search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land occupation"

    • துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவு
    • அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி பத்திரம் மூலம் நிலங்கள் அபகரிப்பு தொடர்கிறது.

    அரசுக்கு சொந்தமான இடங்கள், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

    அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் புதுவை அரசின் அனைத்து துறை அலுவலர்களுக்கும், தலைமை செயலரின் சிறப்பு பணி அலுவலர் பங்கஜ்குமார் ஜா ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து துறை தலைவர்களும் தங்கள் துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு நிலங்களின் இருப்பு விபரங்கள், ஆக்கிரமிப்பு இருந்தால் அதன் விபரங்களை அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகியவற்றை திட்டம், ஆராய்ச்சித்துறை பரிந்துரைத்த விண்ணப் பத்தில் சமர்பிக்க வேண்டும். தேவையான விபரங்களை வரும் 13 தேதிக்குள் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை விருகம்பாக்கத்தில் பிரபல கர்நாடக இசை கலைஞர் சீர்காழி சிவசிதம்பரத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    பிரபல கர்நாடக இசை கலைஞர் சீர்காழி சிவசிதம்பரம். இவருக்கு விருகம்பாக்கம் இளங்கோ நகர் மெயின் ரோட்டில் சொந்தமாக இடம் உள்ளது.

    இதில் சிறிய ஓடு போட்ட வீடு உண்டு. இந்த வீட்டில் கடந்த ஒரு வருடமாக சினிமா உதவி இயக்குநர் முத்து பெருமாள் (வயது28) மற்றும் கோயம்பேடு மார்கெட்டில் வேலை பார்த்து வரும் சிவா (29) ஆகிய இருவரும் தங்கி இருந்தனர்.

    சீர்காழி சிவசிதம்பரம் தனது இடத்தை காலி செய்து தரும்படி பலமுறை கூறியும் காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    நேற்று இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்துடன் முத்துபெருமாள், சிவா ஆகியோர் அங்கு ஆட்களை திரட்டி வைத்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து காவலாளி ராஜா, சீர்காழி சிவசிதம்பரத்திற்கு தகவல் தெரிவித்தார். விருகம்பாக்கம் போலீசில் சீர்காழி சிவசிதம்பரம் புகார் அளித்தார்.

    வடபழனி உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட முத்துபெருமாள், சிவா அவரது நண்பர்களான ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த உதவி இயக்குநர் ராஜா என்கிற ராஜ்குமார், நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வீரய்யா, எம்.ஜி.ஆர். நகர் சூளைபள்ளம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் சவுந்தர் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலம் தொடர்பாக முருகானந்தம் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம் இடையே கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இந்த இடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபை குற்றம் சாட்டி உள்ளது.
    மதுரை:

    தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமானோர் தானமாக நிலங்களை வழங்கியுள்ளனர். கோவில் நிர்வாகத்தின் மெத்தனத்தால் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

    மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் எதிரே சுமார் 50 ஏக்கர் நிலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுப்பையா என்பவரால் தானமாக வழங்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி ஆகும்.

    இந்த நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெயர் மாற்றம் செய்து பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பே கோவில் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் சொத்துக்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதே போல் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனை மீட்க வேண்டும்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×