என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kovilpatti"
- வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு சக கைதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவர் தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை சிறைக் காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயக்குமார் இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் கார்த்திகை பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
- அம்பாள் குருநாதர் மற்றும் உற்சவர் அம்பாள் குருநாதருக்கு தீபங்கள் ஏற்றி சோடனை தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் கார்த்திகை பவுர்ணமி பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரட்சை பூஜை நடைபெற்றது. 4.35 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் உற்சவர் அம்பாள் குருநாதருக்கும் 18 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம் போன்ற வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றி சோடனை தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார். இதில் மாரியப்பன், முருகன், பாலு, துவரகநாதன், மாரிஸ்வரன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.
- நேற்று முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர்.
- நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனி பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது65). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி இறந்துவிட்டதால் முத்துலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கொலை
இந்நிலையில் நேற்று முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. ஆனால் ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டின் பின்வாசலில் முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நகைகள் கொள்ளை
முத்துலட்சுமி கழுத்தில் வெட்டப்பட்டும், 2 விரல்கள் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கழுத்தில் அணிந்தி ருந்த 3 பவுன் நகை, அவர் விரலில் அணிந்திருந்த மோதிரம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
எனவே நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றதா ? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பக்கத்து வீடுகளிலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இதனையொட்டி வெற்றி விநாயகர்,சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரி யம்மன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சுவாமி செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்த னர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.
- முத்துமாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.
- பூஜையையொட்டி பக்தர்கள் தடியங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் தடியங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- தொடர்ந்து வெற்றி விநாயகர், சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர், முத்துமணி சங்கர் ஆகியோர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவண நாதசாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நேற்று 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படி தாரர்கள் சார்பில் காலையிலும் தினமும் மாலையிலும் அம்பாள் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நேற்று 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜ குரு, இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சண்முக ராஜ், திருப்பதி ராஜா, நிருத்திய லட்சுமி, ரவீந்தி ரன் மற்றும் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன்பொருளாளர் தங்க மாரியப்பன், முன்னாள் சங்கத் தலைவர்கள் பூவலிங்கம், முன்னாள் செயலாளர்கள் பழனிக்குமார், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பரமசிவம், முன்னாள் பொருளாளர் கருப்பசாமி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
இன்று 10-ம் திருநாளை முன்னிட்டு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் காலையிலும், அம்பாள் திரு வீதியில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 11-ம் திருநாளான நாளை பகல் 1மணிக்கு மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் மண்டகப்படி தரார்கள் சார்பில் தபசு சப்பரத்தில் அம்மன் த பசுக்கு எழுந்தருளல், இரவு 6 மணிக்கு ராமலிங்கம், குடும்பத்தினர் சார்பில் சுவாமி ரிஷப வாகனத்தில் புவன நாதராக அம்மனுக்கு காட்சி கொடுத்த நிகழ்ச்சி நடைபெறு கிறது.
9-ந் தேதி (வியாழக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறு கிறது. அதனை முன்னிட்டு காலையில் அம்மன் பல் ல க் கி ல் அம்மன் திருவீதி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் ஆவுடையப்பன் செட்டியார் குடும்பத்தினர் சார்பில் நடைபெற உள்ளது. அதனை அடுத்து சுவாமி அம்பாள் பட்டினப்பிரவேசம் நடைபெறும்.
திருக்கல்யாணம் முடிந்த வுடன் செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள காயத்ரி மண்ட பத்தில் பிராமண மகாசபை சார்பாக அன்னதானம் நடைபெற உள்ளது.
- கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
- இதனையொட்டி வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீ வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.பூஜைகளை சுப்ரமணிய ஐயர் செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.
- இன்று முதல் அடுத்த மாதம் 9-ந்தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது.
- 9-ம் நாளான அடுத்த மாதம் 6-ந்தேதி (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு மண்டகப்படி தாரர்களான வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசி திருக் கல்யாண திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பா ளுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. அதனை தொடர்ந்து அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்குப் பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
இதில் கோவில்பட்டி நக ராட்சி தலைவர் கருணா நிதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜ குரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா,ரவீந்திரன், சண்முக ராஜ், நித்திய லட்சுமி, கோ வில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், மாவட்ட அறங்காவலர் குழு இந்துமதி கவுதமன் மற்றும் அனைத்து மண்டபப்படி தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இன்று முதல் அடுத்த மாதம் 9-ந்தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை என செண்பகவல்லி அம்பாள் பல்வேறு வாக னங்களில் எழுந்தருளி திருவீதி யுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 9-ம் நாளான அடுத்த மாதம் 6-ந்தேதி (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு 9-ம் திருநாள் மண்டகப்படி தாரர்களான வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற உள்ளது. 8-ந்தேதி ( புதன்கிழமை) பகல் 1 மணிக்கு அம்பாள் தவசு மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் பூவன நாதராக அம்பாளுக்கு காட்சி கொடுத்தல், 9-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டின ப்பிரவேசம் நடைபெறும்.
- சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
- விழாவில், 596 மாணவர்களுக்கு இளநிலை பொறியியல் பட்டங்கள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியின் 35-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கி னார். செயலாளர் சி.சங்கர நாராயணன், தாளாளர் கே.ஆர்.அருணாசலம், தொழிலதிபர் சி.ராமசாமி, இயக்குநர் எஸ்.சண்முக வேல் மற்றும் முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தி கல்லூரியின் சிறப்பு அம்சங்களை விவரித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர் பட்ட தாரிகளை வாழ்த்தி தனது உரையை துவங்கினார், அவர் தமது உரையில் பட்ட தாரிகள் பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவை பெறவேண்டும் என்றும் அவற்றின் முக்கி யத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.
மாணவ தொழில்முனை வோர்கள் நிதி ஆயோக் போன்ற அரசாங்க திட்டத்தின் மூலம் நிதி ஆதரவை பெற்று சிறந்த தொழில்முனைவோராக வேண்டும் என்றும், அவர்கள் இந்தியாவில் தனித்துவமான, புதுமை யான தயாரிப்புகளை உரு வாக்க வேண்டும் என்றும், நன்கு வரையறுக்கப்பட்ட வணிகத் திட்டங்களே வெற்றிக்கான பாதைகளாக அமையும் என்றும் அறிவுறுத்திக் கூறினார்.
விழாவில், 596 மாணவர்க ளுக்கு இளநிலை பொறியியல் பட்டங்களையும், 24 மாணவர்களுக்கு முதுநிலை பொறியியல் பட்டங்களை யும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
மேலும், பட்டம் பெற்றவர்களில் 41 இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்கள் தன்னாட்சி தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற வர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், பட்டதாரி கள் அனைவரும் பட்ட மளிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரி யர் ஏ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியியல் கல்லூரி முதல்வர் எஸ்.மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரது வழிகாட்டு தலின்படி ஒருங்கிணைப்பா ளர்கள் பேராசிரியர் டி.வெங்கட்குமார், உதவிப் பேராசிரியர் எ.ஆண்ட்ரூஸ், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
- குரு சித்தர் பீடத்தில் ஐப்பசி பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- ஆத்ம லிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் ஐப்பசி பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆத்ம லிங்கத்திற்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம் வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்திருந்தனர்.
இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், முருகன், மணி, விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், பூமாலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.
- கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் “வாக்களிப்பதன் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் சுவர் இதழ் போட்டி நடைபெற்றது.
- முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாணவ, மாணவி களிடம் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "வாக்களிப்பதன் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் சுவர் இதழ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். போட்டியில் 55 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் 3-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் பிரசாந்த் முதலிடமும், இயந்திரவியல் துறை மாணவர் விஸ்வாமணி 2-ம் இடமும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர் சின்னத்தம்பி 3-ம் இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. ஆர். அருணாசலம், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை விரிவுரையாளர் பாலமுருகன், இயந்திரவியல் துறை விரிவுரையாளர் வையண பிரகாஷ் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்