search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamaraj university"

    • காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் இறகுப்பந்து போட்டி நடந்தது.
    • மதுரை எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது.

    அருப்புக்கோட்டை

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த இறகுப்பந்து போட்டி அருப்புக்கோட்டை சைவ பானு சத்திரிய கல்லூரியில் நடந்தது. இந்த போட்டிகளை கல்லூரி முதல்வர் செல்லத்தாய் தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் ஜாக்லின் பெரியநாயகம் வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளின் முடிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல் இடத்தையும், திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி 2-ம் இடத்தையும், அருப்புக்கோட்டை சைவ பானு சத்ரிய கல்லூரி 3-வது இடத்தையும், மதுரை

    எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலர் முத்து தினகரன் கோப்பைகளை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன் சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் மணிகண்டன், மாதவன் மற்றும் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை நடத்தினர். #AruppukottaiProfessor #NirmalaDevi
    மதுரை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி. சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேசுவரி, துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் விசாரித்தனர்.



    நிர்மலாதேவி கூறிய தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சரண் அடைந்த அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் காமராஜர் பல்கலைக் கழகத்திலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அதன்பிறகு விசாரணையில் தொய்வு நிலை காணப்பட்டது. இந்த நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேசுவரி மற்றும் போலீசார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று மீண்டும் விசாரணை நடத்தினர். #AruppukottaiProfessor #NirmalaDevi


    ×