search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala"

    • கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.

    கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தில் மேகவெடிப்பால் 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.

    கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம்.
    • கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணை பலம் இழந்து வருவதாகவும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு கேரள அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அணை பலமாக இருப்பதாகவும், அதனை இடித்து புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் உத்தரவிட்டனர். மேலும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் உத்தரவிட்டது.

    அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் நீர்வரத்து, தண்ணீர் திறப்பு, கசிவு உள்ளிட்டவற்றை பார்வையிட மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூவர் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது அணை பகுதியை பார்வையிட்டு அதன் அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த கேரள சட்டசபைக் கூட்ட தொடரில் முல்லைப்பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்க கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழுவுக்கு அறிக்கை அளித்தது.

    இதன் மீதான விசாரணை நாளை மறுநாள் (28-ந் தேதி) வர உள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த விவகாரம் வெளியில் தெரியாத நிலையில் தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசின் கடிதம் விசாரணைக்கு வர உள்ள தகவல் தமிழக விவசாயிகளிடம் தெரிய வந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீரினை பயன்படுத்தும் 5 மாவட்ட விவசாயிகள் நாளை (27-ந் தேதி) மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் ஒன்று திரண்டு விவசாயிகள் அங்கிருந்து கேரள எல்லையான குமுளிக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை அமலில் இருப்பதால் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி நாளை லோயர் கேம்ப்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு திரண்டால் அதனை தடுத்து நிறுத்தி கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எந்தவித அமைப்பினரோ, குழுவினரோ போராட்டம் நடத்தக்கூடாது. இது வரை விவசாயிகள் அமைப்போ, வேறு எந்த அமைப்போ போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்கவில்லை. அவ்வாறு கடிதம் அளித்தாலும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்றனர்.

    இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. இது தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம். எங்கள் எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் மட்டுமே தெரிவிக்க முடியும். தமிழக அரசு கடிதம் எழுதி விட்டால் அனைத்தும் நடந்து விடும் என்று நினைக்கின்றனர். இது தவறு. கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்கள். எனவே அவர்களிடம் கடிதம் எழுதினால் நடந்து விடும் என்று தமிழக அரசு நினைப்பது தவறு. விவசாயிகள் போராட்டத்தை தடுத்தால் அது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்றனர்.

    இதனிடையே பேரணிக்கு திட்டமிட்டுள்ள லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.
    • போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் தமிழக நீர் வளத்துறை பராமரிப்பில் உள்ளது.

    பூகோள அடிப்படையில் கேரளாவில் இருந்தாலும் அணை பராமரிப்பு முழுவதும் தமிழக அரசே மேற்கொண்டு வருகிறது.

    அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் அணையை உறுதி செய்யும் தன்மையை உச்சநீதிமன்றமே வல்லுனர் குழுவை 11 முறை அனுப்பி உறுதி செய்தது. அணையின் கீழ் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கிக் கொள்ள உத்தரவிட்டது. அதன்படி 10.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையில் 7.86 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தற்போது வரை தேக்கப்படுகிறது. அணையில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியாததால் 5 மாவட்டங்களின் பாசன பரப்பை அதிகரிக்க முடியாமலும், குடிநீர் வழங்கும் பணியை விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

    இது தவிர அணையை பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள கேரள வனத்துறை பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த சூழலில்தான் புதிய அணை கட்ட வேண்டும் எனவும், தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணை பலமிழந்து விட்டதால் இடிந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுவதும் சேதமாகும் என்றும், வீண் வதந்தி பரப்பி வருகிறது.

    இந்நிலையில் முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில் முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகி விட்டதால் அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தற்போதுள்ள அணைக்கு 1200 அடி கீழே புதிய அணையை கட்டிய பின்பு பழைய அணையை இடிக்க அனுமதிக்க வேண்டும். புதிய அணை கட்டும் போதும், கட்டி முடிக்கப்பட்ட பின்பும் தமிழகத்துக்கான நீர் பகிர்வு தற்போதைய நிலையிலேயே தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சகம் அதனை நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு கடந்த 14-ந் தேதி அனுப்பியது.

    மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு வருகிற 28-ந் தேதிக்கு இது தொடர்பான கூட்டத்தை நடத்த உள்ளது. கேரளாவின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

    முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை வைத்து கேரளாவில் எந்த அரசு வந்தாலும் அரசியல் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அணையை எப்படியாவது இடித்து விட்டு அந்த அணை தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலைப்பாடாக உள்ளது. உச்சநீதிமன்றம் தலைசிறந்த வல்லுனர் குழுவை அமைத்து அணை பலமாக இருப்பதாகவும் பூகம்பம் ஏற்பட்டால் கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி செய்த பின்பே 142 அடி வரை தண்ணீர் தேக்க உத்தரவிட்டது.

    அதனையும் மீறி கேரள அரசு புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருப்பது 152 அடி வரை உயர்த்த முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பணிய வைத்து முல்லைப்பெரியாறு அணையை அழித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் மென்மையான போக்கை கைவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி காலை 10 மணியளவில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

    பென்னி குவிக் நினைவிடத்தில் இருந்து திரண்டு பேரணியாக சென்று கேரள மாநில எல்லையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • இரு மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து அணை பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் செயல்பட வேண்டும்.
    • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணையின் தரம் காலாவதியாகி விட்டது என்றும் இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கேரள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

    மேலும் உடனடியாக முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதில் அணை குறித்து ஏற்கனவே வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித் திருந்த உத்தரவில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களுக்கும் தனித்தனியாக புதிய சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

    இதில் இரு மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து அணை பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் செயல்பட வேண்டும். மத்திய அரசு அமைக்கும் குழுவில் இரு மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும்.

    இயற்கை பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக முன் எச்சரிக்கை நடவடிக்கை களை இந்த சிறப்பு குழு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதில் அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று தெளிவாக தெரிவித்து இருந்தது.

    மத்திய அரசு, கேரளா அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2019 ஜனவரி 4-ந்தேதி தொடர்ந்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இது போன்ற சூழலில் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளா அரசு தரப்பில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


    இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 28-ந்தேதி நடக்க இருக்கும் மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாக, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மேற்பார்வை குழுவின் முடிவே இறுதியானது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. அதே போன்று தமிழ்நாடு அரசு சம்மதம் இருந்தால் மட்டுமே முல்லைப் பெரியாறின் கீழே புதிய அணை கட்ட முடியும் என்றும், இல்லையேல் சாத்தியமே கிடையாது எனவும் மத்திய அரசு மாநிலங்களவையில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

    இவை அனைத்தையும் மீறும் விதமாக முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக வரும் 28-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகள் அனைத்தையும் மீறும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆரம்பத்திலேயே கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவில் கேரள அரசின் பரிந்துரையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்திடம் தமிழக அரசு முறையிடுகிறது.

    இதற்காக தமிழக அரசு சார்பில் விரிவான ஆட்சேபனை கடிதம் தயார் செய்யப்பட்டு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.


    தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர் வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் உயர் அதிகாரிகள் இன்று மாலை 5 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பும் கடிதத்தில் வேறு என்னென்ன விவசயங்களை குறிப்பிடுவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து நீர் வளத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-

    மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்து வரும் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்.

    இதே போன்ற முயற்சியை கேரள அரசு இதற்கு முன்பு மேற்கொண்ட போது சுப்ரீம் கோர்ட்டு 2014-ல் அளித்த உத்தரவில் புதிய அணை கட்டுவது குறித்து இரு மாநிலங்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி உள்ளது.

    தமிழக அரசு சம்மதம் இன்றி முல்லைப் பெரியாறில் எந்த அணையும் கட்ட முடியாது. ஆனால் அதையும் மீறி 2015-ம் ஆண்டில் இதே போன்ற ஒரு முயற்சியை கேரள அரசு மேற் கொண்டது.

    அப்போது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தியது. அது மட்டுமின்றி இதே போல் 2-வது முறையும் முயற்சி மேற்கொண்டனர். அப்போது 2019-ம் ஆண்டில் இதே போல் பிரச்சனை வந்த போது தமிழக அரசு கேரள அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தது. அதன் பிறகே கேரள அரசு பணிந்தது.

    இப்போது மீண்டும் கேரள அரசு இந்த முயற்சியை தேவையில்லாமல் தொடங்குகிறது. இதையும் தடுத்து நிறுத்துவோம். அதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
    • புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டவும் , பழைய அணையை இடிக்கவும் ஒன்றிய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை ஆய்வு செய்து தயார் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் வரும் 28 ஆம் தேதி மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டிருப்பதாக வந்திருக்கிற செய்தி தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. கேரள அரசின் இத்தகைய முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு, அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இதையொட்டி 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு பயன்படுகிற வகையில் நீர்மட்டத்தை 142 அடியாக உறுதி செய்து அனுமதி அளித்தது. அதே நேரத்தில், கேரள அரசு இயற்றிய சட்டத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அணையை பலப்படுத்திய பிறகு 152 அடிவரை நீரை தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதற்கு பிறகும் புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் கருத வேண்டியிருக்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு காண வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினாலும், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அணையை பலப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவால் உறுதி செய்யப்பட்ட பிறகு, கேரள அரசு இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அதையும் மீறி தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிக்கும் செயல்களில் கேரள அரசு ஈடுபடுமேயானால், உடனடியாக இதை தடுத்து நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுகின்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று காலை பத்தளம் அணைக்கட்டு மற்றும் கீழக்கரையில் அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன.
    • பத்தளம் அணைக்கு அருகில் உள்ள ஆறுகள் கருப்பாக மாறி உள்ளது.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. திடீரென ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மீன்கள் உயிரிழப்புக்கு காரணம் அப்பகுதியில் உள்ள ஏலூர்-எடையார் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் என சந்தேகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை பத்தளம் அணைக்கட்டு மற்றும் கீழக்கரையில் அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் பெரியாற்றில் கூண்டு அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    கனமழையைத் தொடர்ந்து மே 20-ந்தேதி அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டதையடுத்து, பத்தளம் அணைக்கு அருகில் உள்ள ஆறுகள் கருப்பாக மாறி உள்ளது.

    கேரள தொழில்துறை அமைச்சர் ராஜீவ், பெரியாற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


    • தமிழகத்திலும் சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் கேரளாவை பின்பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. இப்பகுதியில் படகு சவாரி, பசுமைநடை, மலையேற்றம், வியூபாயிண்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் உள்ளன. கேரளாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இங்கு அவ்வப்போது களரி, கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் அருகிலேயே வாகம்மன், ராமக்கால்மெட்டு, செல்லாறு, கோவில் மெட்டு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளது. இங்கு வருடந்தோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பசுமை பள்ளத்தாக்குகள் பரந்து விரிந்து கிடக்கிறது. இங்குள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், தவழந்து செல்லும் மேகங்கள், ஆண்டு முழுவதும் நிலவும் இதமான சீதோசனம் போன்றவை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்து வருகின்றன.

    கேரளாவை பொறுத்தவரை அரசின் முக்கிய வருவாயாக ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் விளங்கி வருகின்றன. இதனால் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்த அரசு மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதுடன் அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வருகிறது.

    இதன் ஒருபகுதியாக சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் இப்பகுதிகளில் யாசகம் எடுக்கத்தடை விதித்து இதற்காக போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,

    மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகின்றனர். இவர்களிடம் யாசகம் கேட்பதால் நம் நாட்டினர் மீது மாறுபட்ட கருத்தியல் சூழல் நிலவுகிறது. மேலும் யாசகர் போர்வையில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே யாசகம் எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை முகாமிற்கு அனுப்பி வருகிறோம். எங்களுடன் இணைந்து வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளும் பணியாற்றி வருகிறோம்.

    இதனால் கேரளாவில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் இதுபோன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்திலும் பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் கேரளாவை பின்பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 24-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவிப்பு.
    • ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.

    சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை பாயசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என ஐயப்பா மசாலா நிறுவனம் கடந்தாண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

    இந்த அறிக்கையில், அரவணை பாயசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றது எனவும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால், ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல என தெரிவிக்கப்பட்டது.

    அதனால் ஏலக்காய் சேர்க்காமல் அரவணை பாயாசம் தயாரிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் ஏலக்காய் கலக்காமல் இருந்தது குறித்து பல பக்தர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது எந்த விதமான கெமிக்கலும் கலக்காத ஏலக்காய் கலக்க முடிவு செய்து இருப்பதாகவும் தேவஸ்தான வட்டாரத்தில் கூறப்பட்டது.

    அதன்படி சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது.

    இதற்காக தீங்கு தரும் எந்த ரசாயனமும் இல்லாத 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது.

    • கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

     கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவந்தபுரம் தற்பொழுது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இந்த எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை கடலோர மற்றும் மலை மாவட்ட மக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதிகனமழையின் போது 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வாகனங்கள் பயணிக்க கலெக்டர் தடை விதித்துள்ளார்.

    நீர்வீழ்ச்சி, நீர்நிலைகள் தொடர்பான சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகனமழை எச்சரிக்கையால், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் சுரங்க பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கொட்டி வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, அதை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.

    தொடர் மழையால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.

    • சிலந்தி ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.
    • தடுப்பணை கட்டப்படுவது, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஆய்வில் உறுதி.

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

    இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.

    இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவது, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என சமூக ஆவர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், குடிநீருக்காக என கூறி சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
    • கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் புகார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், ஆளும் கட்சி மீது புகார் கூறி வருகின்றனர். மேலும் இதற்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டுக்கு பேரணி யாக சென்ற இளைஞர் காங்கிரசார், அங்கு அவரது உருவப்பொம்மையையும் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில், முதல்-மந்திரி பினராயி விஜயன் குடும்பத்தினருடன் விடுமுறையில் வெளிநாடு சென்றதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களும் எழுப்பப் பட்டன.

    ×