search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Landlord"

    • ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
    • சங்க கட்டிட திறப்பு விழாவில் தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன் பிறந்த நாள் விழா மற்றும் சங்கத்துக்காக சொந்தமாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி டாக்டர் வி.என்.கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சொந்தமாக நிலம் வாங்குவதற்கும், விற்பதற்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள். கூலி நிலத்தரகர் தொழிலாளர்கள் அவர்களுக்கு கமிஷன் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    ரியல் எஸ்டேட் தொழிலாளால் அரசுக்கும் வருமானம் வருகிறது. வேறு தொழிலாளர்கள் அமைப்பிற்கு அரசு அங்கீகாரம் கொடுத்து உள்ளது. அதுபோல் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

    தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பல நல்ல திட்டங்களை செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளம் கொண்டு கூலி நிலத்தரகர்கள் தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நாளை மறுநாள் நடைபெறும் சங்க கட்டிட திறப்பு விழாவில் தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • திருச்சி சாலை ெரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்றபோது மா்ம நபா்கள் குமரேசன் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் - திருச்சி சாலை ஜெய்நகரைச் சோ்ந்தவா் குமரேசன் (வயது 48). இவர் நிலத்தரகா் தொழில் செய்து வந்தாா்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எம்ஜிஆா் நகா் அருகே உள்ள அரசு மதுக் கடையில் நண்பா்களுடன் மது குடித்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

    திருச்சி சாலை ெரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்றபோது மா்ம நபா்கள் குமரேசன் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    காரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமரேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாா்.

    இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவம் என்ன காரணத்திற்காக நடந்தது? என தெரியவில்லை. குமரேசனை கொலை செய்தவா்கள் அவருடன் காரில் சென்றவா்களா? அல்லது வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று கொலை செய்தாா்களா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறாா்.

    கொலையாளிகளை கண்டுபிடிக்க நாமக்கல் டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.காமிராகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் விவசாயியை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை அளித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கோபி:

    கோபி அருகே உள்ள செம்மாம்பாளையம் வெள்ளியங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி.

    இவருக்கும் அவரது உறவினரான அவினாசி தாலுகா குட்டகத்தை சேர்ந்த சதீஸ்குமாருக்கும் (வயது 26) இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    கடந்த 20-11-2017 அன்று தனது தோட்டத்து வீட்டில் பழனிச்சாமி தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது சதீஸ்குமார் அங்கு வந்தார்.

    அவர் பழனிச்சாமியிடம் நிலம் தொடர்பான தகராறில் ஈடுபட்டார். பின்னர் அரிவாளால் பழனிச்சாமியை வெட்டினார். தடுக்க வந்த பழனிச்சாமியின் மகள் துரைசாமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதில் பழனிச்சாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக வரப்பாளையம் போலீசார் சதீஸ்குமாரை கைது செய்த கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் இன்று நீதிபதி மணி தீர்ப்பு கூறினார். பழனிச்சாமியை கொலை செய்த வழக்கில் சதீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனகோட்டி ராம் ஆஜராகி வாதாடினார். #tamilnews
    ×