என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kamalhaasan"
- டிக்கெட் இருந்தும் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை இணையத்தில் பதிவு செய்து வந்தனர்.
இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக கோயம்பேடு போலீசார் மற்றும் தாசில்தார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
இந்நிலையில், நரிக்குறவர்களை திரையரங்கில் அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது." என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. https://t.co/k9gZaDH0IM
— Kamal Haasan (@ikamalhaasan) March 31, 2023
- கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர் படப்பிடிப்புக்காக கமல் 4 நாட்கள் தைவான் நாட்டிற்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
- இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தம்பி அஜித்குமாரின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- 1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’டிக் டிக் டிக்’.
- இந்த படத்தில் கதாநாயகிகள் ராதா, மாதவி, ஸ்வப்னா ஆகியோர் நீச்சல் உடையில் நடித்திருந்தனர்.
தமிழ் திரைத்துறையில் இன்று நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது என்பது வெகு சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. ஆனால் 1980-களில் இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கதாநாயகிகள் இல்லாமல் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்று தனியாக நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடுவது பெரிய விஷயமாகப் பேசப்படும். அந்த கட்டுப்பாடான நேரத்தில் 1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'டிக் டிக் டிக்' திரைப்படத்தில் கதாநாயகிகள் ராதா, மாதவி, ஸ்வப்னா ஆகியோரை நீச்சல் உடையில் நடிக்க வைத்து அதிரடி செய்திருப்பார்.
நடிகை ராதா பகிர்ந்த புகைப்படம்
கமல்ஹாசனை சுற்றி நிற்கும் மூன்று கதாநாயகிகளின் இந்த போட்டோ அன்றைய நாளில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் புகைப்படத்தைத் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்த ராதா நினைவுகளை எழுதியிருக்கிறார். அதில், அன்றைய நாளில் எங்களுக்கு இது வேலையாகத் தெரிந்தாலும் இப்போது நினைத்துப் பார்த்தால் அது போராட்டமான காலமாகவே தெரிகிறது. எனக்குப் பிடித்த நினைவுகளில் இதுவும் ஒன்று. மாதவி எங்களைவிட இதில் உணர்வுப்பூர்வமாக இருந்ததை மறக்க முடியாது. எங்களுக்காக வாணி கணபதி இந்த அழகான ஆடைகளை வடிவமைத்திருந்தார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
- நடிகர் கமல்ஹாசன் பல்வேறு வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றவர்.
- சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கமல்ஹாசன் கால் பதித்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் பல்வேறு வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றவர். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கமல்ஹாசன் கால் பதித்தார். கடந்த 2008-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தொடர்ந்து தனித்தே களம் கண்டு வந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றே கமல்ஹாசன் தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் எப்போதுமே கதர் ஆடைகள் பற்றியும் நெசவாளர்கள் நலன் குறித்தும் அடிக்கடி பேசுவார். கதர் ஆடைகளை அணிவதிலும் அதிக ஆர்வம் கொண்டவரான கமல்ஹாசன் அனைவரும் கதர் ஆடைகளை விரும்பி அணிய வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் கதர் ஆடைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாகவும் நவீன மாடல்களில் கதர் ஆடைகளை உருவாக்கும் விதத்திலும் கமல்ஹாசன் கதர் ஆடை நிறுவனம் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு கே.எச். (ஹவுஸ் ஆப் கதர்) என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்த விற்பனையகம் மூலமாக பல்வேறு வடிவிலான கதர் ஆடைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 'ஆன்லைன்' விற்பனையகமான இந்த நிறுவனத்தின் மூலமாக பலர் கதர் ஆடை களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
பேஷன் ஷோக்களிலும் கதர் ஆடைகளின் அணி வகுப்பு அதிகரித்துள்ளது. இப்படி ஸ்டைலான கதர் ஆடைகளும் அதிகமாக ஜவுளி சந்தைகளில் விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. அதுபோன்ற ஆடைகளையே கமல்ஹாசனின் கே.எச்.விற்பனையகம் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த கதர் ஆடை விற்பனை தொழிலை மேம்படுத்தும் வகையில் கமல்ஹாசன் இத்தாலிக்கு சென்றிருக்கிறார். கதர் ஆடை துணிகளின் வடிவமைப்புகளுடன் கமல்ஹாசன் விமானத்தில் இத்தாலிக்கு பறந்துள்ளார். இவர் இத்தாலி சென்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் சண்டை காட்சியின் ஒரு பகுதி படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தென் ஆப்ரிக்கா மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பு 14 நாட்கள் நடைபெறும் என்றும் இந்த சண்டை காட்சி ரயிலில் நடப்பது போன்று படமாக்கப்படுவதாகவும், இது உலக தரம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இதைத்தொடர்ந்து இவரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிம்பு
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சிம்புவின் 48-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
எஸ்.டி.ஆர்.48
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதனை சிம்பு தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் பிளட் அண்ட் பேட்டில்' (Blood and Battle) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் -2’.
- இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் பகுதியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நானூறு ஆண்டு பழமையான டச்சுக்கோட்டை வளாகத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுகிறது. முதல்நாள் படப்பிடிப்பான நேற்று சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையர்களுடன் சண்டை போடுவது போன்ற காட்சியில் நடிப்பதற்காக கமல்ஹாசன் வந்திருந்தார். தகவலரிந்து அப்பகுதி மக்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கோட்டை முன் கமல்ஹாசனை பார்க்க குவிந்தனர்.
ரசிகர்களை பார்த்து கையசைத்த கமல்ஹாசன்
கோட்டை வாசல் பகுதியில் காவலுக்கு இருந்த போலீசாரும், தனியார் பவுண்சர்களும் யாரையும் ஷூட்டிங் பார்க்க அனுமதிக்கவில்லை.பொதுமக்கள் கூடியிருப்பதை அறிந்த கமல்ஹாசன் வளாகத்திற்கு வந்து அங்கிருந்த மேஜை மீது நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து கும்பிட்டார். பின்னர் ரசிகர்களும், பொதுமக்களும் அங்கிருந்து சென்றனர். இதையடுத்து நேற்று இரவு 10 மணிக்கு துவங்கிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணி வரை நடந்தது. இதேபோல் இன்றும், நாளையும் சதுரங்கபட்டினம் டச்சுக்கோட்டையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. பின்னர் பனையூர் பகுதியில் இது போன்ற செட் போடப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருப்பதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.
- இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் -2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்தியன் -2
இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
சண்டை பயிற்சியாளர்களுடன் கமல்ஹாசன்
இந்நிலையில், இந்தியன் -2 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் சண்டை பயிற்சி குழுவினரை நடிகர் கமல்ஹாசன் சந்திக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்.
- இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை இவர் தயாரித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாம் திரைக்கதை, இயக்கம் , பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் தன் தேர்ந்த நடிப்பால் மக்கள் மனதில் நீக்கா இடம் பிடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் இயக்கி வருகிறார்.
கமல்ஹாசன்
இந்த நிறுவனத்தின் மூலம் கமல்ஹாசன் பல படங்களை தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 56-வது படத்தின் அப்டேட் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
See you on the battlefield at 6.30 pm tomorrow. #BLOODandBATTLE#RKFIProductionNo_56 #Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #Mahendran @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/4KFZGSXbxS
— Raaj Kamal Films International (@RKFI) March 8, 2023
- பெண்களின் வளர்ச்சியையும் சாதனைகளையும் அனுசரிக்கும் விதமாக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
- மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலவைர்களும் திரைப்பிரபலங்களும் மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் பெண்களின் வளர்ச்சியையும் சாதனைகளையும் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள்.
ஏர் முனை தொடங்கி போர் முனை வரையிலும் பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலவைர்களும் திரைப்பிரபலங்களும் மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.
பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து.
— Kamal Haasan (@ikamalhaasan) March 8, 2023
- நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்தியன் 2
இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
கமல்ஹாசன் - பாரதி ராஜா
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் இயக்குனர் பாரதிராஜாவும் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்