search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Library building"

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
    • இந்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதி

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் மாவட்ட கிளை நூலகம் உள்ளது இந்த நூலகத்தின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும் மேற்கூறையில் உடைந்து விழுவதாகவும் பொதுமக்களும், வாசகர்களும் தொடர்ந்து புகார்களை கூறி வந்தனர்.

    வாணியம்பாடி செந்தில்குமார் எம்.எல்.ஏ. நூலகத்திற்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு இருந்த வாசகர்களிடம் குறை களையும் கேட்டு அறிந்தார்.

    இங்கு புதியதாக கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு இந்த ஆண்டு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.

    • தொண்டியில் பழுதடைந்த நூலக கட்டிடத்தை புனரமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
    • சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் வேறு வாடகை கட்டத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் சத்திரம் தெரு பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு நூலக துறை சார்பில் பொது நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகளின் வாசிக்கும் திறன் அதிகரித்தது.

    அதன் பின்னர் இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து விட்டது. சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் வேறு வாடகை கட்டத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது. அந்த கட்டிடத்தையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

    எனவே தற்போது தொண்டி-மதுரை சாலையில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒரு வகுப்பறைக் கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.

    பள்ளி கட்டிடத்திற்குள் இயங்குவதால் இங்கு பொதுமக்கள் சென்று பயன்படுத்த முடியவில்லை. இதனால் இந்தப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் தொண்டி யில் உள்ள பழுதடைந்த நூலக கட்டிடத்தை இடிக்க வும், அதே இடத்தில் புதிதாக பொது நூலகம் கட்டவும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி கள் கிருஷ்ணகுமார், விஜயக்குமார் அமர்வு விசா ரித்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.

    இதன் மூலம் தமிழகம் முழு வதும் உள்ள நூலகத்தின் நிலை என்ன? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் தொண்டி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பொது நூலக கட்டிடம் புனரமைக்கப்படும் எனவும், கைபேசியின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிக்கும் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, ஒப்பந்ததாரர் முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, ராமதாஸ், விஜயக்குமார், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கோபி, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், வட்டசெயலாளர் அருண்குமார் தங்கவேலு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×