என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kamalhaasan"
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி, அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தவிழாவில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் கலாசார வளர்ச்சி குறித்த நிகழ்த்துக்கலை நடைபெற்றது. 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்று முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணை கட்டியது குறித்து முப்பரிமாண படத்துடன் விளக்கமளிக்கப்பட்டது.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது.
விக்ரம்
அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'விக்ரம்' படத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, கிளைமேக்ஸில் வரும் 'ஒன்ஸ் அப்பான் ஏ டைம்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி வருகிறது.
- இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தில் நடிக்கிறார்.
- உதயநிதி ஸ்டாலின் படத்தின் புதிய அறிவிப்பை கமல் வெளியிட்டார்.
'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கலகத் தலைவன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூலை 25-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன்
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் "ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன், "அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி @Udhaystalin அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன். @RKFI @turmericmediaTM @RedGiantMovies_ https://t.co/vazOoWiNp3 pic.twitter.com/FZWvCTDqNI
— Kamal Haasan (@ikamalhaasan) July 27, 2022
- இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தில் நடிக்கிறார்.
- உதயநிதி ஸ்டாலின் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கலகத் தலைவன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (25-07-2022) சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன்
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
15 வருட @RedGiantMovies_-ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். @RKFI தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான
— Udhay (@Udhaystalin) July 26, 2022
அறிவிப்பை வெளியிட்ட @ikamalhaasan சாருக்கு நன்றி. pic.twitter.com/SA0rc7uItW
- நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் பிரதாப்போத்தன்.
- இவரின் உடலுக்கு நடிகர் கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான கலைஞர்களுள் ஒருவர் பிரதாப்போத்தன் (70 ) நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1979-ஆம் ஆண்டு வெளியான தகர என்ற மலையாளப்படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதே ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
இவர் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் இளைமைக்கோலம், மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள் போன்ற தமிழ் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நெருக்கமானார்.
பிரதாப்போத்தன்
1985-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதாப் போத்தன் இந்த படத்திறக்காக சிறந்தஅறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருதினை பெற்றார். ஜீவா, வெற்றி விழா, மைடியர் மார்த்தாண்டன் போன்ற படங்களை இயக்கிய இவர் ஆத்மா படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார்.
அதேசமயம் கதாசிரியர் சௌபா எழுதிய சீவலப்பேரி பாண்டி கதையை திரைப்படமாக எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். மலையாளத்தில் இவர் இயக்கிய யாத்ரா மொழி படத்தில் சிவாஜி கணேசனும், மோகன்லாலும் சேர்ந்து நடித்தனர். சில நாட்களுக்கு முன்பு சுந்தர்.சி. இயக்கத்தில் காபி வித் காதல் படத்திற்காக கொடைக்கானல் சென்று வந்தார்.
நடிகர் பிரதாப்போத்தன் சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வந்தார். இதையடுத்து இன்று (15.07.2022) காலை சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வேலையாட்கள் வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் படுக்கையில் இருந்திருக்கிறார்.
இவரின் மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மறைந்த பிரதாப் போத்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கமல்ஹாசன் - பிரதாப்போத்தன்
அதுமட்டுமல்லாமல், அவரது சமூக வலைதளப்பக்கத்தில்,"தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்-1" .
- "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது.
பொன்னியின் செல்வன்
இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் -1, திரைப்படத்தில் நடிகர் கமல் பின்னணி குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி கமல் குரல் கொடுத்திருந்தால் யாருக்கு கொடுத்திருப்பார்? என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
- நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இதற்கு வாழ்த்து கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. தற்போதைய நிலையில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்பட 5 பேர் நியமன எம்.பி.க்களாக உள்ளனர்.
மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு எம்.பி.க்களை நியமனம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது. இசைத்துறையில் அவர் செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் பொருட்டு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 6, 2022
- கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இசையமைப்பாளர் இளையராஜா கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!! மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே - அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் கொடுத்துள்ள கமல்ஹாசன், "நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்" என்று பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும்
— Kamal Haasan (@ikamalhaasan) June 21, 2022
உங்கள் நான். https://t.co/54VwAY3Iul
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்