என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kohinoor diamond"
- மீண்டும் மீண்டும் அவர் அழுத்தமான சூழ்நிலையில் வந்து அசத்தலாக செயல்படுகிறார்.
- புத்திசாலித்தனம், அற்புதம் ஆகியவை அவருக்கு பொருந்தக்கூடிய வார்த்தைகளாகும்.
இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருது ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கும், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கோஹினூர் வைரத்தை விட இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா அதிக மதிப்புமிக்கவர் என இந்தியாவின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இறுதிப் போட்டியின் வர்ணனையில் இருந்த போது அவரை நான் கோகினூர் வைரத்தை விட விலைமதிப்பு மிக்கவர் என்று சொல்லியிருந்தேன். உண்மையில் உலக கிரிக்கெட்டில் அவர் தற்போது அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்த கூடிய பந்து வீச்சாளராக இருக்கிறார். மீண்டும் மீண்டும் அவர் அழுத்தமான சூழ்நிலையில் வந்து அசத்தலாக செயல்படுகிறார்.
அதை இங்கே பலரும் செய்வதில்லை. எந்த ஒரு போட்டியிலும், எந்த நேரத்திலும் வெற்றி பெற விரும்பும் கேப்டன் அவரை பயன்படுத்த விரும்புவார்கள். அதுவே அவருடைய ஸ்பெஷலாகும். புத்திசாலித்தனம், அற்புதம் ஆகியவை அவருக்கு பொருந்தக்கூடிய வார்த்தைகளாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
- கோஹினூர் வைரத்தைத் திரும்பத்தர முடியாது என்று இங்கிலாந்து கூறிவிட்டது.
லண்டன் :
உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று, கோஹினூர் வைரம்.
இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. இதன் எடை 105.6 கேரட்.
இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கு பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த வைரத்தைத் திரும்பத்தர முடியாது என்று இங்கிலாந்து கூறிவிட்டது.
இந்த வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான் மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்தார். ஆனால், இந்த வைரத்தை இந்தியா சொந்தம் கொண்டாடுவது உள்பட பல்வேறு சர்ச்சைகள் உள்ளதால், இது பதிக்கப்பட்ட கிரீடத்தை அணிவதை இங்கிலாந்து ராணி கமீலா பார்க்கர் தவிர்த்து விட்டார். அவர் அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் அணிந்தார்.
இருப்பினும் இந்த வைரம், இங்கிலாந்து அரசின் சொத்தாகத்தான் இருக்கிறது.
லண்டன் நகரில் உள்ள லண்டன் டவரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற நவம்பர் மாதம் வரை நடைபெறுகிற புதிய ஆபரணக் கண்காட்சியில் இந்த வைரம் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்தியா சொந்தம் கொண்டாடுகிற வைரத்துக்கு, இது வெளிப்படையான அங்கீகாரமாக அமைகிறது.
கோஹினூர் வைரம் மட்டுமின்றி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆபரணங்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இதுபற்றி லண்டன் டவரின் உறைவிட கவர்னர் ஆண்ட்ரூ ஜாக்சன் கூறும்போது, "மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து இந்த புதிய ஜூவல் ஹவுஸ் கண்காட்சியைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆபரணக் கண்காட்சி, வரலாற்றை முன் எப்போதையும் விட விரிவாக ஆராய்கிறது" என தெரிவித்தார்.
- பிரிட்டிஷ் படையெடுப்பின்போது கிழக்கிந்திய கம்பெனியால் வைரம் திருடப்பட்டு பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டது.
- ராணி இரண்டாம் எலிசபெத் காலமான நிலையில், கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் புதிய ராணியான கமிலா வசம் செல்லும்.
சென்னை:
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைந்துள்ள நிலையில், அவரது கிரீடத்தை அலங்கரித்த இந்தியாவின் கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பித்தர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வலுத்து வருகிறது.
உலகின் மிகச்சிறந்த வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம் இந்தியாவில் வெட்டப்பட்டு, பல நூற்றாண்டுகளாக ஒரு ஆளும் வம்சத்திலிருந்து மற்றொரு வம்சத்திற்கு சென்றது. இந்த வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. அவர் கோகினூர் வைரத்தை அவரது கிரீடத்தில் பதித்திருந்தார். பின்னர் அவரது மகன் திலிப் சிங்கிடம் 1839 ஆம் ஆண்டு சென்றது. 1849 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பில் அந்த வைரம் திருடப்பட்டு பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டது. மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது இந்த வைரம் பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது.
பலமுறை இந்திய அரசு முயற்சி செய்தும் இந்த வைரத்தை திரும்ப பெற முடியவில்லை. தற்போது பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தும் காலமான நிலையில், கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம் அரச வழக்கப்படி புதிய ராணியான கமிலா வசம் செல்லும்.
இந்நிலையில் கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட இந்த கிரீடத்தை எலிசபெத்தின் மறைவுக்கு பிறகாவது இந்தியாவிற்கு திருப்பித் தர வேண்டும் என டுவிட்டரில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வைரத்தை இப்போது எளிதாக திரும்பப் பெறுவது எப்படி? என்பது குறித்து சிலர் மீம்ஸ்களையும் பகிர்ந்துள்ளனர்.
புகழ்பெற்ற கோஹினூர் வைரம், 14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது. அது, 108 காரட் கொண்டது. அளவில் மிகப்பெரியது. எந்த நிறமும் இல்லாதது. அதன் மதிப்பு 20 கோடி டாலர் (ரூ.1,480 கோடி) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அந்த வைரம், ஆங்கிலேயர்கள் கைக்கு சென்றது. தற்போது, இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கோஹினூர் வைரத்துக்கு இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், அந்த வைரம் இங்கிலாந்திடம் சென்றது எப்படி? என்று பிரதமர் அலுவலகம் தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரோகித் சபர்வால் என்பவர் விண்ணப்பித்தார். அதற்கு இந்திய தொல்லியல் துறை பதில் அளித்துள்ளது.
அதில், “டெல்லியில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் உள்ள ஆவணங்களின்படி, டல்ஹவுசி பிரபுவுக்கும், லாகூர் மகாராஜா துலீப் சிங்குக்கும் இடையே 1849-ம் ஆண்டு லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இங்கிலாந்து ராணியிடம் மகாராஜா கோஹினூர் வைரத்தை ஒப்படைத்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப்பை ஆண்ட மன்னரின் வாரிசுகள், கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணிக்கு பரிசாக அளித்ததாக கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. ஆனால், அதற்கு முரணாக, தொல்லியல் துறை இந்த தகவலை அளித்துள்ளது. #KohinoorDiamond #MaharajaLahore #British #ASI
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்