search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land surveying"

    • ஓமலூர் நகரை சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா நதி ஓடுகிறது.
    • கிழக்கு சரபங்கா நதிக்கரையை ஒட்டிஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை சரபங்கா விநாயகர் கோவில் உள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் நகரை சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா நதி ஓடுகிறது. இதில், கிழக்கு சரபங்கா நதிக்கரையை ஒட்டிஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை சரபங்கா விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டிடம் இல்லாமல் வெட்ட வெளியாக திறந்தவெளிகோவிலாக உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக, கோவிலை சுற்றிலும் சுமார் 70 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கோவிலில் பூஜை செய்து பராமரித்து வந்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் காலத்திற்கு பிறகு கோவிலை பராமரிக்க வில்லை, நிலத்தையும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

    இந்தநிலையில், கோவில் நிலத்தை ஒருசிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிலம் அளவீடு செய்யும் தாசில்தார் பாலாஜி, ஓமலூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், ஓமலூர் வருவாய்துறை நில அளவர்கள், இந்துசமய அறநிலையத்துறை நில அளவீடு செய்யும் அலுவலர்கள் வந்து, கோவில் நிலத்தை நேரடியாக அளவீடு செய்தனர். கோவில் நிலத்தில் உள்ள வீடுகளையும் அளவீடு செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
    • குரங்கன் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக கொம்பனை புதூர் முதல் தேவம்பாளையம் காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு நில அளவை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    கொடுமுடி:

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், நபார்டு கடனுதவியுடன் ரூ.38 கோடியே 72 லட்சம் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 23-ந் தேதி தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த கொள த்துப்பாளையம் கிராமம் கொம்பனைபுதூரில் உள்ள குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்ய ப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உடனடியாக மேற்படி இடத்தை சர்வே செய்து நடவடிக்கை எடுக்கும் படி கடந்த 28.6.22 அன்று தீர்ப்பு வழங்கியது.

    அதன் பேரில் கொடு முடி தாசில்தார் மாசிலா மணி தலைமையில் பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் ஜெயப்பிரகாஷ் முன்னி லையில் குரங்கன் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக கொம்பனை புதூர் முதல் தேவம்பாளையம் காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு நில அளவை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    நிலஅளவையின் போது கிளாம்பாடி பிர்க்கா நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் கொளத்துப்பாளையம் சுசீலா, கொளாநல்லி பிரகாஷ், ஊஞ்சலூர் ரமேஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×