search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KKRvMI"

    • ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.
    • இதில் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடியும் தறுவாயில் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளன.

    இதற்கிடையே, ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மைதானத்தில் விழுந்த பந்தை ரசிகர் ஒருவர் மறைத்து எடுத்துச் செல்வதையும், அதை கவனித்த போலீசார் அவரிடம் இருந்து பந்தை பறிமுதல் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த ரசிகருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்துகள் பதிவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் அடித்ததன் மூலம் ரெய்னா சாதனையை முறியடித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா. #IPL2018 #RohitSharma
    மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவர் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு சாதனையாக படைத்து வருகிறார். நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 31 பந்தில் இரண்டு பவுண்டரி, 1 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்தார்.

    இந்த ரன்கள் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மட்டும் 747 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் கேகேஆர் அணிக்கெதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து ரெய்னாவை பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்துள்ளார்.



    கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணிக்கெதிராக ரோகித் சர்மா 747 ரன்கள் அடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா 746 ரன்கள் அடித்துள்ளார். விராட் கோலி 490 ரன்கள் அடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

    டேவிட் வார்னர் 677 ரன்களுடன் 3-வது இடத்திலும், கிறிஸ் கெய்ல் 594 ரன்கள் நான்காவது இடத்திலும் உள்ளனர். தவான் 459 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், 455 ரன்களுடன் டோனி 6-வது இடத்திலும் உள்ளனர்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததற்கு ஷாருக்கான அந்த அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். #IPL2018 #KKRvMI
    ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

    பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 108 ரன்னில் சுருண்டது. சொந்த மைதானத்தில் எந்தவித போராட்டமும் இல்லாமல் சரணடைந்தது.



    நேற்றைய போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான ஷாருக் கான் நேரில் கண்டு ரசித்தார். இந்த மோசமான தோல்வியால் அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுகுறித்து ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விளையாட்டு என்பது ஸ்பிரிட் (Spirit) பற்றியது. வெற்றி தோல்வியால் அது பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இஷான் கிஷானை கேப்டன் ரோகித் சர்மா பாராட்டி உள்ளார். #IPL2018 #MIvKKR
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 41-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. இஷான் கி‌ஷன் 21 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்னும், (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.1 ஓவரில் 108 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 102 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மும்பை இந்தியன்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும். அந்த அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தியது. வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியிருப்பதாவது:-


    மும்பை அணி வீரர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இஷான் கி‌ஷனின் ஆட்டம் பிரமிப்பாக இருந்தது. அவர் பந்துகளை எந்தவித பயமும் இல்லாமல் ஆடியது. இந்த ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது. அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். இந்த வாய்ப்புக்காகத்தான் அவர் காத்திருந்தார். இதே போல பென் கட்டிங் கடைசி ஆட்டத்தில் சிறப்பாக முடித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2018 #MIvKKR #RohitSharma #IshanKishan
    ×