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    கைலாஷ் விஜய் வர்கியாவின் இந்த கருத்து பாஜகவின் உண்மையான மனநிலையை அம்பலப்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இளைஞர்கள் பாஜக அலுவலகத்தை பாதுகாக்கும் காவலர்கள் அல்ல என்றும், மோடி அரசை போல் அல்லாமல் இளைஞர்களின் சக்தி இந்த நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    விஜயவர்கியா, தேசத்தின் இளம் ஆர்வமுள்ள ராணுவ வீரர்களை அவமதித்துள்ளதாகவும், நாட்டைக் காக்கும் ஆயுதப் படைகளின் வீரத்தை சிறுமைப்படுத்தி விட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, தெரிவித்து உள்ளார். விஜயவர்கியாவின் கருத்து குறித்து பாஜக உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    அக்னி வீரர்கள் பாஜக அலுவலங்களில் வாட்ச்மேனாக மாறும் நிலை குறித்து அஞ்சுவதாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதைப்போல் விஜயவர்கியாவின் கருத்திற்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், பாஜக எம்.பி. வருண்காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் தனது கருத்துகளை காங்கிரஸ் கட்சி திரித்து கூறுவதாக கைலாஷ் விஜய் வர்கியா குற்றம் சாட்டியுள்ளார். ராணுவ பணிகளை முடித்தபின் எந்த துறையிலும் அக்னி வீரர்களை பணியில் அமர்த்த முடியும் என்பதையே தான் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

    ×