search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalugumalai kalugasalamoorthy temple"

    • இன்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.
    • ஜூலை 7-ந்தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.

    கழுகுமலை பாண்டி முனீஸ்வரர், சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த ஜூன்.23-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 26-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேக, ஆராதனை நடந்தது. 28-ந்தேதி பாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 29-ந்தேதி இரவு 7 மணியளவில் ஆதிபராசக்தி கும்மி பாடல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை 9 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு அக்னி சட்டி எடுத்து ஊர் விளையாடல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இன்று(சனிக்கிழமை) காலை 9 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் பாட்டு கச்சேரி நடக்கிறது. வரும் ஜூலை 7-ந்தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.

    • மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். தொடர்ந்து மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    திருவிழாவை காண கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×