search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liberation Leopards"

    • கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

    கடலூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் இனக் கலவரத்தில், 2 பழங்குடியின சமுதாயப் பெண்களை நிர்வாண மாக்கி, கற்பழித்ததை கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை உடனடியாக கலைத்திட வேண்டுமென வலியுறுத்தியும், மங்கலம்பேட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் சார்பில், மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கடசி நகர செயலாளர் அம்பேத் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய குடியரசு கட்சியின் மாநில முன்னாள் இணைப் பொதுச்செயலாளர் மங்காபிள்ளை,விடுதலை சிறுத்தைகள் சமூக ஊடக மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார், தி.மு.க.நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட தி.மு.க.பிரதிநிதி குழந்தை சுதந்திரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ந கர துணைச் செயலாளர் தனக்குமார், ம.தி.மு.க.பிரமுகர் விக்னேஷ், விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் அறிவழகன், மக்கள் அதிகாரம் அமைப்பு பிரமுகர் மணிவாசகன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவக்குமார், வக்கீல் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு, மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    • வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கருக்கட்டான்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு பொதுமக்கள் இந்த பகுதிக்கு கழிவறை வேண்டி பலமுறை நகராட்சியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் இன்குலாப், நகர செயலாளர் விடுதலை மாரி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தொகுதி அமைப்பாளர் கோ.சின்னான், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, நிர்வாகிகள் பெரியசாமி, ராமன், பண்ணை பாண்டியன், மகளிரணி பாண்டீஸ்வரி மற்றும் பலர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் டி.எஸ்.பி. நல்லு, நகராட்சி மேலாளர் சாந்தி, வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ×