search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kollemcode thookam"

    • 1,352 குழந்தைகள் தூக்க நேர்ச்சையில் பங்கேற்றனர்.
    • இந்த வழிபாடு நள்ளிரவு வரை நடைபெறும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில்.

    இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர நாளில் தூக்கத் திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான தூக்கத் திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

    தொடர்ந்து நாள் தோறும் கணபதி ஹோமம், பாராயணம், சமய சொற்பொழிவு, நமஸ்காரம், அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.

    9-ம் நாளான நேற்று தூக்கக்காரர்கள் பிரதான பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி, பஞ்சகவ்ய முழுக்கல், கடல் பூஜை செய்து விட்டு கோவிலை அடைந்து நமஸ்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு தூக்க வில்லின் வெள்ளோட்டமான வண்டியோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவின் சிறப்பு நிகழ்வான தூக்க நேர்ச்சை இன்று (சனிக்கிழமை) அதி காலை நடைபெற்றது. தூக்கக்காரர்கள் முட்டுக் குத்தி நமஸ்காரம் செய்தனர்.தொடர்ந்து அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். காலை 6.30 மணிக்கு தூக்க நேர்ச்சை தொடங்கியது. முதலில் 4 அம்மன் தூக்க நேர்ச்சை நடைபெற்றது.

    அதன்பிறகு குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்றது. 1,352 குழந்தைகள் தூக்க நேர்ச்சையில் பங்கேற்றனர். இந்த வழிபாடு நள்ளிரவு வரை நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு தூக்ககாரர்களின் அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தேவையானஉணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

    தூக்க நேர்ச்சை விழாவையொட்டி குமரி மாவட்டம் மற்றும் கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழக, கேரள அரசுப் போக்கு வரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வக்கீல் ராமச்சந்திரன் நாயர், செயலர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன்தம்பி, துணைத் தலைவர் சதி குமாரன் நாயர், இணைச் செயலர் பிஜூகுமார், கமிட்டி உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன்தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் ஆகியோர் செய்துள்ளனர்.

    • மொத்தம் 1,386 தூக்கம் நடைபெறும்.
    • தூக்க நேர்ச்சை 25-ந்தேதி நடக்கிறது.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி மாத மீன பரணி தூக்க திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் வழிபாடு வருகிற 25-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் தூக்கக்காரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சிறப்பு மருத்துவ குழுவினர் தூக்கக்காரர்களின் உடல் திறனை பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் வழங்கினர். தேர்வான தூக்கக்காரர்கள் நேற்று முதல் தூக்க நேர்ச்சை முடியும் வரை கோவில் வளாகத்திலேயே தங்கி இருந்து விரதம் கடைபிடிப்பார்கள்.

    இந்த ஆண்டு தூக்க நேர்ச்சை நிறைவேற்ற 1,352 குழந்தைகளின் பெயர் பதிவு செய்யபட்டுள்ளது. இதையொட்டி நேற்று நேர்ச்சை குழந்தைகளும் தூக்கக்காரர்களும் குலுக்கல் முறையில் வரிசைபடுத்தபட்டனர்.

    விழாவில் அம்மன் தூக்கம், பண்டார தூக்கம், பிடாகை தூக்கம், அரசு தூக்கம், 30 ரிசர்வ் தூக்கம் என மொத்தம் 1,386 தூக்கம் நடைபெறும்.

    நேர்ச்சை குழந்தைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட தூக்கக்காரர்களுக்கு தூக்க ரதத்தில் ஏற உடல்நலம், குடும்ப நலன் சார்ந்த இடையூறுகள் ஏற்பட்டால் ரிசர்வ் தூக்கக்காரர்கள் மூலம் அந்த நேர்ச்சை நிறைவேற்றப்படும்.

    இந்த ஆண்டு மொத்தம் 1,386 தூக்கம் உள்ளதால் ஒரு ரதத்தில் 4 பேர் வீதம் 346 முறை ரதம் கோவிலை வலம் வரும். இதனால் காலையில் தொடங்கும் தூக்க நேர்ச்சை நள்ளிரவை கடந்து நடைபெற வாய்ப்புள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சீனிவாசன் தம்பி, இணை செயலாளர் பிஜூ, துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    • தூக்க நேர்ச்சை திருவிழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மீனபரணி நாளில் தூக்கத்திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழாவின் போது குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழவும் பச்சிளம் குழந்தைகளை தூக்கவில்லில் தூக்கி நேர்ச்சைகடன் செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு பிரதான கோவிலில் இருந்து திருவிழா நடைபெறும் கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அம்மன் எழுந்தருளல் நிகழ்வு நடந்தது.

    மாலை 3 மணிக்கு அம்மன்கள் மூலக்கோவிலில் இருந்து திருவிழா கோவிலுக்கு செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு கோவில் தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி கொடியேற்றினார். பின்னர் தூக்கத்திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    விழாவை ஈரோடு திருஞானசம்பந்தர் மடம் ஆதினம் வாமதேவ சிவாலய தேசிக சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி ெதாடங்கி வைத்தார். விழாவில் கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர் தலைமை தாங்கினார். நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் பொருளாளர் சீனிவாசன் தம்பி நன்றி கூறினார்.

    கொடியேற்ற விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை திருவிழா வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், இணை செயலாளர் பிஜூ குமார், துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் சீனிவாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • இந்த திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 19-ந்தேதி தூக்கநேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தூக்க திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து வெங்கஞ்சி கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்படுகிறது. மாலை 3 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன் திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் எழுந்தருள்வார்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் தூக்க திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கு கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர் தலைமை தாங்குகிறார். கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஹரிஹர சம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள் ஆன்மிக உரையாற்றுகிறார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கிள்ளியூர் எம்.எல். ஏ. ராஜேஷ்குமார், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    19-ந் தேதி காலையில் தூக்கநேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடைபெறும். 21-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் பண்பாட்டு மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கேரள முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஜேக்கப், கேரள முன்னாள் சுகாதார துறை மந்திரி சிவகுமார், நடிகர் கரமனை சுதீர், நாகர்கோவில் இந்து கல்லூரி செயலாளரும், தாளாளருமான நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    23-ந் தேதி காலை 7.30 மணி முதல் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. 24-ந் தேதி மாலையில் வண்டியோட்டம் எனப்படும் தூக்கத்தேர் முன்னோட்டம் நடக்கிறது.

    25-ந்தேதி சனிக்கிழமை அதிகாலையில் தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம், அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், இணை செயலாளர் பிஜூ குமார், துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் சீனிவாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • தூக்க திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 25-ந்தேதி தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தூக்க திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து வெங்கஞ்சி கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்படுகிறது. மாலை 3 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன் திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் எழுந்தருள்வார்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் தூக்க திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கு கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர் தலைமை தாங்குகிறார். கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஹரிஹர சம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள் ஆன்மிக உரையாற்றுகிறார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கிள்ளியூர் எம்.எல். ஏ. ராஜேஷ்குமார், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    19-ந் தேதி காலையில் தூக்கநேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடைபெறும். 21-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் பண்பாட்டு மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கேரள முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஜேக்கப், கேரள முன்னாள் சுகாதார துறை மந்திரி சிவகுமார், நடிகர் கரமனை சுதீர், நாகர்கோவில் இந்து கல்லூரி செயலாளரும், தாளாளருமான நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    23-ந் தேதி காலை 7.30 மணி முதல் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. 24-ந் தேதி மாலையில் வண்டியோட்டம் எனப்படும் தூக்கத்தேர் முன்னோட்டம் நடக்கிறது.

    25-ந்தேதி சனிக்கிழமை அதிகாலையில் தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம், அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், இணை செயலாளர் பிஜூ குமார், துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் சீனிவாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • தூக்கத்திருவிழா 16-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிவடைகிறது.
    • சிகர நிகழ்ச்சியான தூக்கத்திருவிழா 25-ந்தேதி நடக்கிறது.

    கொல்லங்கோட்டில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒரே அம்மனுக்கு வட்டவிளை பகுதியில் மூலஸ்தான கோவலும், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் வெங்கஞ்சி பகுதியில் தூக்க திருவிழா நடைபெறும் கோவிலும் அமைந்துள்ளது.

    திருவிழா நாட்களில் அம்மன் வெங்கஞ்சி கோவிலிலும், பிற நாட்களில் மூலஸ்தான கோவிலிலும் இருந்து அருள் பாலிக்கிறார். குழந்தை இல்லாத தம்பதியர் குழந்தை வரம் வேண்டியும், குழந்தை நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும் இங்கு குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுவது கோவிலின் தனி சிறப்பு ஆகும். சுமார் 40 அடி உயரம் உள்ள 4 வில்கள் பொருத்தப்பட்ட தூக்க ரதத்தில், தூக்ககாரர்கள் 4 நேர்ச்சை குழந்தைகளுடன் கோவிலை வலம் வந்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றுகிறார்கள்.

    இந்த விழாவில் கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான தூக்கத்திருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதுதொடர்பாக வட்டவிளை ஸ்ரீதேவி ஆடிட்டோரியத்தில் கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 16-ந்தேதி தூக்கத்திருவிழா தொடங்கி 25-ந்தேதி முடிவடைகிறது. விழாவின் முதல் நாள் மாலையில் கொடியேற்று நிகழ்ச்சியை தொடர்ந்து கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகான் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திருவிழாவை தொடங்கி வைக்கிறார். இதில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள், குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார்(கிள்ளியூர் தொகுதி), நயினார் நாகேந்திரன்(நெல்லை தொகுதி), கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தூக்கத்திருவிழா 25-ந்தேதி நடக்கிறது. இதற்கான முன்பதிவு தேவஸ்தான அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதுவரை 700 பேர் தூக்க நேர்ச்சைக்கு முன்பதிவு செய்துள்ளனர். சுமார் 1200 குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் செயலாளர் மோகன்குமார், இணை செயலாளர் பிஜூகுமார், துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி மற்றும் கம்மிட்டி உறுப்பினர்கள் சஜி குமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தூக்க திருவிழா 16-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • தூக்க நேர்ச்சை வருகிற 25-ந்தேதி நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் மீன பரணி தூக்க திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தூக்க நேர்ச்சை வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி திருவிழா நடக்கும் கோவிலான வெங்கஞ்சி கோவிலில் நேற்று காலையில் பந்தல்கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கான ஏற்பாட்டுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×