search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalishwari College"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வினாடி-வினா போட்டி நடக்கிறது.
    • முதல் சுற்று எழுத்துத் தேர்வாக நிகழ்ந்தது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வினாடி-வினா மன்றம் சார்பில் பல்வேறு துறைகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி நடந்தது.

    வணிகவியல் துறை தலைவர் எம்.குருசாமி போட்டியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், இந்த வினாடி-வினா போட்டி மாணவர்களின் அறிவுத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி எதிர்காலத்தில் பலதரப்பட்ட போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு மாணவர்களுக்கு உதவும் என்றார்.

    வினாடி-வினா மன்ற ஒருங்கிணைப்பாளர்- வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஆர்.கீதா போட்டியை நடத்தினார். வினாடி-வினா போட்டி 2 சுற்றுகளாக நடந்தன. முதல் சுற்று எழுத்துத் தேர்வாக நிகழ்ந்தது.

    அதில் 23 குழுக்களாக மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெ ண்கள் அடிப்படை யில் 8 குழுக்கள் தேர்ந்தெடு க்கப்பட்டு இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் வரலாறு, பொது அறிவு, அரசியல் மற்றும் விளையாட்டு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.போட்டியின் முடிவில் முதல் பரிசை 3-ம் ஆண்டு வணிகவியல் துறை (நிறுமச் செயலர்) மாணவிகளான ஆர்.ஜனனி, எஸ்.சுவாதி ஆகியோர் வென்றனர். 2-ம் பரிசை 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவிகள் எம்.தேவதர்சினி, கே.எம்.ஹரிணி ஆகியோர் வென்றனர்.

    3-ம் பரிசை 2-ம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் ஆர்.விஷ்வா, முதலாமாண்டு வேதியியல் துறை மாணவர் எம்.மணிபாலன் ஆகியோர் பெற்றனர். இளங்கலை வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர்

    கே.தினேஷ் குமார் வரவேற்றார். இளங்கலை வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜி.பால சுந்தர் நன்றி கூறினார்.வினாடி-வினா, காளீஸ்வரி கல்லூரி, Quiz, Kalishwari College

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இளைஞர் தின விழா நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியை ரூபாதேவி சிறப்புரையாற்றினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளைஞர் சங்கம், கல்வி வட்டம் மற்றும் விவேகானந்த கேந்திரா ஆகியவை இணைந்து இளைஞர் தினத்தை கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தியது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியை ரூபாதேவி சிறப்புரையாற்றி னார்.

    சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள் மற்றும் பொன்மொழிகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இதில் 13 பள்ளிகளில் இருந்து 119 மாணவர்கள் கலந்து கொண்டனர். கட்டுரைப் போட்டியில், சிவகாசி மாணவி லட்சுமிபிரியா முதல் பரிசையும். விருதுநகர் மாணவி ஸ்ரீ கவுரி 2-ம் பரிசையும், தளவாய்புரம் மாணவர் சரண் சாரதி 3-ம் பரிசையும் பெற்றனர்.

    பேச்சுப் போட்டியில் செவல்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி விக்னேஷ்வரி முதல் பரிசையும், விருதுநகர் மாணவி நேகா 2-ம் பரிசையும், தளவாய்புரம் மாணவர் பூமணிகண்டன் 3-ம் பரிசையும் பெற்ற னர். கணிதவியல் துறை உதவி பேராசிரியை அனுபாலா நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப் பலகை இலக்கிய மன்றமும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், மகாராசபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியருமான ஜான்சன் ரத்தினராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் தங்கள் அனுபவத்தைப் பள்ளியில் படிக்கும் போதே பெறுகின்றனர். கல்லூரியில் படிக்கும் போது போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அனுபவத்தையும் பெறுகின்றனர்.

    படிக்கும்போதே வாழ்க்கை முழுவதும் பயன்படும் கல்வி என்பதை உணர்ந்தே படிக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே போட்டித்தேர்வுக்கான வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் தங்கள் நேரத்தை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் செலவழிக்காமல் போட்டித் தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கர் வரவேற்றார். துறைத்தலைவர் அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார். இதில் தமிழியல் துறையைச் சேர்ந்த 78 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இலக்கிய கூட்டம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை பேராசிரியர் ரூபாதேவி செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறையும், கோவில்பட்டி கம்பன் கழகமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலக்கியக் கூட்டம் நடந்தது.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கம்பன் கழக உறுப்பினர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதா ஜவஹர் ''கம்பன் நம் தோழன்'' என்ற தலைப்பிலும் இளங்கலைத் தமிழ் 3-ம் ஆண்டு மாணவர் தங்கசாமி ''கம்பனில் அறம்'' என்ற தலைப்பிலும், கடம்பூர் இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சகுந்தலா ''கோசலையும் சுமித்திரையும்'' என்ற தலைப்பிலும் பேசினர்.

    தமிழியல் துறைத்தலைவர் அமுதா வரவேற்றார். தமிழியல் துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவி மகேசுவரி நன்றி கூறினார். இதில் காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் 800 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை பேராசிரியர் ரூபாதேவி செய்திருந்தார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம் நடந்தது.
    • 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 64 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் நியூ ஐடோலா இலக்கியமன்றத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் ''தற்கால இலக்கிய கோட்பாடுகள்'' என்ற தலைப்பில் நடந்தது.

    துறைத்தலைவர் பெமினா வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் முனைவர் ஜான் சேகரை, உதவிப்பேராசிரியர் சாந்தி அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் இலக்கிய விமர்சனம் மற்றும் ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தன்னுடைய ஆய்வு கட்டுரையை ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கையில் சமர்பித்துள்ளார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கிய விமர்சனம் மற்றும் இலக்கிய கோட்பாடு என்றால் என்ன? என்பதை தகுந்த இலக்கிய ஆய்வுகள் மூலமாக எடுத்துக்கூறினார்.

    இந்த கருத்தரங்கம் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், அறிவு சார்ந்ததாகவும் அமைந்தது. உதவிப் பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 64 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • உதவி பேராசிரியர் கிருபா சேகர் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறையின் திருத்தங்கள் தமிழா மென்பொருள் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    உதவி பேராசிரியர் முத்து சீனிவாசன் வரவேற்றார். மென்பொருள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தமிழா கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    உதவி பேராசிரியர் கிருபா சேகர் நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் திரைப்பட விழா நடந்தது.
    • ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறையின் நியோ ஐடோலா இலக்கிய மன்றம் சார்பில் திரைப்பட விழா நடந்தது. ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.இலக்கிய மன்றத் துணைத் தலைவரும், ஆங்கிலத்துறை, 3-ந் ஆண்டு மாணவருமான பிரதீப் வரவேற்றார். முதல் அமர்வாக உலக சினிமாவில் இருந்து சிறந்த காட்சிகள் திரையிடப்பட்டன. ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா தலைமையில் இந்த திரைப்படங்களின் சிறப்பம்சம் குறித்த கலந்தாய்வுகள் நடந்தன.

    உலகத் திரைப்படங்களின் காட்சியமைப்பு, கதையம்சம், இயக்கம், நடிப்பாற்றல் மற்றும் இசை கோர்ப்பு பற்றி மாணவர்கள் கலந்துரையாடினர். திரையிடப்பட்ட காட்சிகளில் தங்களை கவர்ந்த காட்சிகளைப் பற்றி மாணவர்கள் பேசினர். இது மாணவர்களின் விமர்சனத் திறன் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்தது. இலக்கிய மன்ற மாணவர் தலைவரும், முதுகலை 2-ந் ஆண்டு மாணவியுமான மரியா கிரிஸ்டைனா நன்றி கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் தபால் தலை கண்காட்சி நடந்தது.
    • கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தபால் துறை விருதுநகர் பிரிவு சார்பில் ''தபால் தலை சிறப்புக் கண்காட்சி'' தொழில்நுட்ப நூலகத்தில் நடந்தது.

    இந்த கண்காட்சியின் முதன்மை நோக்கமாக தபால் தலை விழிப்புணர்வு மற்றும் தபால் துறையின் முக்கியத்துவமும் காட்சி படுத்தப்பட்டு இருந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி மாணவர்களிடமும், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களிடமும் பேசினார்.

    கண்காட்சியில் தபால் துறை அலுவ லர்களும் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இதில் சுமார் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டு தபால் தலைகளை பார்வை யிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ராஜீவ்காந்தி செய்திருந்தார்.

    • போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி காளீஸ்வரி கல்லூரியில் நடந்தது.
    • இதில் 796 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் பணி அமர்வு மையம் சார்பில் அனைத்து இளங்கலை, இளநிலை மற்றும் முதுகலை, முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், போட்டிகள் நிறைந்த இந்த உலகில் தன் திறன் வெளிப்பாட்டின் அவசியத்தை மாணவர்க ளிடையே ஊக்கப்படுத்தும் வகையில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் சிறப்புரை யாளராக சிவகாசி அப்தான் கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர் தினேஷ்குமார் பங்கேற்றார். அவர் பேசுகையில், நிகழ்காலச் சூழலில் அரசு வேலைகளைப் பெறும் முறைகள் குறித்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான நுட்பங்கள் குறித்தும் எடுத்துக்கூறினார்.

    கல்லூரி பணி அமர்வு மைய பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். குமாரபாலாஜி நன்றி கூறினார். இதில் 796 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • வணிகவியல் நிறும செயலரியல் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் செந்தில் குமார் வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் நிறும செயலரியல் துறை சார்பில் ''நிறுவன செயலாளருக்கான தொழில்'' குறித்த தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

    ''இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆப் இந்தியா'' பற்றிய சுருக்கமான முன்னுரையை சிவகாசி தனியார் நிறுவன செயலாளர் ஏ.என்.எஸ். விஜய் மாணவர்களிடையே உரையாற்றினார்.

    நிர்வாக இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை நிதி அதிகாரி போன்ற முக்கிய நிர்வாக பணியாளர்களாக நிறுவனத்தின் செயலாளரின் பங்கை அவர் வெளிப்படுத்தினார். அறக்கட்டளை, நிர்வாக நுழைவு, நிர்வாக மற்றும் தொழில்முறை திட்டம் போன்ற ஐ.சி.எஸ்.ஐ. பாடத்தின் நிலைகளையும் அவர் விளக்கினார்.

    வணிகவியல் நிறும செயலரியல் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் செந்தில் குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் சூரியா நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியை ஜாஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார். இதில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கிரிப்டோகரன்சி குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • இந்த நிகழ்வில் துறை சார்ந்த 115 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் நிறும செயலறியல் துறை சார்பில் ''கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம்'' என்ற தலைப்பில் காணொலி மூலமாக கருத்தரங்கு நடந்தது.

    இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு கிரிப்டோ கரன்சி பற்றி விளக்குவதும், அதன் செயல்பாடுகளைப் புரிய வைப்பதும் ஆகும்.

    சென்னை இந்துக் கல்லூரியின் முதுகலை மற்றும் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை சிவப்பிரியா சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் அதன் மதிப்பைப் பெறும் கிரிப்டோ கரன்சிகள் குறித்து விளக்கினார்.

    இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பார்க்கவும், கண்காணிக்கவும் முடியும் என்று கூறிய அவர், அதன் பரிவர்த்தனை முறையையும் விளக்கினார்.

    கிரிப்டோகரன்சிகளில் பரிவர்த்தனை செய்யும் ஆப்பிள் பே டாலர் , யுரோ போன்ற பியட் கரன்சிகளைப் போல இல்லை என்றும் இது பொதுவாக நாணயங்கள் மற்றும் டோக்கன்கள் போன்ற 2 வகைகளில் ஒன்றாகும் என்றும் தெரிவித்தார். துறைத்தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.

    உதவிப்பேராசிரியை சூரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த 115 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரி சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
    • முகமில் 60 பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சமூக விரிவாக்கப்பணி சார்பில் சிவகாசி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து எம்.மீனாட்சிபுரம் கிராமத்தில் எக்ஸ்ரே மூலம் நுரையீரல் பரிசோதனை செய்யும் முகாம் நடந்தது. இதில் எக்ஸ்ரே மற்றும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனைகளின் மூலம் காசநோய், நாள்பட்ட சளி, எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் கண்டறிப்படும். இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    துணை முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட காசநோய் துணை இயக்குநர் ராஜன், காசநோய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம், முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் டேனியல்ராஜன், காசநோய் பார்வையாளர் பாலமுருகன், காசநோய் ஆய்வக உதவியாளர் முத்துவேல், ஐ.சி.டி.சி. துறையினர் மற்றும் தமிழியல் துறைத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் சு.முத்துசிதம்பரபாரதி செய்திருந்தார். முகமில் 60 பயனாளிகள் கலந்து கொண்டனர்.காளீஸ்வரி கல்லூரி, Kalishwari College , மருத்துவ பரிசோதனை, Camp,

    ×